For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ராஜஸ்தான்-பெங்களூர் இன்று மோதல்..புயல் போல வருகிறார் கெய்ல்!

By Veera Kumar

அகமதாபாத்: ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான ஆட்டம் இன்று நடக்கிறது. சிஎஸ்கே போட்டியில் களமிறக்கப்படாத பெங்களூருவின் அதிரடி வீரர் கெய்ல், இப்போட்டியில் களம் காண்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐந்து போட்டிகளை தொடர்ச்சியாக வென்ற ராஜஸ்தான், கடந்த போட்டியில், பஞ்சாப்பிடம், சூப்பர் ஓவரில் தோற்றது. மற்றபடி, ராஜஸ்தான்தான், இன்றைய ஆட்டத்தின் ஃபேவரைட்டாக பார்க்கப்படுகிறது. ஆனால் ஸ்டார்க், கெய்ல், டிவில்லியர்ஸ் கலக்கினால், பெங்களூரு வெற்றிவாகை சூடும்.

யார்-யார்?

யார்-யார்?

ராஜஸ்தான் ராயல்ஸ்-பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் இன்று பலப் பரிட்சை நடத்த உள்ளன. பெங்களூருவுக்கு கோஹ்லியும், ராஜஸ்தானுக்கு ஷேன் வாட்சனும் தலைமை தாங்குகிறார்கள்.

எங்கு, எப்போது?

எங்கு, எப்போது?

அகமதாபாத் நகரிலுள்ள சர்தார் பட்டேல் ஸ்டேடியத்தில், ஏப்ரல் 24ம்தேதி, இரவு 8 மணிக்கு போட்டி தொடங்குகிறது.

இந்தியாவில் எதில் பார்க்கலாம்?

இந்தியாவில் எதில் பார்க்கலாம்?

சோனி கிக்ஸ் சேனலில், தமிழ், தெலுங்கு, சோனி ஆத் சேனலில் வங்காளம், சோனி சிக்ஸ் சேனலில் ஆங்கிலம், சோனி மேக்ஸ் சேனலில் ஹிந்தியிலும் கமெண்டரியுடன், நேரடி ஒளிபரப்பை காணலாம்.

முக்கிய வீரர்கள்

முக்கிய வீரர்கள்

ராஜஸ்தான் ராயல்ஸ்-அஜிங்ய ரஹானே, ஷேன் வாட்சன், ஸ்டீவ் ஸ்மித், ஜேம்ஸ் பால்க்னர், பிரவீன் தாம்பே. இதில் ரஹானேதான், நடப்பு சீசனில் அதிக ரன் குவித்துள்ள வீரராகும்.

பெங்களூரு ராயல்சேலஞ்சர்ஸ்-கிறிஸ் கெய்ல், விராட் கோஹ்லி, டிவில்லியர்ஸ், மிட்சேல் ஸ்டார்க்.

நேருக்கு நேர்

நேருக்கு நேர்

இவிரு அணிகளும் மோதிய போட்டிகளில், ராஜஸ்தான் ராயல்ஸ் 7 முறையும், ஆர்சிபி 6 முறையும் வென்றுள்ளன. இம்முறையும், ராஜஸ்தான் கையே ஓங்கியுள்ளது.

புள்ளி பட்டியல்

புள்ளி பட்டியல்

நடப்பு சீசனில் 5 வெற்றி, ஒரு தோல்வியுடன், ராஜஸ்தான் புள்ளி பட்டியலில் முதலிடத்திலும், 1 வெற்றி, 3 தோல்விகளுடன், ஆர்சிபி 7வது இடத்திலும் உள்ளன.

Story first published: Friday, April 24, 2015, 15:46 [IST]
Other articles published on Apr 24, 2015
English summary
April 24: Chris Gayle is likely to return to Royal Challengers Bangalore's (RCB) Playing XI as they face in-form Rajasthan Royals (RR) tonight at Sardar Patel Stadium in IPL 2015.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X