டெஸ்ட் கிரிக்கெட்டில் கும்ப்ளே சாதனையை சமன் செய்த ஹெராத்

Posted By:
Subscribe to Oneindia Tamil

கொழும்பு: டெஸ்ட் போட்டிகளில் இந்திய முன்னாள் வீரர் அனில்கும்ப்ளே நிகழ்த்திய ஒரு சாதனையை இலங்கை சுழற்பந்து வீச்சாளர் ரங்கனா ஹெராத் சமன் செய்தார்.

ஜிம்பாப்வே அணிக்கெதிராக கொழும்புவில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய ரங்கனா ஹெராத், இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆக ஒரு டெஸ்ட்டில் 10 விக்கெட்டுகளை அவர் வீழ்த்தினார்.

Herath equals Kumble's record of 10-wicket hauls in test cricket

மொத்தம் 132 போட்டிகளில் 8 முறை பத்து விக்கெட்டுகளை அனில் கும்ப்ளே வீழ்த்தியுள்ளார். ரங்கனா ஹெராத் 81ஆவது டெஸ்ட் போட்டியிலேயே அதை சமன் செய்துள்ளார்.

ஒட்டுமொத்தமாக டெஸ்ட் போட்டிகளில் 22 முறை பத்து விக்கெட்டுகள் வீழ்த்திய இலங்கை அணியின் முத்தையா முரளிதரன் முதலிடத்தில் உள்ளார். 10 முறை பத்து விக்கெட்டுகள் வீழ்த்தி ஆஸ்திரேலியாவின் ஷேன் வார்னே இரண்டாவது இடத்தில் உள்ளார்.

Will Anil Kumble resign as Indian cricket team coach? | Oneindia Tamil

மனத்திற்குப் பிடித்த வரன்கள் உங்கள் தமிழ் மேட்ரிமோனியில், பதிவு இலவசம்!

English summary
Herath joined Anil Kumble with eight 10-wicket hauls in Test cricket, only three players in history have more.
Please Wait while comments are loading...