For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இன்று முதல் ஒரு மாதம்.. தொடங்கியது மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா!

8 அணிகள் இடையிலான உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் இன்று தொடங்கியது. முதல் நாளில் இந்திய அணி இங்கிலாந்தை சந்திக்கிறது.

By Veera Kumar

லண்டன்: 11வது பெண்கள் உலக கோப்பை 50 ஓவர் கிரிக்கெட் போட்டி , இங்கிலாந்து மற்றும் வேலஸ்யில் இன்று துவங்குகிறது.

அடுத்த மாதம் 23ம் தேதி வரை நடைபெறும் இந்த கிரிக்கெட் திருவிழாவில் இந்தியா, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, இலங்கை, மேற்கிந்திய தீவுகள் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன.

இன்று தொடங்கி ஜூலை 23-ம் தேதி வரை நடைபெறும் இந்தத் தொடரில் வெற்றி பெற லீக் சுற்று, அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டி என்று மொத்தம் மூன்று சுற்றுகள் உள்ளன.

தலா ஒருமுறை

முதல் சுற்றில் ஒவ்வொரு அணியும் மீதமுள்ள 7 அணியுடன் ஒரு முறை மோத வேண்டும். இதில் முதல் நான்கு இடங்கள் பிடிக்கும் அணிகள் அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும்.

தலா ஒருமுறை

தலா ஒருமுறை

முதல் சுற்றில் ஒவ்வொரு அணியும் மீதமுள்ள 7 அணியுடன் ஒரு முறை மோத வேண்டும். இதில் முதல் நான்கு இடங்கள் பிடிக்கும் அணிகள் அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும்.

இரு போட்டிகள்

இரு போட்டிகள்

இந்திய நேரப்படி இன்று மாலை 3 மணிக்கு நடைபெறும் போட்டியில் இந்திய அணி இங்கிலாந்து அணியை எதிர்கொள்கின்றது. மற்றொரு ஆட்டத்தில் நியூசிலாந்து-இலங்கை அணிகள் மோதுகின்றன.

கேப்டனாக சதம்

கேப்டனாக சதம்

மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி ஓரளவு வலுவாகவே இருக்கிறது. 34 வயதான மிதாலி ராஜ் 100 போட்டிகளுக்கு மேல் கேப்டனாக இருந்து அனுபவம் வாய்ந்தவர். ஒரு நாள் போட்டியில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய சாதனையாளரான ஜூலன் கோஸ்வாமி உள்ளிட்டோர் நம்பிக்கை அளிக்கிறார்கள்.

பலம் வாய்ந்த இங்கிலாந்து

பலம் வாய்ந்த இங்கிலாந்து

ஹீதர் நைட் தலைமையில் இங்கிலாந்தும் பலம் வாய்ந்தது. அந்த அணி ஏற்கனவே 3 முறை உலக கோப்பையை உச்சிமுகர்ந்துள்ளது. அதனால் முதல் தடையை கடப்பது இந்தியாவுக்கு பெரும் சவாலாக இருக்கும். இந்திய அணி 2005-ம் ஆண்டு உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோற்று 2வது இடத்தை பிடித்தது. இதுவே இந்தியாவின் சிறந்த ஆட்டமாகும்.

வெற்றி தொடர வேண்டும்

வெற்றி தொடர வேண்டும்

தென்ஆப்பிரிக்காவில் சாதித்தது போன்றே இங்கும் சிறப்பாக செயல்படுவதை எதிர்நோக்கி இருக்கிறோம். இந்த உலக கோப்பையில் அரைஇறுதியை எட்டுவதே எங்களது முதல் இலக்கு. அதற்கு தொடர் முழுவதும் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தி, உத்வேகத்தை தக்க வைத்துக்கொள்வது அவசியம்' என்றார் இந்திய கேப்டன் மிதாலி.

டி.ஆர்.எஸ் அறிமுகம்

டி.ஆர்.எஸ் அறிமுகம்

பெண்கள் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக நடுவர்களின் முடிவை மறுபரிசீலனை செய்யும் டி.ஆர்.எஸ். முறை இந்த உலக கோப்பையில் அறிமுகம் செய்யப்படுகிறது. மொத்தமுள்ள 31 ஆட்டங்களில் 2 அரைஇறுதி, ஒரு இறுதிப்போட்டி மற்றும் 7 லீக் ஆட்டங்கள் மட்டுமே நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. அந்த 10 ஆட்டங்களில் மட்டும் டி.ஆர்.எஸ். முறை பயன்படுத்தப்படுகிறது.

இந்திய அணி விவரம்

இந்திய அணி விவரம்

மிதாலி ராஜ்-கேப்டன், ஹர்மன்பிரீத் கவுர், ஸ்மிர்தி மந்தனா, வேதா கிருஷ்ணமூர்த்தி, மோனா மேஷ்ரம், பூனம் ரவுத், தீப்தி ஷர்மா, ஜூலன் கோஸ்வாமி, ஷிகா பான்டே, எக்கா பிஷ்ட், சுஷ்மா வர்மா, மான்சி ஜோஷி, ராஜேஷ்வரி கெய்க்வாட், பூனம் யாதவ், நுஜாத் பர்வீன்.

Story first published: Saturday, June 24, 2017, 15:43 [IST]
Other articles published on Jun 24, 2017
English summary
ICC 2017 Women's Cricket World Cup Begins, India bat first against England. You can hit those Big shots with today's Google doodle.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X