For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ரோஜர் பெடரரை பார்த்து கத்துக்கோங்க.. ரெஸ்ட் எடுக்கும் கிரிக்கெட் வீரர்களால் கங்குலி கடுப்பு!

By Veera Kumar

கொல்கத்தா: கிரிக்கெட் வீரர்கள் சோர்வை காரணம் காட்டி விளையாடமல் இருக்க கூடாது. டென்னி்ஸ் வீரர் ரோஜர் பெடரரும்தான் ஆண்டு முழுவதும் விளையாடுகிறார். அதற்காக அவர் ஓய்வா எடுத்துக்கொள்கிறார் என்று முன்னாள் கேப்டனும், பிசிசிஐ அறிவுரை குழு உறுப்பினருமான சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கவனம்

இலங்கையில் கவனம்

செய்தி நிறுவனம் ஒன்றுக்கு இன்று அளித்துள்ள பேட்டியில் கங்குலி கூறியுள்ளதாவது: ஜிம்பாப்வேயில் டி20 தொடரை இந்திய அணி டிரா செய்திருக்கலாம், ஆனால், அதையே நினைத்துக் கொண்டிருக்க முடியாது. சீனியர் வீரர்கள் இல்லாமல் ஜிம்பாப்வே டூரை இந்தியா முடித்துள்ளது. இப்போது இலங்கை சுற்றுப் பயணத்தில்தான் இந்திய வீரர்கள் முழு கவனமும் இருக்க வேண்டும்.

பேட்டிங்

பேட்டிங்

ஆஸ்திரேலியாவில் இந்திய அணி மேற்கொண்டிருந்த சுற்றுப் பயணம், இலங்கை டூரின்போது கை கொடுக்கும். கோஹ்லி, முரளி விஜய், ரஹானே, ராகுல் போன்ற வீரர்கள் சிறப்பான பேட்டிங் திறமையை வெளிப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

ரவி சாஸ்திரி

ரவி சாஸ்திரி

ஜிம்பாப்பே சென்ற அணியுடன் பயணிக்காத, அணியின் இயக்குநர் ரவி சாஸ்திரி, இலங்கை செல்லும் இந்திய அணியுடன் பயணிக்க உள்ளார். 3 உதவி பயிற்சியாளர்களும் உடன் செல்வார்கள். இலங்கை சுற்றுப் பயணத்துக்கு பிறகு, அணியின் தலைமை பயிற்சியாளராக யாரை நியமிப்பது என்பது குறித்து ஆலோசனை நடத்தப்படும்

குறுகிய காலமே ஆட்டம்

குறுகிய காலமே ஆட்டம்

ஜிம்பாப்வேக்கு இந்திய அணி சுற்றுப் பயணம் செய்தபோது சோர்வு காரணமாக மூத்த வீரர்கள் ஓய்வில் இருந்தனர். ஒரு கிரிக்கெட் வீரரின் அதிகபட்ச விளையாடும் காலம், 14 முதல் 15 வருடங்களாகத்தான் உள்ளது. இந்த காலகட்டத்தில் விளையாட்டில்தான் முழு கவனத்தையும் செலுத்த வேண்டும்.

நிர்வகிக்க தெரியனும்

நிர்வகிக்க தெரியனும்

ஒவ்வொரு விலையாட்டு வீரரும் இதுபோன்ற சோர்வுக்கு உள்ளாகுவோர்கள்தான். ஒரு தொழில்முறை விளையாட்டு வீரருக்கு இதை நிர்வகிக்க தெரிந்திருக்க வேண்டும். சமீபத்தில்தான் விம்பிள்டன் போட்டிகளை நேரில் பார்த்துவிட்டு வந்தேன். டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் ஆட்டத்தை கண்டு களித்தேன்.

ரோஜர் பெடரரை பாருங்கள்

ரோஜர் பெடரரை பாருங்கள்

ரோஜர் பெடரர், ஆண்டு முழுவதும் தொடர்ந்து ஆடிக் கொண்டுதான் உள்ளார். பிரெஞ்ச் ஓபன் உட்பட பல வகை தொடர்களில் அவர் ஆடி வருகிறார். தொழில்முறை ஆட்டக்காரர்கள், ஓய்வை விரும்ப கூடாது. இவ்வாறு கங்குலி கூறினார். கங்குலி 311 ஒருநாள் போட்டிகளில் ஆடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, July 28, 2015, 17:19 [IST]
Other articles published on Jul 28, 2015
English summary
Former India cricket captain Sourav Ganguly believes the experience of the Australia tour last winter will have matured and helped the likes of Virat Kohli, Murali Vijay and others for the upcoming Test series against Sri Lanka.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X