For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டெஸ்ட் ரேங்க்.. முதலிடம் பிடித்த ஸ்டெயின்.. மூன்றாம் இடத்துக்கு சென்ற அஸ்வின்!

துபாய்: டெஸ்ட் கிரிக்கெட் பந்து வீச்சாளர் தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியின் நட்சத்திரப் பந்து வீச்சாளரான அஸ்வின் 2வது இடத்தில் இருந்து 3-ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

ஐ.சி.சி.யின் சமீபத்திய டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசைப் பட்டியல் வெளியானது. இதில் இந்திய அணியின் நட்சத்திர பந்து வீச்சாளரானரான விச்சந்திரன் அஸ்வின் 3-வது இடத்திற்கு சரிந்திருக்கிறார். முன்னதாக அவர் நம்பர்-2-ல் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ICC Test Ranging: R Ashwin slips to 3rd, Ajinkya Rahane 8th in batsmen list

மற்றொரு சுழற்பந்து வீச்சாளரான ரவீந்திர ஜடேஜா 8-வது இடத்தில் உள்ளார். முதல் 10-இடங்களில் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா என 2 இந்திய பந்து வீச்சாளர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான இஷாந்த் சர்மா 20-வது இடத்தில் உள்ளார். முகமது சமி 25-வது இடத்திலும், உமேஷ் யாதவ் 29-வது இடத்திலும் உள்ளனர்.

அதே நேரத்தில் தென்னாப்பிரிக்காவின் வேக பந்து வீச்சாளரான ஸ்டெயின் மீண்டும் நம்பர்-1 இடத்தை எட்டிப்பிடித்திருக்கிறார்.

டெஸ்ட் கிரிக்கெட் பேட்டிங் தரவரிசையில் முதல் 10- இடங்களில் இந்தியாவிலிருந்து ரகானே மட்டும் தான் இடம் பிடித்துள்ளார். அஜிங்கியா ரகானே தொடர்ந்து 8-வது இடத்திலேயே நீடித்து வருகிறார். விராத் கோஹ்லி 16-வது இடத்திலும், புஜாரா 20 இடத்திலும், முரளி விஜய் 21-வது இடத்திலும் உள்ளனர்.

ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் ஸ்மித் பேட்டிங் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளார்.

டெஸ்ட் அணிகள் தரவரிசைப் பட்டியலில், விராத் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி 2-வது இடத்தில் நீடிக்கிறது. பாகிஸ்தான் அணி இந்தியாவை விட ஒரே ஒரு புள்ளி அதிகம் பெற்று முதலிடத்தில் உள்ளது.

முன்னதாக ஆஸ்திரேலிய அணி இலங்கையிடம் படுதோல்வி அடைந்து டெஸ்ட் தொடரை இழந்ததால், முதலிடதில் இருந்த ஆஸ்திரேலியா பின்னுக்கு தள்ளப்பட்டது. இதனால், இந்திய அணி மீண்டும் நம்பர்-1 இடத்தைப் பிடித்தது. முதலிடத்தில் இந்திய அணி நீடிக்க வேண்டுமானால் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆனால் தொடர் மழை காரணமாக அப்போட்டி டிராவில் முடிவடையவே, இந்திய அணி 2-வது இடத்திற்கு பின்தங்கியது. இதனால், பாகிஸ்தான் அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல்முறையாக முதலிடத்தை பிடித்தது.

பாகிஸ்தான் (111 புள்ளிகள்) முதலிடத்திலும், இந்தியா(110 புள்ளிகள்) 2-வது இடத்திலும், ஆஸ்திரேலியா (108 புள்ளிகள்) 3-வது இடத்திலும் உள்ளது.

Story first published: Thursday, September 1, 2016, 13:17 [IST]
Other articles published on Sep 1, 2016
English summary
Off-spinner R Ashwin dropped a rung to 3rd but remained the highest-placed Indian bowler, while Ajinkya Rahane remained static at 8th in the batsmen’s list of the latest ICC Test rankings.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X