For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

முதல்ல உங்களை துரத்தணும்யா.. கவாஸ்கர் ஆவேசம்

மும்பை: இந்திய கிரிக்கெட் உலகமே இரண்டாக பிளந்து நிற்கிறது. கோஹ்லி - கும்ப்ளே விவகாரத்தில் கும்ப்ளே ஆதரவு குரல்கள் வலுத்து வருகின்றன. கவாஸ்கரும் கும்ப்ளேவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.

கேப்டன் கோஹ்லிக்கு தன்னைப் பிடிக்கவில்லை. எனவே விலகுகிறேன் என்று கூறி விட்டுப் போய் விட்டார் தலைமைப் பயிற்சியாளர் அனில் கும்ப்ளே.

கும்ப்ளே விலகல் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கும்ப்ளே போன்றவருடன் கூடவா கோஹ்லி போன்றோருக்கு ஒத்துப் போக முடியவில்லை என்று அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிலையில் சுனில் கவாஸ்கர் கோஹ்லி மற்றும் இந்திய அணியை விமர்சித்துள்ளார்.

மோசமான நாள்

மோசமான நாள்

கோஹ்லிக்கும், கும்ப்ளேவுக்கும் என்ன பிரச்சினை என்பது எனக்குத் தெரியாது. ஆனால் இந்திய கிரிக்கெட்டுக்கு இது நிச்சயம் மோசமான நாள்.

மென்மையாக இருந்தால் போதும்

மென்மையாக இருந்தால் போதும்

உங்களைப் பொறுத்தவரை உங்களை எதுவும் சொல்லாத, நீங்கள் சொல்வதை மட்டுமே கேட்கும் நபர்தான் கோச்சாக வேண்டும். அப்படிப்பட்டவரைத்தான் நீங்கள் விரும்புகிறீர்கள்.

ஜாலியா இருங்கன்னு சொன்னா போதும்

ஜாலியா இருங்கன்னு சொன்னா போதும்

இன்று பிராக்டிஸ் கிடையாது. போய் எல்லோரும் ஜாலியா இருங்க. ஷாப்பிங் போங்க என்று கூறும் பயிற்சியாளரைத்தான் உங்களுக்குப் பிடிக்கும், அவரைத்தான் நீங்கள் விரும்புவீர்கள். அந்த மாதிரியான நபர்தான் உங்களுக்குத் தேவை.

ரிசல்ட் காட்டச் சொன்னால் கோபம் வரும்

ரிசல்ட் காட்டச் சொன்னால் கோபம் வரும்

கும்ப்ளே போன்ற ரிசல்ட்டை எதிர்பார்க்கக் கூடிய, சீரியஸான, டாஸ்க்மாஸ்டரை உங்களுக்குப் பிடிக்காது. அதுபோன்றவர்களை நீங்கள் விரும்ப மாட்டீர்கள்.

முதல்ல நீங்க வெளியே போங்க

முதல்ல நீங்க வெளியே போங்க

என்னைப் பொறுத்தவரை, யாரெல்லாம் புகார் கூறுகிறார்களோ, யாரெல்லாம் குற்றம் சாட்டுகிறார்களோ முதலில் அவர்கள்தான் அணியை விட்டு வெளியே போக வேண்டும். அவர்களைத்தான் முதலில் வெளியேற்ற வேண்டும்.

அருமையான கோச்

அருமையான கோச்

உண்மையில் கும்ப்ளே தலைமையில் இந்தியா அருமையான வெற்றிகளைப் பெற்றுள்ளது. எல்லாவற்றிலும் வெற்றி பெற்றுள்ளது. அவர் பெரிதாக எந்தத் தவறையும் செய்ததாக நான் உணரவில்லை. எல்லா அணியிலும்தான் கருத்து வேறுபாடு வரும். ஆனால் முடிவுகள்தான் முக்கியம். அதுதான் தேவை என்று கூறியுள்ளார் கவாஸ்கர்.

Story first published: Thursday, June 22, 2017, 10:51 [IST]
Other articles published on Jun 22, 2017
English summary
Veteran Sunil Gavaskar has slammed Kohli led Team India and has expressed his support to Kumble.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X