For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சச்சினின் அந்த சாதனையை முறியடிக்கப்போவது நான்தான்.. கொக்கரிக்கும் குக்

By Veera Kumar

டாக்கா: இங்கிலாந்துக்காரர்களுக்கு எப்போதுமே குசும்பு அதிகம்தான். அதிலும் தாங்கள் கண்டுபிடித்துக் கொண்டதாக பெருமையடிக்கும், கிரிக்கெட்டில் இன்னும் ஒரு உலக கோப்பையை கூட வெல்லாவிட்டாலும் வாய் மட்டும் குறைந்தபாடில்லை.

வங்காளதேசத்துக்கு சென்றுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்த போட்டியில் இங்கிலாந்து கேப்டன் அலஸ்டயர் குக் ஒரு சாதனையை எட்டியுள்ளார்.

I could break Sachin Tendulkar’s record: Alastair Cook

குக் தனது 134வது டெஸ்டில் காலடியெடுத்து வைக்கிறார். இதன் மூலம் இங்கிலாந்து வீரர்களில் அதிக டெஸ்டில் விளையாடிய வீரர் என்ற அரிய பெருமையை பெறுகிறார். இதற்கு முன்பு அலெக் ஸ்டூவர்ட் 133 டெஸ்டில் ஆடியதே சாதனையாக இருந்தது.

இந்த சாதனை குறித்து நேற்று பேட்டி அளித்த குக், சமீபகாலமாக இங்கிலாந்து அணி, அதிக டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க துவங்கியுள்ளது. அதனால் விரைவிலேயே சச்சினின் 200 டெஸ்ட் போட்டிகள் என்ற சாதனையை முறியடிக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் அதை நோக்கி பயணம் செய்வது மட்டுமே இதில் மிகவும் ஆபத்தான விஷயம்.

11 ஆண்டுகளுக்கு முன் இங்கிலாந்து அணிக்காக அறிமுகமான போது, இது போன்ற சாதனைப்பயணம் செய்வேன் என சிறிதும் எதிர்பார்க்கவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார். குக் அண்மையில், குறைந்த வயதில் 10,000 ரன்கள் என்ற சச்சினின் நீண்ட கால சாதனையை முறியடித்தார். குக்கிற்கு தற்போது 31 வயதாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, October 20, 2016, 13:10 [IST]
Other articles published on Oct 20, 2016
English summary
Alastair Cook has admitted to questioning how much longer he can extend his record-breaking England career, torn between the pride of playing for his country and the wrench of being parted from his young family.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X