For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

எவ்வளவு வேமாக பந்து வந்தாலும் சரி.. வெளுத்தெடுக்க வேதா ரெடி!

பெங்களூர்: மகளிர் உலகக் கோப்பைக் கிரிக்கெட் தொடர் 24ம் தேதி முதல் களை கட்டப் போகிறது. அதிரடி வீராங்கனைகள் நிரம்பியுள்ள இந்திய அணியில் இளம் வீராங்கனை வேதா கிருஷ்ணமூர்த்தி எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளார்.

24 வயதான இளம் புயல் வேதா, கர்நாடகத்தைச் சேர்ந்தவர். ஆல் ரவுண்டர். கிரிக்கெட் மட்டுமல்லாமல் கராத்தேவிலும் கலக்கி வருபவர்.

ஸ்ரீகாந்த் போல வேதாவும் அதிரடி பிரியை. வந்தோமா, அடித்து நொறுக்கினோமோ என்று அதகளம் செய்வது இவருக்குப் பிடித்த செயல். இவரோட ஸ்டைல், ஸ்டிரெய்ட் டிரைவ்தான்.

13 வயதில்

13 வயதில்

இவர் தனது 13வது வயதில் கர்நாடக அணியில் இணைந்து கிரிக்கெட் ஆட ஆரம்பித்தார். அப்படி ஆரம்பித்த இவர் பின்னர் 19 வயதுக்குட்பட்டோருக்கான கர்நாடக மகளிர் அணியின் கேப்டனாக உயர்ந்தார்.

2015 முதல் உயரம்தான்

2015 முதல் உயரம்தான்

2015ம் ஆண்டு முதல் இவர் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஒப்பந்த வீராங்கனைகள் பட்டியலில் இடம் பெற்று வருகிறார். இந்திய அணியிலும் இடம் பெற்றார்.

வேகப் பந்து வீச்சு பிரியை

வேகப் பந்து வீச்சு பிரியை

இவருக்கு பாஸ்ட் பால்தான் அடிக்கப் பிடிக்கும். எத்தனை வேகமாக வந்தாலும் சரி தைரியமாக எதிர்கொள்வார். வெளுத்து வாங்குவார். நிலைத்து நின்று விட்டால் அவுட்டாக்குவது கஷ்டம்.

போலீஸாக்க ஆசைப்பட்ட பெற்றோர்

போலீஸாக்க ஆசைப்பட்ட பெற்றோர்

வேதா சிறுவயது முதலே துணிச்சல் அதிகம் மிக்கவராக இருந்ததால் அவரை ஐஏஎஸ் அல்லது ஐபிஎஸ் ஆக்க பெற்றோர் விரும்பினார். ஆனால் வேதா யூ டர்ன் போட்டு கிரிக்கெட்டுக்கு வந்து விட்டார். 12 வயதிலேயே கராத்தேவில் கருப்பு பெல்ட் வாங்கியுள்ளார்.

எதிராளிகளுக்கு கஷ்டம்தான்

எதிராளிகளுக்கு கஷ்டம்தான்

வேதா வேகப் பந்து வீச்சை எளிதில் சமாளிக்கக் கூடியவர். எனவே அவர் நிலைத்து நின்று ஆடி விட்டால், எதிராளிகளுக்கு கஷ்டம் என்று சொல்கிறார் வேதாவின் தனிப்பட்ட டிரெய்னர் சேட்.

Story first published: Thursday, June 22, 2017, 15:53 [IST]
Other articles published on Jun 22, 2017
English summary
Indian player Veda Krishnamurthy will be a big threat to the pacers in the Women's world cup cricket 2017.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X