For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

நாளை 3வது டெஸ்ட்: தென் ஆப்பிரிக்க அணியின் 9 வருட சாதனையை தடுக்குமா கோஹ்லி படை?

By Veera Kumar

நாக்பூர்: இந்திய அணி நாளை தொடங்கும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றால், அந்த அணியின் ஒன்பது வருட சாதனை பயணம் தடைபடும்.

இந்தியா-தென் ஆப்பிரிக்கா நடுவே மொகாலியில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா வென்றது.

பெங்களூரில் நடைபெறவிருந்த 2வது டெஸ்ட் போட்டி முதல் நாளைதவிர மற்ற நான்கு நாட்களும் பெய்த மழையால் டிரா ஆனது.

வாழ்வா-சாவா?

வாழ்வா-சாவா?

இந்நிலையில், இவ்விரு அணிகள் நடுவேயான 3வது டெஸ்ட் போட்டி நாளை நாக்பூரில் தொடங்குகிறது. இந்த டெஸ்ட் போட்டி தென் ஆப்பிரிக்க அணிக்கு வாழ்வா-சாவா என்ற போட்டியாகும்.

இந்தியாவுக்கு சாதகம்

இந்தியாவுக்கு சாதகம்

ஏற்கனவே ஒரு டெஸ்ட் வென்ற இந்திய அணி, எஞ்சிய 2 டெஸ்ட்டுகளில் ஒன்றில் வென்றாலும், தொடரை கைப்பற்றும். தென் ஆப்பிரிக்காவோ 2 டெஸ்ட்டிலும் வெற்றி பெற்றால்தான் தொடரை கைப்பற்ற முடியும் என்ற கட்டாயத்தில் உள்ளது.

சமன் செய்யவும் வாய்ப்பு

சமன் செய்யவும் வாய்ப்பு

தென் ஆப்பிரிக்க அணி எஞ்சிய 2 டெஸ்ட் போட்டிகளில், ஒன்றில் வெற்றி பெற்று, ஒன்றில் டிரா செய்தாலும், தொடரை சமன் செய்ய முடியும்.

9 வருடங்களாக தோற்கவில்லை

9 வருடங்களாக தோற்கவில்லை

தென் ஆப்பிரிக்க அணி 2006ம் ஆண்டு இலங்கையில் டெஸ்ட் போட்டிகளில் ஆடிய பிறகு தொடர்ந்து 9 வருடங்களாக வெளிநாடுகளில் டெஸ்ட் தொடர்களை இழக்கவேயில்லை. 2008-09 மற்றும் 2012-2013 ஆகிய ஆண்டுகளில் ஆஸ்திரேலிய மண்ணில், வலிமையான ஆஸி. அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர்களும் இதில் அடங்கும்.

தொடர்களையும் வென்றது

தொடர்களையும் வென்றது

இடைப்பட்ட காலத்தில், 2008ல் இங்கிலாந்திலும், வெஸ்ட் இண்டீசில் 2010லும், நியூசிலாந்தில் 2011-12லும், பாகிஸ்தானில், 2007-08லும், இலங்கையில் கடந்த வருடமும், வங்கதேசத்தில் 2007-08லிலும், ஜிம்பாப்வேயில், 2007-08லும், டெஸ்ட் தொடர்களை வென்றுள்ளது தென் ஆப்பிரிக்கா.

ஒருமுறைதான் வெற்றி

ஒருமுறைதான் வெற்றி

இந்தியாவில் தென் ஆப்பிரிக்க அணி 1996-97ல் டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்தது. 2004-05ல் 0-1 என்ற கணக்கில் தோற்றது. 2007-08லும், 2009-10 ஆண்டுகளிலும், நடந்த டெஸ்ட் போட்டிககள் டிரா ஆனது. மொத்தம் வந்த 5 விசிட்டுகளில், 1999ல் மட்டுமே தென் ஆப்பிரிக்கா இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றது.

சாதிக்குமா கோஹ்லி படை?

சாதிக்குமா கோஹ்லி படை?

நாளை தொடங்கும் நாக்பூர் டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால், தென் ஆப்பிரிக்க அணி டெஸ்ட் தொடரை இழக்கும். இதன்மூலம், அதன் 9 ஆண்டுகால வெளிநாட்டு மண் சாதனை முறியடிக்கப்படும். சாதிக்குமா கோஹ்லி படை?

Story first published: Tuesday, November 24, 2015, 17:59 [IST]
Other articles published on Nov 24, 2015
English summary
An enviable nine-year overseas record of 10 Test series wins in 14 rubbers by South Africa is under serious threat by India when the two teams face-off in the third and penultimate game of the current series at the VCA Stadium in Jamtha here from tomorrow (November 25).
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X