அடுத்த 10 வருஷத்துக்கு நாமதான் கிங்.. அடித்து சொல்கிறார் சச்சின்! #500thTest #INDvNZ

கான்பூர்: அடுத்த பத்து வருடங்கள் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி ஆதிக்கம் தொடரும் என்று ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கருத்து தெரிவித்தார்.

இந்தியா தனது 500வது டெஸ்ட் போட்டியில் இன்று நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. டாசில் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது. கான்பூரில் நடைபெற்றுவரும் வரலாற்று சிறப்பு மிக்க இப்போட்டியை நேரில் காண சச்சின் டெண்டுல்கர் மைதானத்திற்கு சென்றுள்ளார்.

India Test team is 'fabulous', will dominate world cricket for 10 years: Sachin Tendulkar

அங்கிருந்தபடி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலுக்கு சச்சின் அளித்த பேட்டியில் இப்படி கூறியுள்ளார்: இந்திய கிரிக்கெட் அணி இளைஞர்களால் நிரம்பியுள்ளது. மிகச்சிறந்த அணியாகவும் உள்ளது.

அனைத்து வகை திறமைகளையும் ஒருங்கே கொண்ட அணியாக இந்தியா உள்ளது. இளம் வீரர்கள் நாள்பட, நாள்பட இன்னும் பக்குவப்படுவார்கள். அது இந்திய டெஸ்ட் அணியை வலுப்படுத்திக்கொண்டே இருக்கும்.

வீரர்களின் வயதை வைத்து பார்க்கும்போது, அடுத்த எட்டு முதல் 10 வருடங்களுக்கு இந்திய டெஸ்ட் அணி உலக டெஸ்ட் அரங்கில் தனது ஆதிக்கத்தை தொடரும் என்று கணிக்க முடிகிறது என்றார்.

முன்னதாக கோஹ்லி கூறுகையில், 500வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் கேப்டனாக இருப்பது பெருமையாக உள்ளது. மேற்கிந்திய தீவுகளில் சிறப்பாக டெஸ்ட் போட்டிகளை ஆடினோம். அன்த நம்பிக்கையோடு நியூசிலாந்த ைஎதிர்கொள்கிறோம் என்றார்.

English summary
Batting legend Sachin Tendulkar today (September 22) heaped praise on the current Indian Test squad and expected them to dominate world cricket for the next 8 to 10 years. Sachin Tendulkar has praised the current Test team Sachin Tendulkar has praised the current Test team "It is a fabulous combination that we have. They are all young. They will be around for 8 to 10 years and dominate world cricket. We have the firepower and good balance. They should keep themselves in good shape," Tendulkar told "Star Sports" TV on Thursday (September 22) during the 1st day's play as India batted against New Zealand.
Please Wait while comments are loading...

Videos