For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தோல்வி காணாத ராஜஸ்தானுடன் பஞ்சாப் மோதல்! ப்ரீத்தி ஜிந்தா கன்னக்குழி காண ரசிகர்கள் ஆர்வம்

By Veera Kumar

அகமதாபாத்: கடந்த ஆண்டு இறுதி போட்டியாளரான கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும், நடப்பு சீசனில் தோல்வியே காணாத ராஜஸ்தான் ராயல்சுடன் இன்று மோதுகிறது.

நடப்பு சீசனில் 5 போட்டிகளிலும் வெற்றியே கண்ட ராஜஸ்தானுடன், அகமதாபாத்தில், இன்று பஞ்சாப் பலப் பரிட்சை நடத்துகிறது.

அதேநேரம், ப்ரீத்தி ஜிந்தாவின், பஞ்சாப் அணியோ, 4 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதனால் கன்னக்குழியழகி ப்ரீத்தி ஜிந்தாவின் முகத்தில் அடிக்கடி சிரிப்பை பார்க்க முடியவில்லை. ஜிந்தா இன்று விழுந்து விழுந்து சிரிக்கும் அளவுக்கு பஞ்சாப் பட்டையை கிளப்ப வேண்டும் என்பது ரசிகர்கள் அவா.

எங்கு, எப்போது?

எங்கு, எப்போது?

இரு அணிகளும் அகமதாபாத், சர்தார் பட்டேல் ஸ்டேடியத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்கும் போட்டிகளில் மோதுகின்றன.

இந்தியாவில் எதில் பார்க்கலாம்?

இந்தியாவில் எதில் பார்க்கலாம்?

சோனி கிக்ஸ் சேனலில், தமிழ், தெலுங்கு, சோனி ஆத் சேனலில் வங்காளம், சோனி மேக்ஸ் சேனலில் ஹிந்தி, சோனி சிக்ஸ் சேனலில் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.

முக்கிய வீரர்கள்

முக்கிய வீரர்கள்

ராஜஸ்தான் ராயல்ஸ்-அஜிங்ய ரஹானே, ஷேன் வாட்சன், ஸ்டீவ் ஸ்மித், பிரவீன் தாம்பே, ஜேம்ஸ் பாக்னர்.

பஞ்சாப்-ஜார்ஜ் பெய்லி, கிளென் மேக்ஸ்வெல், சந்தீர் ஷர்மா, மிட்சேல் ஜான்சன்.

நேருக்கு நேர்

நேருக்கு நேர்

ராஜஸ்தான் 9 முறையும், பஞ்சாப் 5 முறையும் வெற்றி பெற்றுள்ளன. 2014ல் ராஜஸ்தானுக்கு எதிரான இரு போட்டிகளிலும் பஞ்சாப், வெற்றி பெற்றது.

புள்ளி பட்டியல்

புள்ளி பட்டியல்

ராஜஸ்தான் 5 போட்டிகளிலும் வென்று, முதலிடத்திலுள்ளது. பஞ்சாப் 6வது ரேங்கில் உள்ளது. 1 வெற்றி, 3 தோல்விகளாகும்.

Story first published: Tuesday, April 21, 2015, 13:13 [IST]
Other articles published on Apr 21, 2015
English summary
Last year's finalists Kings XI Punjab (KXIP) have their task cut out as they aim to halt the winning run of Rajasthan Royals (RR) in tonight's Indian Premier League 2015 (IPL 8) game at Sardar Patel Stadium here.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X