For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

42 வயதும், 42 சாதனைகளும்.. கிரிக்கெட்டின் கடவுள் கடந்து வந்த சாதனை பாதை!

By Veera Kumar

சென்னை: சச்சின் டெண்டுல்கர்..இந்த பெயர்தான், எத்தனை பேரின் பால்யத்தை இனிமையாக்கியது. தொலைக்காட்சியின் முன்பு கட்டி உட்கார வைத்தது..மகிழவும், நெகிழவும், கலங்கவும் வைத்தது. இவர் அவுட் ஆகிவிடக் கூடாது என்று நாத்திகர்களை கூட கடவுளை வேண்ட வைத்தது. பெயருக்குத்தான் அணியில் 11 பேர், ஆனால், அணியின் முக்கால்வாசி வெற்றிக்கு காரணம் இந்த ஒற்றை லிட்டில் மனிதர்தான்.

உலக ஜாம்பவான் பவுலர்கள் எல்லாம் மண்டியிட்டு பணிந்த இந்த அதிரடி சாதனை நாயகன் நேற்று 42வது வயதில் காலடி எடுத்து வைத்தார். அவரது சாதனைகள் பல என்றாலும், வயதின் எண்ணிக்கைக்கு ஏற்ப 42 சாதனைகளை பட்டியலிடுகிறோம். படியுங்கள்..

டெஸ்ட்-ஒன்டே அதிக ரன்கள்

டெஸ்ட்-ஒன்டே அதிக ரன்கள்

டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள்-15921. ஒரு நாள் போட்டிகளில் அதிக ரன்கள்-18,426. அதிகப்படியாக டெஸ்ட் போட்டிகளில் ஆடியவர்-200 போட்டிகள். அதிகப்படியான ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியவர்- 463 போட்டிகள்.

செஞ்சுரி மழைகள்

செஞ்சுரி மழைகள்

ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் முதல்முறையாக 200 ரன்கள் அடித்த வீரர். சர்வதேச கிரிக்கெட்டில் 100 செஞ்சுரிகள் அடித்த ஒரே வீரர். அதிகப்படியான டெஸ்ட் செஞ்சுரிகள்-51. அதிகப்படியான ஒருநாள் செஞ்சுரிகள்-49

அதிகப்படியான ஒருநாள் கிரிக்கெட் அரை செஞ்சுரிகள்-96. ரஞ்சி கிரிக்கெட், துலிப் கிரிக்கெட் மற்றும் இரானி கிரிக்கெட் தொடர்களில் முதல் போட்டியிலேயே சதம் அடித்த ஒரே வீரர்.

உலக நாயகன்

உலக நாயகன்

உலக கோப்பைகளில் அதிக ரன் குவித்த வீரர். 6 உலக கோப்பைகளில் 2,278 ரன்கள் குவித்துள்ளார். உலக கோப்பை வரலாற்றில் 6 சதங்கள் அடித்த ஒரே வீரர். இங்கிலாந்தின் யாக்ஷையர் கவுண்டிக்காக ஆடிய ஒரே வெளிநாட்டு வீரர்.

டெஸ்ட் சாதனைகள்

டெஸ்ட் சாதனைகள்

டெஸ்ட் போட்டிகளில் 10 முறை 90 ரன்களுக்கு மேல் எடுத்து சதம் எடுக்கும் வாய்ப்பை தவறவிட்டவர். இந்த பட்டியலில் ஸ்டீவ் வாக் மற்றும் டிராவிட்டும் உள்ளனர். டெஸ்ட் போட்டிகளில் அதிக அரை சதம் விளாசியவர். மொத்தம் 68. டெஸ்ட் போட்டிகளில் அதிக பவுண்டரிகள் விளாசியவர்-2058. 195 இன்னிங்சுகளிலேயே 10 ஆயிரம் டெஸ்ட் ரன்னை கடந்தவர். லாரா, சங்ககாராவும் இப்பட்டியலில் உள்ளனர். விரைவாக 14 ஆயிரம் டெஸ்ட் ரன்கள் குவித்தவர். 279 இன்னிங்சுகளில் இந்த ரன்களை அடித்தார். 300 போட்டிகளில், 15 ஆயிரம் டெஸ்ட் ரன்கள் கடந்த வீரர்.

ஒரே வருடத்தில்

ஒரே வருடத்தில்

ஒரே வருடத்தில் அதிக ரன் குவித்த வீரர். 1998ம் ஆண்டில், 9 சதங்கள் , 7 அரை சதங்கள் உதவியுடன், 1,894 ரன்களை குவித்து சாதித்தார். 2003 உலக கோப்பை தொடரில் மொத்தம் 673 ரன்கள் குவித்தார். ஒரே உலக கோப்பை தொடரில் அதிக ரன் குவித்த வீரர் சச்சின்தான். ஒரே வருடத்தில் அதிகப்படியான ஒரு நாள் செஞ்சுரிகள் அடித்த வீரர் சச்சின்தான். 1998ல் அடிக்கப்பட்ட 9 செஞ்சுரிகள் இதற்கு சான்று. பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிராகத்தான், அதிகப்படியாக ஒருநாள் செஞ்சுரிகள் விளாசியுள்ளார் சச்சின். மொத்தம் 9 செஞ்சுரிகள் அடித்துள்ளார்.

மிகவிரைவாக 15 ஆயிரம் ரன்கள்

மிகவிரைவாக 15 ஆயிரம் ரன்கள்

ஒன்டே மேட்சுகளில் 18 முறை 90 ரன்களை கடந்த ஒரே வீரர். 10 ஆயிரம் ஒருநாள் ரன்களை கடந்த முதல் வீரர். மிகவிரைவாக அதாவது 259 இன்னிங்சுகளில் 10ஆயிரம் ரன்கள் கடந்தவர் சச்சின். 276 இன்னிங்சசுகளில் 11 ஆயிரம் ரன்களையும், 300 இன்னிங்சுகளில் 12 ஆயிரம் ரன்களையும், 321 இன்னிங்சுகளில் 13 ஆயிரம் ரன்களையும், 350 இன்னிங்சுகளில் 14 ஆயிரம் ரன்களையும், 377 இன்னிங்சுகளில் 15 ஆயிரம் ரன்களையும் கடந்தார். 15 ஆயிரம் ரன்களை கடந்து ஸ்கோர் செய்த ஒரே பேட்ஸ்மேன் சச்சின் மட்டுமே. இவருக்கு அடுத்தபடியாக இருப்பவர் இலங்கையின் மாஜி வீரர் சங்ககாரா. 14,234 ரன்களை அவர் எடுத்திருந்தார்.

டிராவிட், கங்குலியுடன் இணைந்து

டிராவிட், கங்குலியுடன் இணைந்து

1999ம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் ராகுல் டிராவிட்டுடன் சச்சின் இணைந்து 331 ரன்கள் குவித்தது, இந்திய அணியின் பார்ட்னர்ஷிப் சாதனையாகும். உலக அளவில் இது 2வது மிகப்பெரும் சாதனை. சவுரவ் கங்குலியுடன் இணைந்து, 8227 ரன்கள் குவித்துள்ளார் சச்சின். இதுதான் அதிகபட்ச பார்ட்னர்ஷிப் ரன்னாகும். அதிக செஞ்சுரிகள் அடித்த பார்ட்னர்ஷிப்பும், சச்சின்-கங்குலியுடையது. மொத்தம் 26 சதங்கள் விளாசியுள்ளனர். துவக்க ஆட்டக்காரர்களாக சச்சின்-கங்குலி களமிறங்கி பார்ட்னர்ஷிப் மூலம் மொத்தம் 6609 ரன்களை குவித்துள்ளனர். இதில் 21 சதங்கள் மற்றும் 23 அரை சதங்கள் அடங்கும்.

குறைந்த வயது கேப்டன்

குறைந்த வயது கேப்டன்

டெஸ்ட் போட்டிகளில் அதிக செஞ்சுரி அடித்த ஜோடி டெண்டுல்கர் மற்றும் டிராவிட். மொத்தம் 20 செஞ்சுரிகள் இணை மூலம் வந்தவை. தொடர்ந்து185 ஒன்டே போட்டிகளை ஓய்வின்றி ஆடிய சாதனையும் சச்சினை சேரும். இந்தியாவின் மிக இளம் வயது கேப்டன் சச்சின். 23 வயது முடிந்து 126 நாட்கள் ஆகியிருந்தபோது, 1996ல் இலங்கைக்கு எதிரான போட்டியில், சச்சின் இந்தியாவுக்கு தலைமையேற்றார்.

ஆட்டம் என்றால் இவர்தான் நாயகன்

ஆட்டம் என்றால் இவர்தான் நாயகன்

ஒருநாள் கிரிக்கெட்டில் அதிகப்படியாக மேன் ஆப் தி மேட்ச் விருது வென்ற வீரர். மொத்தம் 62 விருதுகளை குவித்துள்ளார். ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிகப்படியான தொடர் நாயகன் விருது பெற்றவரும் சச்சினே. மொத்தம் 15 தொடர்களில் இவர்தான் நாயகன். இதில் உலக கோப்பைகளும் அடங்கும்.

குறைந்த வயது

குறைந்த வயது

இந்தியாவுக்காக ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் களமிறங்கிய மிக இளம் வீரரும் சச்சின்தான். அவர் 1989ல் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் கராச்சியில் களமிறங்கியபோது, 16 வயது, 205 நாட்கள் ஆகியிருந்தது. அதே அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் களமிறங்கினார் சச்சின். அப்போது வயது 16 முடிந்து 238 நாட்கள் ஆகியிருந்தது. உபரித் தகவல், இந்தியாவின் மிக உயரிய விருதான, பாரத ரத்னா பெற்ற முதல் விளையாட்டு வீரரும் இவரே..

Story first published: Saturday, April 25, 2015, 6:25 [IST]
Other articles published on Apr 25, 2015
English summary
Batting legend Sachin Tendulkar celebrated his 42nd birthday today (April 24). The former India captain is still a fan favourite despite not playing the game. And on the social media, birthday wishes keep flowing in.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X