For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஹோலிதான் அவர்களுக்கு.. கொண்டாடப்போவது என்னவோ நாங்கதான்: வெஸ்ட் இண்டீஸ் வீரர் தடாலடி பேட்டி

By Veera Kumar

பெர்த்: இந்தியாவுக்கு வேண்டுமானால் 6ம் தேதி ஹோலி பண்டிகையாக இருக்கலாம், ஆனால் அதை கொண்டாடப்போவது என்னவோ நாங்கள்தான் என்று சவடால் விடுத்துள்ளார் வெஸ்ட் இண்டீஸ் வீரர் டேரன் சம்மி.

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் வரும் 6ம்தேதி, வெள்ளிக்கிழமை, பெர்த் மைதானத்தில் பலப் பரிட்சை நடத்த உள்ளன. அன்றைய தினம் இந்தியாவில் ஹோலி பண்டிகை விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். எனவே வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக இந்திய அணி ஹோலி பண்டிகையை கொண்டாடப்போவதைப் போல ஸ்டார் டிவி மோக்கா.. மோக்கா.. தொடர் விளம்பரத்தையும் வெளியிட்டுள்ளது.

இந்தியாவிடம் எனர்ஜி

இந்தியாவிடம் எனர்ஜி

இந்நிலையில் மே.இ.தீவுகளின் முன்னாள் கேப்டனும், ஆல்-ரவுண்டருமான டேரன் சம்மி அளித்த பேட்டி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் விளையாடினால் ஒரு தன்னம்பிக்கை கிடைக்கும். வெறியேறும். இதை பெரும்பாலான வீரர்கள் ஒப்புக்கொள்வார்கள். ஆனால், அதேபோன்ற, மனநிலையில் இந்தியாவுடன் மோத முடியாது. இந்தியாவுக்கு எதிரான போட்டி வேறுமாதிரியான எனர்ஜியை எங்களுக்கு அளிக்கும்.

ரசித்து ஆடுவோம்

ரசித்து ஆடுவோம்

இந்தியா, மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளில் பலரும் நண்பர்களாக உள்ளோம். எங்களுக்குள் மோதிக்கொள்வது ஆக்ரோஷமானதாக இருக்காது. ஆனால் விறுவிறுப்பாக இருக்கும். இரு அணிகளுமே, ரசித்து விளையாட வாய்ப்பு கிடைக்கும்.

ஐபிஎல் உதவி

ஐபிஎல் உதவி

ஐபிஎல் போட்டிகள் மூலமாக, இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளின் வீரர்கள் முன்பைவிட மிகவும் நெருங்கி வந்துள்ளோம். இந்திய வீரர்களின் எதிர்மறை விஷயங்கள் எங்களுக்கு தெரியும். அதற்கேற்ப வியூகம் வகுப்போம். ஆனால், அதேபோல எங்களைப் பற்றியும், அவர்களுக்கு தெரியும் என்பதையும் நாங்கள் மறுக்கவில்லை.

சுற்றுப் பயண ரத்து

சுற்றுப் பயண ரத்து

இந்திய சுற்றுப் பயணத்தை பாதியிலேயே நிறுத்திவிட்டு திரும்பியதால், எங்கள் அணி மீது இந்தியர்கள் அதிருப்தியடைந்திருப்பார்கள் என்று நம்பவில்லை. எங்களுடைய பிரச்சினைக்காகவே நாங்கள் திரும்பினோம். ஆனால், இந்தியாவுடன் எந்த பிரச்சினையும் கிடையாது. கெய்ல் முதுகு வலி பிரச்சினையால் கடந்த 3 வருடங்களாக பாதிக்கப்பட்டுள்ளார். ஆனால் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் அவர் விளையாடுவார் என்றுதான் நினைக்கிறேன்.

ஹோலி எங்களுக்குதான்

ஹோலி எங்களுக்குதான்

பெர்த் மைதானம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமானது. எங்கள் வேகப்பந்து வீச்சாளர்கள் சரியான இடத்தில் பந்தை பிட்ச் செய்தால், விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியாவை திணறடிக்கலாம். இந்தியர்களுக்கு எனது ஹோலி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால் ஹோலி நாளில் வெற்றியை கொண்டாடப்போவது என்னவோ நாங்கள்தான். இவ்வாறு டேரன் சம்மி கூறினார்.

Story first published: Wednesday, March 4, 2015, 11:32 [IST]
Other articles published on Mar 4, 2015
English summary
Sammy had a festive greeting for his Indian friends. “India could celebrate Holi and we could hopefully celebrate win.” he says.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X