For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்தியா, ஆஸி. செமி பைனல்... நிமிஷத்துக்கு 1.5 கோடி... விளம்பரத்தில் அள்ளிய ஸ்டார் ஸ்போர்ட்ஸ்... !

By Mayura Akilan

டெல்லி: இந்திய ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு 10 வினாடிகளுக்கு ரூ. 25 லட்சம் விளம்பர கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது ஒரு நிமிடத்திற்கு ஒன்றரை கோடி ரூபாயை வாரிச்சுருட்டியுள்ளது ஸ்டார் ஸ்போர்ட்ஸ்.

கிரிக்கெட் போட்டியில் ஒரு விக்கெட் விழுந்தாலோ, சிக்ஸர் பறந்தாலோ அந்த இடைவெளியில் ஒரு பத்து செகண்டுகளுக்கு விளம்பரம் வந்து போகும்.

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இன்று காலை முதல் மாலை வரை தொலைக்காட்சி முன் தவம் கிடக்கின்றனர். இதற்கு காரணம் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா- ஆஸ்திரேலிய அணிகளின் இன்றைய மோதல் மிக முக்கியமான ஆட்டமாக கருதப்படுகிறது. எனவே இன்றைய தினத்தில் டிவியில் ஒளிபரப்பாகும் விளம்பரங்கள் பலகோடி ரசிகர்களின் பார்வையில் பட வாய்ப்புள்ளது.

சிறப்பு பிராத்தனை

சிறப்பு பிராத்தனை

சிட்னியில் இன்று நடைபெறும் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் உலகக்கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்பதற்காக நாடு முழுவதும் கிரிக்கெட் ரசிகர்கள் சிறப்பு பிரார்த்தனை நடத்தி வருகின்றனர்.

சிறப்பு யாகங்கள்

சிறப்பு யாகங்கள்

இன்று அதிகாலை முதலே சென்னை, ஆமதாபாத், கோல்கட்டா உள்ளிட்ட நகரங்களில் சிறப்பு யாகங்களும் நடத்தப்பட்டு வருகிறது.

விளம்பரக்கட்டணம் உயர்வு

விளம்பரக்கட்டணம் உயர்வு

இந்தப் போட்டியை நேரடியாக ஒளிபரப்பி வரும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் விளம்பர கட்டணத்தை பல மடங்கு உயர்த்தியுள்ளது.

ஒரு நிமிடத்திற்கு ரூ.1.5 கோடி

ஒரு நிமிடத்திற்கு ரூ.1.5 கோடி

இன்றைய போட்டியின் போது 10 வினாடிகளுக்கு ரூ. 25 லட்சம் விளம்பரம் கட்டணம் ஆகும். அதாவது ஒரு நிமிட விளம்பரத்திற்கு சுமார் ஒன்றரை கோடி ரூபாயை விளம்பர கட்டணமாக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் இன்று ஒருநாள் மட்டும் கட்டணமாக பெறுகிறது. பல நூறு கோடி ரூபாயை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் சம்பாதித்துள்ளது.

இறுதிப்போட்டிக்கு இருமடங்கு

இறுதிப்போட்டிக்கு இருமடங்கு

இந்திய அணி அரையிறுதியில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறிவிட்டால் நியூசிலாந்து-இந்திய அணிகளுக்கிடையயான இறுதிப் போட்டிக்கு இந்த கட்டணம் அப்படியே இருமடங்காக வாய்ப்பிருக்கிறது என்கின்றனர்.

இந்தியா – பாகிஸ்தான்

இந்தியா – பாகிஸ்தான்

இதேபோல பிப்ரவரி 15ஆம் தேதி இந்தியா - பாகிஸ்தான் போட்டி ஒளிபரப்பான நாளன்றும் இதேபோல ஒரு நிமிடத்திற்கு ஒன்றரை கோடி ரூபாய் வசூலித்துள்ளது ஸ்டார் ஸ்போர்ட் நிறுவனம். இந்தியாவில் தமிழ் உள்ளிட்ட 6 மாநில மொழிகளிலும் கிரிக்கெட் போட்டிகள் ஒளிபரப்பாகிறது.

கோடிகளில் புரளும் பணம்

கோடிகளில் புரளும் பணம்

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை ஒளிபரப்பும் உரிமையை பெற தொலைக்காட்சி நிறுவனங்கள் ஏன் கோடிக் கணக்கில் கொட்டிக் கொடுக்கின்றன என்று ஏன் என்று இப்போது புரிந்திருக்குமே ரசிகர்களே!

Story first published: Thursday, March 26, 2015, 13:08 [IST]
Other articles published on Mar 26, 2015
English summary
Broadcaster Star India which airs the World Cup cricket tournament in India in six regional languages, no less is expected to rake in upwards of Rs 30 crore from the India-Australia semi-final at Sydney Cricket Ground (SCG) on Thursday. Ad rates are pitched anywhere between Rs 20-25 lakh for 10 seconds, much in the same range as the India-Pakistan match on February 15, say media buyers.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X