For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

2 'பயில்வான்கள்'... நாளை இறுதி மோதல்.. புதிய உலக சாம்பியன் யார்?

By Veera Kumar

மெல்போர்ன்: நியூசிலாந்து-ஆஸ்திரேலியா நடுவே உலக கோப்பை இறுதி போட்டி நாளை மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில், பலப் பரிட்சை நடத்த உள்ளன.

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில், தற்போது கிளைமாக்ஸ் கட்டம் வந்துவிட்டது. ஆம்.. நாளை ஞாயிற்றுக்கிழமை, நியூசிலாந்து-ஆஸ்திரேலியா பைனலில் மோத உள்ளன.

மெல்போர்னில், இந்திய நேரப்படி நாளை காலை 9 மணிக்கு இவ்விரு அணிகளும் மோதும் போட்டி நடைபெற உள்ளது.

7வது முறை

7வது முறை

இதில் ஆஸ்திரேலியா 7வது முறையாக பைனலுக்கு தகுதி பெற்றுள்ளது. 1975ம் ஆண்டு முதலாவது உலக கோப்பை தொடரின்போதும், அந்த அணி பைனலுக்கு தகுதி பெற்றிருந்தது. இதுவரை 6 முறை பைனலுக்கு வந்த அந்த அணி 4 முறை சாம்பியனாகியுள்ளது.

முதல் முறை

முதல் முறை

நியூசிலாந்தை பொறுத்தளவில், தற்போதுதான் முதல் முறையாக பைனலுக்குள் நுழைகிறது. இதுவரை 6 முறை அரையிறுதி வரை வந்த தகுதியான அணிதான் என்றபோதிலும், பைனலுக்குள் நுழையும் அதிருஷ்டம், மெக்கல்லம் தலைமையிலான இந்த அணிக்குதான் கிடைத்துள்ளது.

அணியின் சறுக்கல்

அணியின் சறுக்கல்

நியூசிலாந்தில், ரிச்சர்ட் ஹாட்லி, கிளேன் டர்னர், மார்டின் க்ரோவ், ஸ்டீபன் பிளமிங் போன்ற ஜாம்பவான் வீரர்கள் காலாகாலத்தில் இருந்தாலும், ஒருங்கிணைந்த அணியாக ஜொலிப்பதில் நியூசிலாந்து தவறியதன் விளைவே, உலக கோப்பையை வெல்ல முடியாததற்கு காரணம்.

பெரிய வெற்றி

பெரிய வெற்றி

2000வது ஆண்டில், நைரோபியில், இந்திய அணியை வீழ்த்தி, ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பையை வென்றதே நியூசிலாந்து கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை மிகப்பெரிய வெற்றியாக நீடித்து வருகிறது.

ஆஸ்திரேலியா அருமை

ஆஸ்திரேலியா அருமை

அதேநேரம், ஆஸ்திரேலியா, எப்போதுமே பலம் வாய்ந்த அணியாகவே இருந்து வந்துள்ளது. நடப்பு உலக கோப்பையிலும், அந்த அணி பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் ஆகிய முத்துறையிலும் திறம்பட செயல்பட்டுக் கொண்டுள்ளது.

நியூசிலாந்து தேறியுள்ளது

நியூசிலாந்து தேறியுள்ளது

அதேநேரம், மெக்கல்லம் தலைமையிலான நியூசிலாந்து பேட்டிங்கும் கலக்கலாக உள்ளது. நடப்பு உலக கோப்பையின் 8 போட்டிகளையும் வென்று சாதித்துள்ளது அந்த அணி. பவுலிங்கில் ஆஸ்திரேலியாவின் ஸ்டார்க் மற்றும் நியூசிலாந்தின் டிரென்ட் பவுல்ட் இடையே கடும் போட்டியிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சாம்பியன் vs மக்களின் சாம்பியன்

சாம்பியன் vs மக்களின் சாம்பியன்

யார் கோப்பையை வென்று உலக சாம்பியன் ஆகப்போகிறார்கள், யார் மக்களின் சாம்பியன் ஆகப்போகிறார்கள் என்பது நாளைக்கு மாலையில் தெரிந்துவிடும்.

Story first published: Saturday, March 28, 2015, 17:31 [IST]
Other articles published on Mar 28, 2015
English summary
It will be the biggest day in the history of Trans-Tasman cricketing rivalry when four-time champions Australia will be pitted against a highly committed bunch from New Zealand in the final of the cricket World Cup at the iconic MCG here tomorrow.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X