For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வாவ்.. வரலாறு படைத்த இந்தியா... பாராட்டு மழையில் கோஹ்லி, அஸ்வின்!

நார்த் சவுன்ட், ஆன்டிகுவா: மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த வெற்றியைப் பெற்றுள்ளது. இதற்காக கேப்டன் விராத் கோஹ்லிக்கும், பந்து வீச்சாளர் ஆர். அஸ்வின் உள்ளிட்ட அணியினருக்கும் பாராட்டுகள் குவிந்து கொண்டுள்ளன.

கோஹ்லி போட்ட இரட்டை சதம், அஸ்வின் அசத்திய சதம் மற்றும் 2வது இன்னிங்ஸில் எடுத்த 7 விக்கெட்டுகள் ஆகியவை சேர்ந்து மேற்கு இந்தியத் தீவுகளை புரட்டிப் போட்டு விட்டது.

இந்தியா ஒரு இன்னிங்ஸ் 92 ரன்கள் வித்தியாசத்தில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. இந்தியா வெளிநாடு ஒன்றில் பெற்ற மிகப் பெரிய வித்தியாசத்திலான டெஸ்ட் வெற்றி இதுதான் என்பதால் இந்திய அணிக்குப் பாராட்டுகள் குவிந்து கொண்டுள்ளன.

அபாரமான அஸ்வின்

அபாரமான அஸ்வின்

அஸ்வின்தான் இந்த போட்டியின் நிஜமான நாயகன். இந்தியாவின் பேட்டிங்கின்போது அசத்தலாக சதம் போட்ட அவர், மேற்கு இந்தியத் தீவுகளை முழுமையாக முடக்கிப் போட்டு அசத்தி விட்டார்.

பெஸ்ட் பவுலிங்

பெஸ்ட் பவுலிங்

இதுவரை இல்லாத அளவுக்கு இப்போட்டியில் அஸ்வினின் பந்து வீச்சு இருந்தது. 2வது இன்னிங்ஸில் அவர் 7 விக்கெட்களை அள்ளினார். வெளிநாடு ஒன்றில் அஸ்வினின் சிறந்த பந்து வீச்சு இதுதான்.

17வது முறையாக

17வது முறையாக

அஸ்வின் 17வது முறையாக 5 விக்கெட் வீழ்த்தியுள்ளார். மொத்தம் அவர் 33 டெஸ்ட் போட்டிகளே விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது. தனது பேட்டிங்கின்போது அஸ்வின் 113 ரன்களைக் குவித்திருந்தார். அதுவும் 6வது நிலை வீரராக வந்து. இது அவருக்கு 3வது டெஸ்ட் சதமாகும்.

ஜடேஜாவின் பாராட்டு

இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா வெளியிட்டுள்ள டிவிட்டில், இந்த நூற்றாண்டின் மேன் ஆப் தி மேட்ச் அஸ்வின்தான் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

வி.வி.எஸ் லட்சுமண்

முன்னாள் டெஸ்ட் ஜாம்பவான் விவிஎஸ் லட்சுமண் வெளியிட்டுள்ள டிவிட்டில் விராத் கோஹ்லி போட்டிக்குப் பின்னர் பேசிய பேச்சு என்னை வெகுவாக கவர்ந்தது என்று கூறி கோஹ்லியைப் பாராட்டியுள்ளார்.

அஸ்வின் இருந்தால் "வின்"தான்.. ஷேவாக்

அஸ்வின் போன்ற ஒரு பந்து வீச்சாளர் இருக்கும்போது நீங்கள் நிச்சயம் வெல்வீர்கள். அஸ்வினுக்கு வாழ்த்துகள். அருமையான போட்டி அஸ்வினுக்கு, கிரேட் வெற்றி என்று வீரேந்திர ஷேவாக் பாராட்டியுள்ளார்.

Story first published: Monday, July 25, 2016, 9:50 [IST]
Other articles published on Jul 25, 2016
English summary
India registered their biggest ever overseas win in Tests after defeating West Indies by an innings and 92 runs on the fourth day of the first Test here at Sir Vivian Richards Stadium on Sunday (July 24).
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X