For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

"சாம்பியன்" பட்டம்... கொல்கத்தா, ராஜஸ்தான், டெக்கான், ஹைதராபாத் "சென்டம்"

பெங்களூரு: ஐபிஎல் சாம்பின் பட்டத்தைத் தட்டிச் சென்ற அணிகளில் நான்கு அணிகள் மட்டுமே நூறு சதவீத வெற்றியை சுவைத்துள்ளன.

அந்த நான்கு பேர் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகியவை ஆகும்.

அதிகபட்சமாக இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்ற ஒரே அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் விளங்கினாலும் கூட அதன் வெற்றி சதவீதம் வெறும் 33.33 சதவீதம்தான்.

SUCCESS RATES OF TEAMS IN IPL FINAL
Team Finals played Won Lost Year(s) Success Per cent
Kolkata Knight Riders 2 2 0 2012, 2014 100%
Rajasthan Royals 1 1 0 2008 100%
Deccan Chargers 1 1 0 2009 100%
Sunrisers Hyderabad 1 1 0 2016 100%
Mumbai Indians 3 2 1 won in 2013, 2015; lost in 2010 66.66%
Chennai Super Kings 6 2 4 won in 2010, 2011; lost in 2008, 2012, 2013, 2015 33.33%
Kings XI Punjab 1 0 1 2014 0.00%
Royal Challengers Bangalore 3 0 3 2009, 2011, 2016 0.00%
6வது சாம்பியன் சன்ரைசர்ஸ்

6வது சாம்பியன் சன்ரைசர்ஸ்

ஐபிஎல் தொடரின் 6வது சாம்பியன் சன்ரைசர்ஸ் ஹைதராபாத். ஹைதரபாத்தைச் சேர்ந்த ஒரு அணி சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் செல்வது இது 2வது முறையாகும்.

2வது ஹைதராபாத் அணி

2வது ஹைதராபாத் அணி

இதற்கு முன்பு 2009ம் ஆண்டு ஹைதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ் அணி சாம்பியனாகியிருந்தது. அப்போது கேப்டனாக இருந்தவர் ஆஸ்திரேலியாவின் கில்கிறைஸ்ட் ஆவார். சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனாக தற்போது இருக்கும் டேவிட் வார்னரும் ஆஸ்திரேலியர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

பெங்களூரின் துரதிர்ஷ்டம்

பெங்களூரின் துரதிர்ஷ்டம்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இதுவரை 3 முறை இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றும் கூட மூன்று முறையும் தோல்வியையே தழுவியுள்ளது.

நான்கு பெஸ்ட் அணிகள்

நான்கு பெஸ்ட் அணிகள்

சாம்பியன் பட்டம் வெல்வதில் 100 சதவீத வெற்றியைப் பெற்றவை நான்கு அணிகள் மட்டுமே. அவை கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ் ஹைதராபாத், சன் ரைசர்ஸ் ஹைதராபாத்.

கொல்கத்தா 2 முறை

கொல்கத்தா 2 முறை

கொல்கத்தா அணி 2012, 2014 ஆகிய இரு ஆண்டுகளில் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது. இரண்டு முறையும் அது கோப்பையை தட்டிச் சென்றது. அதன் வெற்றி சதவீதம் 100 சதவீதமாகும்.

ராஜஸ்தான் - டெக்கான்- சன்ரைசர்ஸ்

ராஜஸ்தான் - டெக்கான்- சன்ரைசர்ஸ்

அதேபோல ராஜஸ்தான் அணி 2008ல் இறுதிப் போட்டிக்கு வந்து அதில் வெற்றியும் பெற்றது. ராஜஸ்தான்தான் முதல் ஐபிஎல் சாம்பின் ஆகும். டெக்கான் சார்ஜர்ஸ் அணி 2009ல் தகுதி பெற்று கோப்பையைத் தட்டிச் சென்றது. தற்போது சன்ரைசர்ஸ் அணி 2016ல் முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு வந்து கோப்பையை வென்றுள்ளது.

மும்பை இந்தின்ஸ் 66.66%

மும்பை இந்தின்ஸ் 66.66%

மும்பை இந்தியன்ஸ் அணி 2013, 2015, 2010 ஆகிய ஆண்டுகளில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இதில் 2010ல் அது தோல்வியுற்றது. மற்ற இரு ஆண்டுகளிலும் சாம்பியன் ஆனது. அதன் வெற்றி சதவீதம் 66.66 சதவீதமாகும்.

சென்னை சூப்பர் கிங்ஸ்

சென்னை சூப்பர் கிங்ஸ்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மட்டுமே அதிக முறை இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்ற ஒரே அணியாகும். அதாவது 6 முறை அது இறுதிப் போட்டிக்குப் போயுள்ளது. 2008, 2010, 2011, 2012, 2013, 2015 ஆகிய ஆண்டுகளில் அது இறுதிப் போட்டிக்கு வந்தது. ஆனால் 2010, 11 ஆகிய இரு முறை மட்டுமே அது சாம்பியன் ஆனது. அதன் வெற்றி சதவீதம் 33.33 சதவீதம்தான்.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் - பெங்களூருக்கு முட்டை!

கிங்ஸ் லெவன் பஞ்சாப் - பெங்களூருக்கு முட்டை!

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 2014ல் இறுதிப் போட்டிக்கு வந்தது. ஆனால் தோல்வியைத் தழுவியது. இதேபோல ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 2009, 2011, 2016 ஆகிய ஆண்டுகளில் இறுதிப் போட்டிக்கு வந்தது. ஆனால் தோல்வியுற்றது. இரு அணிகளின் வெற்றி சதவீதம் ஜீரோவாகும்.

Story first published: Tuesday, May 31, 2016, 11:16 [IST]
Other articles published on May 31, 2016
English summary
Sunrisers Hyderabad (SRH) became the latest champions of the Indian Premier League (IPL) when they defeated Royal Challengers Bangalore (RCB) by eight runs in the final of the ninth edition of the tournament played at the Chinnaswamy Stadium on Sunday (May 29).
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X