For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்களைக் குவித்து கெய்ல் - சாமுவேல்ஸ் ஜோடி உலக சாதனை!

By Mathi

கான்பெரா: சர்வதேச ஒருநாள் போட்டிகளில் மிக அதிகபட்ச ரன்களைக் குவித்த ஜோடி என்ற சரித்திரத்தைப் படைத்துள்ளனர் மேற்கிந்திய தீவுகள் அணியின் கிறிஸ் கெய்ல் மற்றும் சாமுவேல்ஸ்.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஜிம்பாப்வேவுக்கு எதிரான ஆட்டத்தில் கிறிஸ் கெய்ல் - சாமுவேல்ஸ் ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 372 ரன் குவித்து உலக சாதனை படைத்தது.

Gayle, Samuels amass highest ODI partnership,

இதற்கு முன்பு சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இந்தியாவின் டெண்டுல்கர் - டிராவிட் ஜோடி 1999 ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் நடைபெற்ற போட்டியில் 331 ரன்களைக் குவித்திருந்ததே சாதனையாகும்.

தற்போது கெய்ல் - சாமுவேல்ஸ் ஜோடி இந்த சாதனையை முறியடித்து 372 ரன்கள் குவித்து உலக சாதனை படைத்துள்ளனர்.

மேலும் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய வீரர் ரோகித் சர்மா, தென் ஆப்பிரிக்க வீரர் டிவில்லியர்ஸ் ஆகிய இருவரும் தலா 16 சிக்சர்கள் அடித்து அதிக சிக்சர் அடித்தவர்களில் முதலிடத்தில் உள்ளனர்.

இன்றைய போட்டியில் கிறிஸ் கெய்லும் 16 சிக்சர் அடித்து அவர்களது சாதனையை சமன் செய்தார்.

Story first published: Tuesday, February 24, 2015, 14:30 [IST]
Other articles published on Feb 24, 2015
English summary
Chris Gayle and Marlon Samuels entered the record books by hitting the highest-ever partnership in One-Day International (ODI) cricket by amassing a 372-run stand for the second wicket against Zimbabwe in match 15 of the ICC Cricket World Cup 2015 at Manuka Oval in Canberra on Tuesday.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X