For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கத்துகிட்ட மொத்த வித்தையையும் இறக்கியாச்சு.. புதுசா முயற்சி செய்ய முடியாது: கோஹ்லி கறார்

By Veera Kumar

சென்னை: நான் ஏற்கனவே எனது முழு திறமையை காண்பித்துதான் ஆடிவருகிறேன்.. எனவே கூடுதல் முயற்சி எடுத்து ஆட அவசியம் இல்லை என்று இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோஹ்லி தெரிவித்தார்.

இலங்கையில் சுற்றுப் பயணம் செய்யும் இந்திய கிரிக்கெட் அணி, அங்கு ஆகஸ்ட் 12ம் தேதி தொடங்கும், 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்திய அணிக்கு கோஹ்லி கேப்டனாக செயல்படுவார்.

இந்தியா தோல்வி

இந்தியா தோல்வி

இதனிடையே சென்னையில் நடைபெற்ற இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய ஏ அணிகள் நடுவேயான அதிகாரப்பூர்வமற்ற 2வது டெஸ்ட் போட்டியில் இந்தியாவுக்காக கோஹ்லி களமிறங்கினார். முதல் இன்னிங்சில் 16 ரன்களும், இரண்டாவது இன்னிங்சில் 45 ரன்களும் மட்டுமே எடுத்த விராட் கோஹ்லியால், இந்தியாவின் தோல்வியை தடுக்க முடியவில்லை.

கோஹ்லி மோசம்

கோஹ்லி மோசம்

பிப்ரவரி மாதம் முதல் இதுவரை எந்த ஒரு ஒருநாள் சதத்தையும் நிறைவு செய்யாத விராட் கோஹ்லியின் மோசமான ஃபார்ம், இந்திய அணியை கவலையடையச் செய்துள்ளது. முக்கியமான உலக கோப்பை போட்டிகளின்போதும், அவர் காலைவாரினார். பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் சதம் அடித்ததோடு, அடங்கிவிட்டார்.

முழுதிறமை

முழுதிறமை

இதுகுறித்து பிசிசிஐ தொலைக்காட்சிக்கு கோஹ்லி அளித்துள்ள பேட்டி: நான் பேட்டிங், ஃபீல்டிங் என எந்த செயலில் ஈடுபட்டாலும் முழு திறமையை காண்பித்துதான் ஆடி வருகிறேன். எனவே இலங்கை பயணத்திற்காக கூடுதல் முயற்சி எடுத்து ஆட வேண்டிய தேவையில்லை.

முதல் முறை

முதல் முறை

இலங்கை சுற்றுப் பயணம் எனது தலைமையின் கீழான முதலாவது முழுமையான சுற்றுப் பயணமாகும். வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் வெறும் ஒரு போட்டி மட்டுமே கொண்டதாக இருந்தது. இவ்வாறு கோஹ்லி தெரிவித்துள்ளார்.

Story first published: Saturday, August 1, 2015, 16:34 [IST]
Other articles published on Aug 1, 2015
English summary
Virat Kohli on Saturday said he does not need to put in any extra effort on that front as he has always played with responsibility for the team.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X