For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டோணி சொதப்ப.. மெக்கல்லம், ஸ்மித் வெளுக்க.. புனே அணியை வீழ்த்தியது குஜராத் லயன்ஸ்

ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில், குஜராத் லையன்ஸ் அணி எளிதாகா வீழ்த்தியது. டோணியின் பேட்டிங் சொதப்பல் இப்போட்டியிலும் தொடர்ந்தது.
 

By Kalai Mathi

ராஜ்கோட்: ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில், குஜராத் லையன்ஸ் அணி வீழ்த்தியது.

இவ்விரு அணிகளுக்கு நடுவே ராஜ்கோட்டில் இன்று நடைபெற்ற ஐபிஎல் ஆட்டமொன்றில், முதலில் பேட்டிங் செய்த புனே அணி, 8 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்தது.

Gujarat Lions captain Suresh Raina won the toss and decided to bowl first against Rising Pune Supergiant

172 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு ஆடிய, குஜராத் லயன்ஸ், 18வது ஓவரிலேயே 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து வெற்றிப் பெற்றது. 4 போட்டிகளில் ஆடிய புனே 1ல் மட்டுமே வெற்றி பெற்று, 3ல் தோற்றுள்ளது.

முன்னதாக டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் சுரேஷ் ரெய்னா ஃபீல்டிங் தேர்வு செய்தார். புனே அணியில், கேப்டன் ஸ்மித் 43 ரன்கள், திரிபாதி 33 ரன்கள் விளாசினர். டோணி இந்த ஆட்டத்திலும் சொதப்பினார். அவர் 8 பந்துகளில் 5 ரன்கள் எடுத்து ரவீந்திர ஜடேஜா வீசிய பந்தில் எல்பிடபிள்யூவாகி வெளியேறினார்.

குஜராத் அணியில் ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் ட்வைன் ஸ்மித் 47, பிரெண்டன் மெக்கல்லம் 49 ரன்கள் குவித்தனர். சுரேஷ் ரெய்னா 35 ரன்களுடனும், ஆரோன் பிஞ்ச் 33 ரன்களுடனும் களத்தில் நின்றனர்.

Story first published: Friday, April 14, 2017, 23:39 [IST]
Other articles published on Apr 14, 2017
English summary
Gujarat Lions captain Suresh Raina won the toss and decided to bowl first against Rising Pune Supergiant in match 13 of the ongoing Indian Premier League (IPL) 2017 here on Friday (April 14).
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X