For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டோணி பாதி, கோஹ்லி மீதி.. அதுதான் நான்.. ரகளையாய் பேசும் ரஹானே

டெல்லி: ஜிம்பாப்வே செல்லும் இந்திய அணியின் கேப்டனாகியுள்ள அஜிங்கியா ரஹானே, தான் டோணியைப் போலவே அமைதியான முறையில் செயல்படப் போவதாக கூறியுள்ளார். அதேசமயம், கோஹ்லியின் அக்ரஷனில் கொஞ்சமும் தன்னிடம் இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இப்படிக் கூறியுள்ளதன் மூலம் ஒரே டிக்கெட்டில் "மெட்ரோ மற்றும் மாடி ரயிலில்" பயணம் செய்த எபக்ட்டை ரசிகர்களுக்குக் கொடுத்துள்ளார் ரஹானே.

ஜிம்பாப்வே செல்லும் இந்திய அணியின் கேப்டனாகியுள்ளார் ரஹானே. டோணி, விராத் கோஹ்லி போன்றோருக்கு ஓய்வு தரப்பட்டுள்ளதால் ரஹானேவுக்கு கேப்டன் வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த நிலையில் தனது செயல்பாடு குறித்து ரஹானே பேட்டி கொடுத்துள்ளார். அதிலிருந்து....

டோணி ஒரு மாதிரி

டோணி ஒரு மாதிரி

இதுவரை 3 கேப்டன்கள் கீழ் பணியாற்றியுள்ளேன். ராகுல் டிராவிட், டோணி, கோஹ்லி. டோணியின் கீழ் விளையாடும்போது மைதானத்தில் எப்படி அமைதி காக்க வேண்டும், பொறுமை காக்க வேண்டும் என்பதை கற்றுக் கொண்டுள்ளேன்.

ரொம்ப பெக்குலியர்

ரொம்ப பெக்குலியர்

டோணி ரொம்ப பெக்குலியர் ஆனவர். எந்த வகையான சூழலையும் அவர் அமைதியாக கையாளுவார். அது அபாரமான திறமை. அந்த குவாலிட்டியை அவரிடமிருந்து எடுத்துக் கொள்ள விரும்புகிறேன்.

கட்டுப்பாடான ஆவேசமும் தேவைதான்

கட்டுப்பாடான ஆவேசமும் தேவைதான்

கோஹ்லியிடமிருந்து நான் எடுத்துக் கொள்ள விரும்புவது கட்டுப்பாடான, கட்டுக்குள் இருக்கக் கூடிய ஆவேசத்தை. அதுவும் தேவைதான். பேட்டிங் செய்யும்போது அதை அழகாக வெளிப்படுத்துவார் கோஹ்லி.

டிராவிட் ரொம்ப சிம்பிள்

டிராவிட் ரொம்ப சிம்பிள்

ராகுல் டிராவிட் மிகவும் சிம்பிளானவர். எல்லாவற்றையும் எளிதாக்கக் கூடியவர். அவருடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் விளையாடியபோது அதை கற்றுக் கொண்டேன்.

எனக்கென்று ஒரு ஸ்டைல்

எனக்கென்று ஒரு ஸ்டைல்

அதேபோல எனக்கும் சில ஐடியாக்கள் உள்ளன. அதையும் நான் செய்து பார்ப்பேன். மற்றவர்களுடன் ஒருங்கிணைந்து செயல்படுவேன். மற்றவர்களின் ஆலோசனையைக் கேட்கத் தயங்க மாட்டேன் என்றார் ரஹானே.

Story first published: Wednesday, July 1, 2015, 14:54 [IST]
Other articles published on Jul 1, 2015
English summary
Named captain for the tour of Zimbabwe, Ajinkya Rahane says he would like to take MS Dhoni's calmness and Virat Kohli's controlled aggression into the field when he wears the skipper's hat in the upcoming limited-overs series.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X