For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

யு.ஏ.இக்கு எதிரான போட்டி: 19வது ஓவரிலேயே 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி!

By Shankar

பெர்த்: இந்தியா-ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டியில் எமிரேட்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து 102 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 18.5 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு அந்த ரன்களை எட்டிப்பிடித்தது இந்தியா.

பெர்த் நகரில் இந்திய நேரப்படி பகல் 12 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில், இந்தியா-யு.ஏ.இ அணிகள் மோதி வருகின்றன. டாசில் வெற்றி பெற்ற யு.ஏ.இ முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

இந்திய அணியில் ஒரு மாற்றம்தான் செய்யப்பட்டிருந்தது. காயமடைந்த முகமது ஷமிக்கு பதிலாக புவனேஸ்வர் குமார் சேர்க்கப்பட்டார். யு.ஏ.இ அணி மாற்றமில்லாமல் களமிறங்கியது.

பவுன்சர் போட்டு தாக்கிய இந்தியா

பவுன்சர் போட்டு தாக்கிய இந்தியா

வேகப்பந்து மற்றும் பவுன்சர் பந்து வீச்சுக்கு சாதகமான பெர்த் மைதானத்தில், இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தினர். யு.ஏ.இ அணியின் தொடக்க வீரர் அம்ஜத் அலி 4 ரன்கள் எடுத்திருந்தபோது புவனேஸ்வர் குமார் வீசிய பவுன்சரை அடிக்க முற்பட்டு டோணியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

அஸ்வின் அசத்தல்

அஸ்வின் அசத்தல்

மற்றொரு தொடக்க வீரர் ஆன்ட்ரி பெரேன்கர், உமேஷ் யாதவ் பவுன்சரில் டோணியிடம் கேட்ச் கொடுத்து 4 ரன்களில் வெளியேறினார். கிருஷ்ண சந்திரன் 4 ரன்கள் எடுத்திருந்தபோது அஸ்வின் பந்தில் ரெய்னாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். குர்ரம்கான் 14 ரன்கள் எடுத்தபோது அஸ்வின் பந்து வீச்சில், ரெய்னாவிடம் கேட்ச் கொடுத்தார். விக்கெட் கீப்பர் ஸ்வப்னில் பாட்டில் 7 ரன்களில், அஸ்வின் பந்து வீச்சில் தவானிடம் ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து வீழ்ந்தார்.

ஆல் அவுட்

ஆல் அவுட்

ரோகன் முஸ்தபா 2 ரன்களில், மோகித் ஷர்மா பந்து வீச்சில் எல்பிடபிள்யூ ஆனார். அம்ஜத் ஜாவித் 2 ரன்களிலும், முகமது தாகிர் 1 ரன்களிலும் ஜடேஜா பந்து வீச்சில் அவுட் ஆனார்கள். முகமது நவீத் 6 ரன்களில் அஸ்வின் பந்து வீச்சில் கிளீன் பௌல்ட் ஆனார். சைமான் அன்வர் மட்டும் சிறிது போராடி 35 ரன்கள் எடுத்தார். அவரும் உமேஷ் யாதவ் பந்து வீச்சில் கிளீன் பௌல்ட் ஆக, 31.3 ஓவர்களில் யு.ஏ.இ பேட்டிங் முடிவுக்கு வந்தது.

அந்த அணி 31.3 ஓவர்களில் 102 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இந்திய பவுலர்கள் அபாரம்

இந்திய பவுலர்கள் அபாரம்

சீட்டு கட்டு போல சரிந்த யு.ஏ.இ பேட்டிங் வரிசையால், பந்து வீச வந்த இந்திய பவுலர்கள் அனைவருமே விக்கெட்டுகளுடனே திரும்பினர். இந்திய தரப்பில் அஸ்வின் அதிகபட்சமாக. 25 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதையடுத்து இந்தியா தனது பேட்டிங்கை தொடங்கியது.

தவான் அவுட்

தவான் அவுட்

ஸ்கோர் 29 ரன்களாக இருந்தபோது, ஷிகர் தவான் 14 ரன்களில் அவுட் ஆனார். முகமது நவீத் பந்து வீச்சில் ரோஹன் முஸ்தபாவிடம் கேட்ச் கொடுத்து தவான் விக்கெட்டை பறிகொடுத்தார். முதல் போட்டியில் அரைசதம், 2வது போட்டியில் சதம் அடித்த தவான், இப்போட்டியில் சற்று ஏமாற்றம் அளித்தார்.

ரோகித் அபாரம்

ரோகித் அபாரம்

ஆனால் முதல் இரு போட்டிகளிலும் சொதப்பிய ரோகித் ஷர்மா சிறப்பாக ஆடி 55 பந்துகளில் 57 ரன்கள் குவித்தார். அவர் ஃபார்முக்கு வந்தது இந்தியாவுக்கு நல்ல சேதியாக அமைந்தது. விராட் கோஹ்லி நிதானமாக ஆடி 33 ரன்கள் எடுத்தார். 18.5வது பந்தில் ரோகித் ஷர்மா பவுண்டரி விளாச, 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றது இந்தியா. மேன் ஆப் தி மேட்ச் விருது அஸ்வினுக்கு வழங்கப்பட்டது.

Story first published: Saturday, February 28, 2015, 16:48 [IST]
Other articles published on Feb 28, 2015
English summary
UAE won the toss and decided to bat first against India in Perth.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X