For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்திய தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையாக, இந்தியா-பாக். கிரிக்கெட் போட்டி சாதனை!

By Veera Kumar

மும்பை: உலக கோப்பையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை 288 மில்லியன் பேர் தொலைக்காட்சிகளில் கண்டு ரசித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 15ம்தேதி அடிலெய்டில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் பலப்பரிட்சை நடத்தின. அந்த போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. அந்த போட்டியை ஸ்டேடியத்தில் குவிந்திருந்த ஆயிரக்கணக்கான இந்திய-பாகிஸ்தான் ரசிகர்கள் மட்டுமின்றி, உலகமெங்கும் கோடிக்கணக்கான ரசிகர்கள் தொலைக்காட்சிகளில் கண்டுகளித்தனர்.

பட்டாசு புஸ்வானமாகியது

பட்டாசு புஸ்வானமாகியது

பாகிஸ்தான் வெற்றியை எதிர்பார்த்து, கராச்சியில் பட்டாசு பெட்டியையும் தயாராக எடுத்து வைத்திருந்தனர். ஆனால் வெடிச்சத்தம், வழக்கம்போல, பாகிஸ்தானின் கிழக்கில் அமைந்துள்ள நாட்டில் இருந்துதான் கேட்டது.

டிஆர்பி எப்படி..

டிஆர்பி எப்படி..

இந்த போட்டியை ஸ்டார் நெட்வொர்க் மற்றும் தூர்தர்ஷன் சேனல்கள், நேரடியாக ஒளிபரப்பின. இவ்விரு சேனல்களின் டிஆர்பி ரேட்டிங் 14.8 புள்ளியாக பதிவாகியுள்ளது. இதில் ஸ்டார் நெட்வொர்க் சேனல்களின் பங்களிப்பு 11.9 புள்ளியாகவும், டிடி சேனலின் பங்களிப்பு 2.9 புள்ளிகளாகவும் உள்ளது.

நல்ல வரவேற்பு

நல்ல வரவேற்பு

ஸ்டார் இந்தியா சேனலின் தலைமை செயல் அதிகாரி உதய் சங்கர் கூறுகையில், "ஐசிசி உலக கோப்பையைவிட ரசிகர்களை ஈர்க்கும் பெரிய விளையாட்டு இந்தியாவில் கிடையாது. இந்திய ரசிகர்கள், டிவிகளில் அபரிமிதமாக போட்டிகளை கண்டு ரசிக்கின்றனர்.

பல மொழிகளில்

பல மொழிகளில்

நாட்டின் முன்னணி ஸ்போர்ட்ஸ் சேனலான நாங்கள், கிரிக்கெட்டை பல கோணங்களில் ரசிகர்களுக்கு விருந்தாக படைத்து வருகிறோம். பல்வேறு மொழிகளிலும் ரசிகர்களிடம் கிரிக்கெட்டை கொண்டு சேர்க்கிறோம். இதுவரை இல்லாத அளவுக்கு இந்த உலக கோப்பையை பெரிய அளவில் ஒளிபரப்புவதுதான் ஸ்டார் டிவியின் நோக்கம்" என்றார்.

மோக்கா.. மோக்கா..

மோக்கா.. மோக்கா..

ஸ்டார் டிவி கிரிக்கெட்டை ஒளிபரப்புவதோடு நிறுத்தாமல், மோக்கா என்ற கோஷத்தில் பல்வேறு விளம்பரங்களை வெளியிட்டு வருகிறது. ஆன்லைனில் இதுவரை இந்த விளம்பரங்களை 17 மில்லியன் மக்கள் கண்டு களித்துள்ளனர்.

ஸ்டார் வர்ணனையாளர்கள்

ஸ்டார் வர்ணனையாளர்கள்

இந்தியா-பாகிஸ்தான் போட்டி நடந்த நாளன்று, அமிதாப்பச்சன், கபில்தேவ், சோயிப் அக்தர், ராகுல் டிராவிட், சஞ்சய் மஞ்சரேக்கர் ஆகியோரை பயன்படுத்தி கிரிக்கெட் வர்ணனை கொடுக்கச் செய்தது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

புது சாதனை

புது சாதனை

பிப்ரவரி 15ம்தேதி, ஞாயிற்றுக்கிழமை, இந்தியா-பாகிஸ்தான் போட்டியை பார்த்த இந்திய ரசிகர்களின் எண்ணிக்கை 288 மில்லியனாக உயர்ந்தது. அதாவது சுமார் 28 கோடியாக இருந்தது. இந்திய தொலைக்காட்சி வரலாற்றிலேயே ஒரு நிகழ்ச்சிக்கு கிடைத்த அதிகபட்ச பார்வையாளர்கள் என்றால் இதுதான். அந்த வகையில் இது புது சாதனை.

Story first published: Thursday, February 26, 2015, 17:35 [IST]
Other articles published on Feb 26, 2015
English summary
The most anticipated clash of the ICC World Cup 2015 created Indian television history as 288 million viewers tuned in to watch the defending champions take on Pakistan on February 15 in Adelaide.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X