For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தோல்விகளுக்கு முற்றுப் புள்ளி வைக்குமா ராஜஸ்தான் ராயல்ஸ்?

கொல்கத்தா: அடுத்தடுத்த தோல்விகளால் பாதிப்படைந்துள்ள ராஜஸ்தான் ராயல்ஸும், கொல்கத்தா நைட் ரைடர்ஸும் இன்று கொல்கத்தாவில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மோதவுள்ளன.

சொந்த மைதானத்தில் விளையாடுவதால் வெற்றிக்கான வாய்ப்புகளை அதிகம் எதிர்நோக்கியுள்ளது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. அதேசமயம், இப்போட்டியில் வென்று மீண்டும் முதலிடத்தைப் பிடிக்க ராஜஸ்தான் ராயல்ஸும் முயலும் என்று நம்பலாம்.

தங்களது கடைசி போட்டியில் கொல்கத்தா அணி, சன் ரைசர்ஸ் ஹைதராபாத்திடம் தோல்வியைத் தழுவியது. அதேபோல ராஜஸ்தான் அணியை, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் வீழ்த்தியிருந்தது.

ஈடன் கார்டன் மைதானத்தில்

ஈடன் கார்டன் மைதானத்தில்

இப்போட்டி ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும். இன்றைய இரு போட்டிகளில் முதல் போட்டியாக இப்போட்டி நடைபெறும். மழை காரணமாக போட்டி தாமதமானது.

சோனி டிவியில்

சோனி டிவியில்

இப்போட்டியை தமிழில் சோனி கிக்ஸ் டிவியிலு்ம், இந்தியில் சோனி மேக்ஸ், ஆங்கிலத்தில் சோனி சிக்ஸ், பெங்கலாயில் சோனி ஆத் சானல்களில் பார்த்து ரசிக்கலாம்.

முக்கிய வீரர்கள்

முக்கிய வீரர்கள்

கொல்கத்தா அணிக்கு கெளதம் கம்பீர், யூசுப் பதான், சூர்யகுமார் யாதவ், ஆண்ட்ரே ரஸ்ஸல், மார்னி மார்க்கல் ஆகியோரும், ராஜஸ்தான் அணிக்கு அஜிங்கியா ரஹானே, ஷான் வாட்சன், ஸ்டீவ் ஸ்மித், ஜேம்ஸ் பால்க்னர், பிரவீன் தாம்பே ஆகியோரும் முக்கிய வீரர்களாக உள்ளனர்.

ராஜஸ்தான் ஆதிக்கம்

ராஜஸ்தான் ஆதிக்கம்

இரு அணிகளும் இதுவரை மோதிய போட்டிகளில் எட்டில் ராஜஸ்தானும், ஆறில் கொல்கத்தாவும் வெற்றி பெற்றுள்ளன. ராஜஸ்தான் அணியின் ஆதிக்கமே அதிகமாக உள்ளது.

2 - 3

2 - 3

நடப்பு தொடரில் புள்ளிகள் பட்டியலில் ராஜஸ்தான் அணி 2வது இடத்தில் உள்ளது. மொத்தம் 5 வெற்றிகளையும், 2 தோல்விகளையும் அது சந்தித்துள்ளது. மறுபக்கம் கொல்கத்தா அணி 3 வெற்றி, 2 தோல்விகளுடன் 3வது இடத்தில் இருக்கிறது.

Story first published: Sunday, April 26, 2015, 16:26 [IST]
Other articles published on Apr 26, 2015
English summary
Kolkata Knight Riders (KKR) will have to decide whether to play Sunil Narine or not against Rajasthan Royals in today's Match 25 in the Indian Premier League 2015 (IPL 8).
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X