For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்தியாவே எங்களைப் பார்த்துக் கத்துக்கோ... தென் ஆப்பிரிக்க ரசிகர்கள் அதிரடி!

ஜோஹன்னஸ்பர்க்: நியூசிலாந்துடன் நடந்த உலகக் கோப்பை அரை இறுதிப் போட்டியில் மிகக் கடுமையாக கடைசி வரை போராடி தீரமாக வீழ்ந்த தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி தற்போது தாயகம் திரும்பியுள்ளது.

ஜோஹன்னஸ்பர்க் விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்த அணியினருக்கு திரளான ரசிகர்கள் கூடி நின்று வாழ்த்தியும், பாராட்டியும் வரவேற்பு கொடுத்தனர்.

மேலும் கேப்டன் ஏப் டி வில்லியர்ஸ் உள்ளிட்ட வீரர்களுடன் அவர்கள் போட்டோவும் எடுத்துக் கொண்டனர்.

ஜோஹன்னஸ்பர்க் விமான நிலையத்தில்

ஜோஹன்னஸ்பர்க் விமான நிலையத்தில்

ஜோஹன்னஸ்பர்க் ஆர் டாம்போ சர்வதேச விமான நிலையத்திற்கு இன்று அதிகாலை 4 மணியளவில் தென் ஆப்பிரிக்க அணி வந்து சேர்ந்தபோது அங்கு திரளாக கூடியிருந்த ரசிகர்கள் வீரர்களை உற்சாகமாக வரவேற்றனர்.

வீரர்களம் ரசிகர்களும்

வீரர்களம் ரசிகர்களும்

வீரர்களும் ரசிகர்களிடம் இயல்பாக அளவளாவி கலந்துரையாடினர்.

ரசிகர்கள் ஆர்வம்...

ரசிகர்கள் ஆர்வம்...

கேப்டன் டிவில்லியர்ஸ், பாப் டு பிளஸ்ஸிஸ், பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின், ஹாட்ரிக் விக்கெட் எடுத்த ஜேபி டுமினி உள்ளிட்டோருடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள ரசிகர்கள் பெரும் ஆர்வம் காட்டினர்.

பேஸ்புக் பக்கத்தில்...

பேஸ்புக் பக்கத்தில்...

இந்த வரவேற்பு குறித்து தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் சங்கம் தனது பேஸ்புக் பக்கத்தில் படங்கள் போட்டுள்ளது.

அட்வைஸ்...

அட்வைஸ்...

அந்தப் புகைப்படங்களைப் பார்த்த பலர், தென் ஆப்பிரிக்க ரசிகர்கள் எவ்வளவு ஜென்டிலாக நடந்து கொண்டனர்,

அதேபோல பிற நாட்டு ரசிகர்களும், குறிப்பாக இந்திய ரசிகர்கள் நடந்து கொள்ள வேண்டும் என்று அட்வைஸ் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பதிலடி...

பதிலடி...

தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவிடம் தோற்றதை வைத்து இந்தியாவில் ரசிகர்கள் விதம் விதமாக அதைக் கிண்டலடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கேலியைச் சுட்டிக் காட்டி

கேலியைச் சுட்டிக் காட்டி

அதைத்தான் இவ்வாறு தென் ஆப்பிரிக்க ரசிகர்கள் குறிப்பிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, March 27, 2015, 14:36 [IST]
Other articles published on Mar 27, 2015
English summary
The South African fans gave a grand welcome to their cricket players who returned from Australia.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X