For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆஸி-க்கு எதிரான 4-வது டெஸ்ட்: 2-வது நாள் ஆட்ட முடிவில் இந்தியா 248/6

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியின் 2-வது நாள் ஆட்ட முடிவில் இந்தியா 6 விக்கெட் இழப்புக்கு 248 ரன்கள் எடுத்துள்ளது.

By Mathi

தர்மசாலா: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியின் 2-வது நாள் ஆட்டம் முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 248 ரன்களை எடுத்துள்ளது.

ஆஸ்திரேலியா- இந்தியா இடையேயான முதலாவது டெஸ்ட் புனேவில் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா 333 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது.

2-வது டெஸ்ட் போட்டி பெங்களூருவில் நடைபெற்றது. இதில் இந்தியா 75 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. 3-வது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் நடைபெற்றது. இது சமனில் முடிவடைந்தது.

 சமநிலையில் இரு அணிகளும்...

சமநிலையில் இரு அணிகளும்...

தற்போதைய நிலையில் இரு அணிகளும் 1-1 என சமநிலையில் உள்ளன. இத்தொடரின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் போட்டி தர்மசாலாவில் நடைபெற்று வருகிறது.

 கோஹ்லி ஆப்சென்ட்

கோஹ்லி ஆப்சென்ட்

தோள்பட்டை காயத்தில் இருந்து மீளாத கேப்டன் கோஹ்லி இந்த டெஸ்டில் ஆடவில்லை. நேற்று தொடங்கிய 4-வது மற்றும் இறுதிப் போட்டியில் டாஸ் ஜெயித்தது ஆஸ்திரேலியா.

 300 ரன்கள்...

300 ரன்கள்...

அந்த அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆஸ்திரேலிய அணி 88.3 ஓவர்களில் 300 ரன்கள் எடுத்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. இந்திய அணியின் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளையும், உமேஷ் யாதவ் 2 விக்கெட்டுகளையும் அள்ளினர்.

 248 ரன்கள்..

248 ரன்கள்..

இதனையடுத்து இந்திய அணி முதல் இன்னிங்ஸை தொடங்கியது. இன்றைய 2-வது நாள் ஆட்டம் முடிவில் இந்தியா 6 விக்கெட்கள் இழப்புக்கு 248 ரன்களை எடுத்தது. சஹா 10, ஜடேஜா 16 ரன்களுடன் களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலியாவை விட இந்திய அணி 52 ரன்கள் பின்தங்கி உள்ளது.

 லயன் மிரட்டல்

லயன் மிரட்டல்

ஆஸ்திரேலிய அணியின் லயன் அதிரடியாக பந்துவீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்திய அணி வீரர்களும் ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சை திறமையாக எதிர்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, March 26, 2017, 18:00 [IST]
Other articles published on Mar 26, 2017
English summary
Indian batsmen frittered away the initial advantage before reaching 248/6 against a disciplined Australia to leave the 4th and final Test evenly poised, here today (March 26).
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X