For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வங்கதேசத்துக்கு "டூர்" போகிறது இந்தியா...!

டெல்லி: இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடவுள்ளது.

ஒரு டெஸ்ட், 3 ஒரு நாள் போட்டிகளில் இரு அணிகளும் ஆடவுள்ளன. உலகக் கோப்பைத் தொடருக்குப் பின்னர் இந்தியா முதல் முறையாக கலந்து கொள்ளும் சர்வதேச கிரிக்கெட் தொடர் இதுதான்.

India to tour Bangladesh next month; Here is the full list

இதுகுறித்த விவரம்:

  • ஜூன் 7ம் தேதி இந்தியா, வங்கதேசத்திற்குக் கிளம்புகிறது.
  • முதல் டெஸ்ட் போட்டி பதுல்லாவில் நடைபெறும். இங்கு 9 வருடங்களுக்குப் பிறகு டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ளது.
  • ஜூன் 10ம் தேதி முதல் டெஸ்ட் போட்டி தொடங்கும்.
  • டெஸ்ட் போட்டிக்கு முன்பாக இந்திய அணி பயிற்சி ஆட்டம் ஒன்றிலும் ஆடும்.
  • இரு அணிகளும் மொத்தம் 3 ஒரு நாள் போட்டிகளிலும் ஆடவுள்ளன.
  • ஜூன் 18, 21, 24 ஆகிய தேதிகளில் ஒரு நாள் போட்டிகள் நடைபெறும்.
  • மிர்பூரில் 3 ஒரு நாள் போட்டிகளும் நடைபெறும்.
  • ஜூன் மாதம் மழைக்காலம் என்பதால் 3 ஒரு நாள் போட்டிகளுக்கும் ரிசர்வ் தினங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
  • ஜூன் 26ம் தேதி இந்திய அணி தனது தொடரை முடித்துக் கொண்டு தாயகம் திரும்பும்.
  • இந்தியத் தொடரைத் தொடர்ந்து ஜூலை - ஆகஸ்ட் மாத வாக்கில் தென் ஆப்பிரிக்க அணி, வங்கதேசம் வருகிறது.
  • தற்போது வங்கதேசத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
  • பாகிஸ்தான் அணியை 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் 3-0 என்ற கணக்கில் வங்கதேசம் வீழ்த்தியுள்ளது.
  • டுவென்டி 20 போட்டியிலும் வீழ்த்தியது.
  • 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டி டிராவில் முடிவடைந்தது.
Story first published: Tuesday, May 5, 2015, 16:15 [IST]
Other articles published on May 5, 2015
English summary
The Indian cricket team will tour Bangladesh next month to play a one-off Test and three one-day internationals. India will leave for Bangladesh on June 7 and the first Test will be hosted in Fatullah - the venue will host a Test after nine years - starting June 10.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X