For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

நெருப்புடா.. சொந்த மண்ணில் தொடர்ச்சியாக சாதனை வெற்றி.. அசத்தும் இந்திய டெஸ்ட் அணி

By Veera Kumar

கான்பூர்: உள்நாட்டில் இந்திய கிரிக்கெட் அணி ஒரு புலி என்பதை கடந்த 4 வருடங்களாக இந்திய டெஸ்ட் அணி நிரூபித்து வருகிறது.

இந்தியாவை அதன் சொந்த மண்ணில் சந்திப்பது, சிங்கத்தை அதன் குகையில் வைத்து சீண்டி பார்ப்பதற்கு சமம் என்பதை, அடி வாங்கி, நொந்து திரும்பிய அணிகள் ஒப்புக்கொள்ளும்.

நியூசிலாந்துக்கு எதிராக, கான்பூரில் இந்தியா பெற்ற 197 ரன்கள் வித்தியாசத்திலான பிரமாண்ட வெற்றி, இந்த மணி மகுடத்தின் மற்றொரு வைரக்கல்.

பிரமாண்ட வெற்றிகள்

பிரமாண்ட வெற்றிகள்

அதேநேரம், 1967-68ம் ஆண்டில் ஆக்லாந்தில் அதாவது நியூசிலாந்தின் சொந்த மண்ணில் வைத்தே, அந்த அணியை 272 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதே நியூசிலாந்துக்கு எதிரான இந்தியாவின் பிரமாண்ட வெற்றி சாதனையாக தொடருகிறது. 1976-77ல் நம்மூர் சென்னையில் வைத்து, அந்த அணியை 216 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளோம். அதன்படி, இந்தியாவுக்கு தற்போது கிடைத்துள்து நியூசிலாந்துக்கு எதிரான 3வது பெரும் வெற்றி.

தோல்வி கிடையாது

தோல்வி கிடையாது

கடந்த 2012ல் இந்தியா, கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் வைத்து நடந்த இங்கிலாந்துக்கு எதிரான போட்டியை இழந்தது. ஆனால் அதன்பிறகு, இதுவரை உள்நாட்டில் 12 டெஸ்டுகளை விளையாடியுள்ள இந்தியா எதிலுமே தோற்கவில்லை. 10ல் வெற்றி, 2ல் டிரா.

எப்பவுமே இப்படித்தான்

எப்பவுமே இப்படித்தான்

இப்போது மட்டுமல்ல, எப்போதுமே தாய் மண்ணில் இந்தியா உக்கிரமாகிவிடுகிறது. 1977 முதல் 1980க்கு இடைப்பட்ட காலத்தில், இந்தியா தனது சொந்த மண்ணில் தொடர்ந்து 20 டெஸ்டுகளையும், 1960 முதல் 1964க்கு இடைப்பட்ட காலத்தில் தொடர்ந்து 16 டெஸ்டுகளையும் இந்தியா வென்றுள்ளது.

அஸ்வின் அசத்தல்

அஸ்வின் அசத்தல்

500வது டெஸ்டின் நாயகன் பட்டம் ரவீந்திர ஜடேஜாவுக்கு வழங்கப்பட்டிருக்கலாம். ஆனால் ரசிகர்களின் நாயகனாக ஜொலித்தது என்னவோ, ரவிச்சந்திரன் அஸ்வின்தான். ஒரே டெஸ்டில் 10 விக்கெட்டுகளுக்கு மேல் 5 முறை குவித்துள்ளார் அஸ்வின். 132 டெஸ்ட் போட்டிகளில் ஆடிய கும்ப்ளே 8 முறையும், 103 டெஸ்டுகளில் ஆடிய ஹர்பஜன்சிங் 5 முறையும் இந்த சாதனையை நிகழ்த்தினர். அஸ்வின் தனது 37 போட்டிகளிலேயே ஹர்பஜன் சிங் சாதனையை சமன்படுத்தியுள்ளார்.

Story first published: Tuesday, September 27, 2016, 13:02 [IST]
Other articles published on Sep 27, 2016
English summary
12 Consecutive Tests without a defeat at home for India. Since losing to England at Eden Gardens in December 2012, India have won 10 and drawn two.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X