For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

எனது நம்பிக்கையை காப்பாற்றினார் சஹல்.. கோஹ்லி குஷி

By Veera Kumar

பெங்களூர்: இங்கிலாந்துக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இந்திய அணி 75 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை ருசித்து கோப்பையை கைப்பற்றியது.

இந்திய அணியில் சுரேஷ் ரெய்னா 63, டோணி 56 ரன்கள் விளாசி 202 ரன்கள் குவிக்க உதவினர். இந்நிலையில் இங்கிலாந்து 127 ரன்களில் ஆல்-அவுட்டானது. இளம் ஸ்பின்னர் சஹல் 25 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதுகுறித்து கேப்டன் கோஹ்லி கூறியதாவது: தொடரின் முடிவை தீர்மானிக்கும் மூன்றாவது போட்டி என்பதால், வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருந்தோம். எனவே முழு திறமையை காண்பித்து விளையாட வேண்டிய சூழலில் அனைத்து வீரர்களும் இருந்தோம்.

சமரசம் இல்லாத சஹல்

சமரசம் இல்லாத சஹல்

அனைத்து போட்டிகளிலும் டாஸ் தோற்ற பிறகு கூட இந்தியா இத்தொடரை வென்றுள்ளது. டெஸ்ட் தொடரிலும் இப்படித்தான் வெற்றி பெற்றோம். இந்தியா சிம்பிளாகவும், சிறப்பாகவும் விளையாடியது. இதனால்தான் மூன்று தொடர்களிலும் இந்தியா வெற்றி பெற்றது.

சஹல் தனது இயல்பான பந்து வீச்சை விட்டுக்கொடுக்காமல், சமரசம் செய்யாமல் பந்து வீசினார். இதற்கு ஒரு தன்னம்பிக்கை அவசியம் தேவை. கண்டிப்பாக இப்போட்டியின் வெற்றிக்கு சஹல் முக்கிய காரணம். மைதானத்தை கணித்து பந்து வீசினார்.

நம்பிக்கை

நம்பிக்கை

சஹல் மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது. அவரும் நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் விளையாட்டை வெளிப்படுத்தினார். சில ரன்களை பேட்ஸ்மேன் அடிக்க ஆரம்பித்ததும், தன்னம்பிக்கையை இழந்து தனது இயல்பான பந்து வீச்சை மாற்றிக்கொள்ளாதவர் சஹல். இதேபோன்ற இயல்பான பந்து வீச்சை அவர் தொடர்ந்து வெளிப்படுத்த வேண்டும் என்பதே எனது விருப்பம்.

இயல்பான பவுலிங்

இயல்பான பவுலிங்

இயல்பாக எந்த வகையாக பந்து வீச முடியுமோ அதைப்போலவே பந்து வீசுவதுதான் அவசியம். அதுதான் திறமைக்கு ஏற்ற பலனை கொடுக்கும். விளையாட்டின் மீது மிகுந்த ஆர்வமும், நம்பிக்கையும் கொண்ட இளம் வீரர் கிடைத்துள்ளது மகிழ்ச்சியை அளிக்கிறது.

மிஸ்ரா வீசிய இரு ஓவர்கள், இந்திய பேட்டிங்கின்போது யுவராஜ்சிங்கிற்கு ஜோர்டான் வீசிய ஓவர் ஆகியவை போட்டியை இந்தியாவின் பக்கம் திருப்பியது என்று சொல்ல முடியும். அதிகபட்சம் 180 ரன்கள்தான் வரும் என எதிர்பார்த்த நிலையில், யுவராஜ் சிங்கின் அதிரடி 202 ரன்களை குவிக்க உதவியது. இவ்வாறு விராட் கோஹ்லி தெரிவித்தார்.

இந்தியாவின் வியூகம்

இந்தியாவின் வியூகம்

சஹல் மீது வைத்திருந்த நம்பிக்கையால் பவர்பிளே ஓவரிலேயே அவரை பந்து வீச அழைத்திருந்தார் கோஹ்லி. சஹலும், இயல்பான லெக் ஸ்பின்னர்கள் போல பந்தை ஃப்ளைட் செய்து அசத்தினார். டி20 போட்டிகளில் சமீபகாலமாக பார்க்க முடியாத காட்சி இது. இங்கிலாந்து எப்போதுமே லெக் ஸ்பின்னர்களிடம் சரணடைவது வழக்கம். எனவேதான், மிஸ்ரா, சஹல் என இரு லெக் ஸ்பின்னர்களோடு இந்தியா களம் கண்டது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, February 2, 2017, 10:06 [IST]
Other articles published on Feb 2, 2017
English summary
Captain Virat Kohli expectedly was overjoyed when the last England wicket fell, as India wrapped up the T20I series as well, thrashing the visitors by 75 runs in the decider at the Chinnaswamy in Bangalore on Wednesday.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X