For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பஞ்சாப்பை பதம் பார்த்த கிறிஸ் கெய்ல் புயல்.. 138 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் அபார வெற்றி!

By Veera Kumar

பெங்களூர்: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் விராட் கோஹ்லி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், பெய்லி தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் விளையாடின. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பீல்டிங்கைத் தேர்வு செய்ய, பெங்களூர் அணி முதலில் களமிறங்கியது.

துவக்க வீரர்களாக அதிரடி பேட்ஸ்மேன்களான கிறிஸ் கெய்ல், விராட் கோஹ்லி களமிறங்கி பஞ்சாப் பந்து வீச்சாளர்களை திணறடித்தனர். குறிப்பாக கிறிஸ் கெயில் ஆட்டத்தில் அனல் பறந்தது.

22 பந்துகளில் அரை சதம்

22 பந்துகளில் அரை சதம்

விறுவிறுப்பாக ஆடிய கெயில், 22 பந்துகளில் 4 பவுண்டரி, 5 சிக்சருடன் அரை சதம் அடித்தார். விராட் கோஹ்லியும் தனது பங்களிப்பை செய்ய, இந்த ஜோடி 58 பந்துகளில் 100 ரன்னை எட்டியது. அணியின் ஸ்கோர் 119 ஆக இருக்கும்போது, கோஹ்லி 32 ரன்களில் அவுட் ஆனார்.

டிவில்லியர்ஸ்

டிவில்லியர்ஸ்

அதைத் தொடர்ந்து டிவில்லியர்ஸ், கெய்லுடன் இணைய, ஆட்டம் மேலும் விறுவிறுப்படைந்தது. புயல் வேக பேட்டிங்கை தொடர்ந்த கெயில், சதம் கடந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். மறுமுனையில் டிவில்லியர்சும் வெளுத்து வாங்கினார். கரன்வீர் சிங் வீசிய 15வது ஓவரில் டிவில்லியர்ஸ் ஹாட்ரிக் சிக்சர் அடித்து அசத்தினார்.

ஒருவழியாக கெய்ல் அவுட்

ஒருவழியாக கெய்ல் அவுட்

இந்நிலையில், 57 பந்துகளில் 117 ரன்கள் விளாசிய கெயில், அக்சர் பட்டேல் வீசிய 17வது ஓவரின் கடைசி பந்தை அடிக்க முற்பட்டு அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார். அப்போது அணியின் ஸ்கோர் 190. கிறிஸ் கெயில் ரன்மழை ஓய்ந்த நிலையில், தினேஷ் கார்த்திக் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் டிவில்லியர்சுடன் இளம் வீரர் சர்பராஸ் கான் களமிறங்க, பெங்களூர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 226 ரன்கள் குவித்தது. டிவில்லியர்ஸ் 47 ரன்களுடனும், சர்பராஸ் கான் 11 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

மோசமான தோல்வி

மோசமான தோல்வி

இதையடுத்து 227 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி விளையாட தொடங்கியது.

இமாலய இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி,13.4 ஓவர் மட்டுமே தாக்குப்பிடித்த பஞ்சாப் அணி 88 ரன்களில் சுருண்டது. அந்த அணியில் 7 வீரர்கள் கிளீன் போல்டு ஆனது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் 138 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றியை சுவைத்தது. இதனால், அடுத்த சுற்றான பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை பஞ்சாப் இழந்தது.

Story first published: Thursday, May 7, 2015, 10:36 [IST]
Other articles published on May 7, 2015
English summary
Chris Gayle's 57-ball 117 propelled Royal Challengers to 226 before S Aravind and Mitchell Starc snuffed out Kings XI Punjab's pursuit inside 14 overs. Save for a belated cameo from Axar Patel, there was flimsy resistance from the visitors as they folded up 138 runs short. The defeat all but ended Kings XI's chances of making the playoffs.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X