For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டோணி 'ஆப்சென்ட்' ஆகும்போது ஹர்பஜன் 'உள்ளேன் ஐயா' சொல்வதை கவனித்தீர்களா?

By Veera Kumar

மும்பை: நான்கு வருடங்களுக்கு பிறகு இந்திய ஒரு நாள் கிரிக்கெட் அணியில் ஹர்பஜன்சிங்கிற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இம்மாதம் வங்கதேசத்தில் இந்திய அணி சுற்றுப் பயணம் செய்தபோது, 2 வருடங்களுக்கு பிறகு டெஸ்ட் போட்டிகளில் ஆட ஹர்பஜனுக்கு வாய்ப்பு கிடைத்திருந்த நிலையில், தற்போது நீண்ட இடைவேளைக்கு பிறகு ஒருநாள் போட்டிகளிலும் ஆட அவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

ஆஸ்திரேலியர்களுக்கு அச்சம்

ஆஸ்திரேலியர்களுக்கு அச்சம்

இந்திய அணியின் ஜாம்பவான் சுழற்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் ஹர்பஜன்சிங். அனைவரையும் அச்சுறுத்தும் ஆஸ்திரேலிய பேட்டிங் வரிசை, ஹர்பஜனை கண்டால் நடுக்கம் கொள்ளும். ஃபேமசான ஈடன் கார்டன் டெஸ்ட் போட்டியில் லட்சுமணன் மற்றும் ராகுல் டிராவிட் ஆட்டம்தான் அனைவருக்கும் நினைவிருக்கிறது. ஆனால், அவர்களுக்கு ஈடாக ஹர்பஜன் பந்து வீச்சு ஆஸி. பேட்ஸ்மேன்களின் ரத்தம் உறிஞ்சியதை மறுக்க முடியாது.

பலே ஹர்பஜன்

பலே ஹர்பஜன்

டெஸ்ட் போட்டிகளில், இந்திய அணியின் தவிர்க்க முடியாத துருப்பு சீட்டாக உருவெடுத்தார் ஹர்பஜன்சிங். அவரின் பந்து ஸ்பின் ஆவதுடன், பவுன்சும் ஆவது வழக்கம். மட்டுமின்றி, தூஸ்ரா எனப்படும், பேட்ஸ்மேன்களை குழப்பும் பந்தை வீசுவதிலும் வல்லவர் ஹர்பஜன்சிங்.

டெஸ்ட் கிங்

டெஸ்ட் கிங்

102 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள ஹர்பஜன் 416 விக்கெட்டுகளை வீழ்த்தி வாசிம் அக்ரமை முந்தி அசத்தியுள்ளார். அதில் ஒரு இன்னிங்சில் 84 ரன்களை விட்டுக்கொடுத்து 8 விக்கெட்டுகளை வீழ்த்திய அபாரமும் அடங்கும். ஓவருக்கான சராசரி ரன் விட்டுக்கொடுக்கும் விகிதம் 2.83 மட்டுமே. ஒரு டெஸ்டில் 5 விக்கெட்டுகளை 25 முறையும், 10 விக்கெட்டுகளை 5 முறையும் சாய்த்துள்ளார் இந்த டர்பனேட்டர்.

ஒன்டேயிலும் சிக்கனம்

ஒன்டேயிலும் சிக்கனம்

ஒருநாள் போட்டிகளிலும் ஹர்பஜன் சளைத்தவர் இல்லை. 229 ஒன்டேக்களில் ஆடி 259 விக்கெட்டுகளை சாய்த்துள்ள ஹர்பஜனின் பெஸ்ட் ஆட்டம் 31 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதாகும். சராசரி ரன் விகிதம் 4.30 மட்டுமே. இதில் இருந்தே அவரது பந்தில் ரன் எடுப்பது எவ்வளவு சிரமம் என்பது தெரியும். 5 விக்கெட்டுகளை 3 முறை வீழ்த்தியுள்ளார்.

உருகுலைத்த ஐபிஎல்

உருகுலைத்த ஐபிஎல்

ஆனால், ஐபிஎல் டி20 போட்டி ஆட்டம், ஹர்பஜன் 'ரிதத்தையும்' பதம் பார்த்தது. அவசர ஆட்டத்துக்கு ஏற்ப ஸ்பின் செய்வதை குறைத்து வேகத்தை அதிகரித்தார் ஹர்பஜன். இதனால் அவரது பந்து வீச்சு நாறுநாறாக கிழிக்கப்பட்டது. அதே முறையில்தான் ஒன்டே, டெஸ்ட் போட்டிகளிலும் ஆடி, பார்ம்-அவுட் என்று முத்திரை குத்தப்பட்டு வெளியேற்றப்பட்டார் அவர்.

4 வருடங்களுக்கு பின்..

4 வருடங்களுக்கு பின்..

இந்நிலையில்தான், 4 வருடங்களுக்கு பிறகு ஹர்பஜனுக்கு ஜிம்பாப்வே சுற்றுப் பயண இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த அணிக்கு கேப்டன் ரஹானேயாகும். டோணி ரெஸ்டில் உள்ளார். அதேபோல, வங்கதேசத்துக்கு எதிராக நடந்து முடிந்த டெஸ்ட் போட்டியிலும் ஹர்பஜனுக்கு 2 வருடங்களுக்கு பிறகு வாய்ப்பு கிடைத்தது. அப்போட்டியில் 3 விக்கெட்டுகளை சாய்த்து அசத்தினார். டெஸ்ட் போட்டியிலும் டோணி இடம்பெறவில்லை. கேப்டன் கோஹ்லியாகும்.

டோணி ஆப்சென்ட்

டோணி ஆப்சென்ட்

வங்கதேச டெஸ்ட் மற்றும் ஜிம்பாப்வே ஒருநாள் தொடர்களில் ஹர்பஜன் சேர்க்கப்பட்டுள்ளார். அதேநேரம் இவ்விரு போட்டிகளிலுமே டோணி விளையாடுவதில்லை. டோணிதான் ஹர்பஜனை இந்திய அணிக்குள் சேர்க்க எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்பட்டது. ஹர்பஜனை மட்டுமல்ல, சேவாக், ஜாகீர் கான், யுவராஜ் சிங் போன்ற சீனியர்களை டோணிதான் கழித்து வைத்ததாக கிசுகிசுக்கப்படுகிறது. இந்நிலையில் டோணி இல்லாத அணியில் மட்டும் ஹர்பஜன் சேர்க்கப்படுவதும் டோணிக்கு எதிரான பிசிசிஐ நிர்வாகிகள் சிலரின் வியூகமாகவே பார்க்கப்படுகிறது.

Story first published: Monday, June 29, 2015, 15:38 [IST]
Other articles published on Jun 29, 2015
English summary
Harbhajan Singh, who made his Test comeback earlier this month, was picked to play in the limited-overs sides for the first time since he last played an ODI in 2011.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X