3வது ஸ்பின்னர்
இந்திய சுழற்பந்து வீச்சாளர்களில் முதலிடத்தைப் பிடித்தவர்களில் 3வது வீரர் ஜடேஜா. இதற்கு முன்பு பிஷன் சிங் பேடியும், அஸ்வினும் இந்த சாதனையைச் செய்துள்ளனர்.
899 புள்ளிகளுடன் முதலிடம்
ஜடேஜா தற்போது 899 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறார். அவருக்கு அடுத்த இடத்தில் தற்போது ஆர். அஸ்வின் இருக்கிறார். அவருக்கு தரவரிசையில் சரிவு ஏற்பட்டுள்ளது.
37 புள்ளிகள் சரிந்து
தரிவரிசைப் பட்டியலில் 37 புள்ளிகள் சரிந்து 862 புள்ளிகளுடன் 2வது இடத்தைப் பிடித்துள்ளார் அஸ்வின். ராஞ்சியில் நடந்த 3வது டெஸ்ட் போட்டியில் அவருக்கு 2 விக்கெட் மட்டுமே கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
3வது இடத்திலும் ஸ்பின்னரே
3வது இடத்திலும் ஒரு சுழற்பந்து வீச்சாளரே இருக்கிறார். அவர் இலங்கை வீரர் ரங்கண ஹெராத். 4வது இடத்தில் ஆஸ்திரேலிய வீரர் ஜோஷ் ஹேசல்வுட் இருக்கிறார்.
ஜேம்ஸ் ஆண்டர்சன்
இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன் 5வது இடத்திலும், ஸ்டூவர்ட் பிராட் 6வது இடத்திலும் உள்ளனர். டேல் ஸ்டெயிலும் பிராடுடன் 6வது இடத்தில் இருக்கிறார்.