318 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது இந்தியா.. நியூசிலாந்து நிதான ஆட்டம்

By:

கான்பூர்: கான்பூர் டெஸ்ட் போட்டியில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸை 318 ரன்களுக்கு இழந்துள்ளது. இந்திய அணி மிகப் பெரிய ஸ்கோரை எட்ட முடியாமல் போனாலும் கூட கடைசி நேரத்தில் ரவீந்திர ஜடேஜா அதிரடியாக ஆடி 42 ரன்களைக் குவித்து இந்தியா சற்று கெளரவமான ஸ்கோரை எட்ட உதவினார்.

கான்பூரில் நேற்று தொடங்கிய நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா டாஸ் வென்று முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இந்திய அணிக்கு பெரிய தொடக்கம் கிடைக்கவில்லை.

India lost their first innings for 318

கே.எல். ராகுல் 32 ரன்களில் அவுட்டான்ர். முரளி விஜய் அரை சதம் போட்டார். 65 ரன்கள் அவரது பங்கு. சட்டேஸ்வர் புஜாரா 62 ரன்களைக் குவிக்க கோஹ்லி 9 ரன்களில் வீழ்ந்தார்.

ரோஹித் சர்மா 35, ஆர்.அஸ்வினி் 40 ரன்களைச் சேர்த்தனர். கடைசி நேரத்தில் ரவீந்திர ஜடேஜா அதிரடியாக ஆடி 44 பந்துகளில் 42 ரன்களைக் குவித்தார். இதனால் இந்தியாவால் 300 ரன்களைத் தாண்ட முடிந்தது. இன்று காலை தனது இன்னிங்ஸை இழந்த இந்தியா 318 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

நியூசிலாந்து தரப்பில் போல்ட், சான்ட்னர் தலா 3 விக்கட்களைச் சாய்த்தனர். வாக்னருக்கு 2 விக்கெட் கிடைத்தது. கிரெய்க், சோதி ஆகியோருக்கு தலா ஒரு விக்கெட் கிடைத்தது.

இதையடுத்து நியூசிலாந்து ஆடி வருகிறது. உமேஷ் யாதவின் பந்து வீச்சில் தொடக்க ஆட்டக்காரர் கப்தில் வீழ்ந்தார். தற்போது லாத்தமும், கனே வில்லியம்னசனும் பேட் செய்து கொண்டுள்ளனர்.

English summary
India have lost their first innings for 318 against New Zealand in the Kanpur test.
Please Wait while comments are loading...

Videos