For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அடுத்தடுத்து தோற்ற சூப்பர் கிங்ஸ்... "ஷாக்"கில் ரசிகர்கள்!

ஹைதராபாத்: சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் ஷாக்கில் உள்ளனர். அடுத்தடுத்து 2 தோல்வியை தங்களது அணி சந்தித்துள்ளது அவர்களை வருத்தமடைய வைத்துள்ளது.

முதலில் கொல்கத்தா நைட் ரைடர்ஸிடம் தோல்வியுற்றது சென்னை. அடுத்த போட்டியாக நேற்று சன் ரைசர்ஸ் ஹைதராபாத்திடம் தோல்வியைத் தழுவியது.

நேற்று ஹைதராபாத்தில் நடந்த போட்டியில் 22 ரன்கள் வித்தியாசத்தில் சென்னையைத் தோற்கடித்து விட்டது ஹைதராபாத்.

வார்னர் போட்ட அரை சதம்

வார்னர் போட்ட அரை சதம்

முதலில் பேட் செய்த டேவிட் வார்னர் அந்த அணிக்கு நல்ல தொடக்கத்தைக் கொடுத்து விட்டார். சிறப்பாக ஆடிய அவர் 61 ரன்களைக் குவித்தது ஹைதராபாத் அணி பெரும் ஸ்கோரை எட்ட வழி வகுத்து விட்டது.

மறுபக்கம் ஷிகர்

மறுபக்கம் ஷிகர்

மறுபக்கம் ஷிகர் தவன் சிறப்பாக ஆடி ஸ்கோர் ஏறுவதை பார்த்துக் கொண்டார். அவர் 37 ரன்கள் குவித்தார். அவரும், வார்னரும் சேர்ந்து முதல் விக்கெட்டுக்கு 37 ரன்களைச் சேர்த்தார்.

சாகசம் செய்த ஹென்றிக்ஸ்

சாகசம் செய்த ஹென்றிக்ஸ்

ஹென்றிக்ஸ் வந்த வேகத்தில் 9 பந்துகளில் 2 சிக்ஸர்கள், ஒரு சிக்ஸருடன் 19 ரன் சேர்த்துக் கொடுத்து வெளியேறினார். மறுபக்கம் இயான் மார்கன் அதிரடியாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டார்.

மோர்கன் - ஓஜா

மோர்கன் - ஓஜா

இயான் மோர்கன் 27 பந்துகளில் 32 ரன்களைக் குவித்தார். அவருடன் நமன் ஓஜா துணை நின்று சிறப்பாக ஆடி 12 பந்துகளில் 20 ரன்களைக் குவித்தார். இது ஸ்கோர் வேகமாக ஏற உதவியாக அமைந்தது.

லேட்டாக பிரேக் கொடுத்த பிராவோ

லேட்டாக பிரேக் கொடுத்த பிராவோ

பிராவோ கடைசி நேரத்தில் பவுலிங் செய்ததால் தேவையான பிரேக்கை உரிய நேரத்தில் கொடுக்க முடியாமல் போனது. கடைசி நேரத்தில் அவர் 3 விக்கெட்களைச் சாய்த்தார். ஆனால் அதற்குள் ஹைதராபாத் அணி 192 ரன்களை எடுத்து விட்டது.

சொதப்பிய தொடக்க ஜோடி

சொதப்பிய தொடக்க ஜோடி

சென்னை அணியின் தொடக்க ஜோடி சேசிங்கில் சற்று சொதப்பியது. ஸ்மித் 21, மெக்கல்லம் 12 என விழ, ரெய்னா சற்று வேகம் காட்டி 23 ரன்களைக் குவித்து ஆட்டமிழந்தார்.

பாப் டு பிளஸ்ஸிஸ்

பாப் டு பிளஸ்ஸிஸ்

பாப் டு பிளஸ்ஸிஸ் 22 பந்துகளில் 33 ரன்கள் குவித்த நிலையில் ரன் அவுட் ஆனார். கேப்டன் டோணி வேகமாக ஆடி 16 ரன்களில் 20 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தாரா்.

பிராவோ போராட்டம் வீண்

பிராவோ போராட்டம் வீண்

கடைசி வரிசையில் பிராவோ கடுமையாகப் போராடிப் பார்த்தார். 20 பந்துகளில் 25 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அவருடன் 12 பந்துகளில் 14 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார் ஜடேஜா. ஆனாலும் 22 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத்திடம் வீழ்ந்தது சென்னை

அஸ்வின் இல்லாததால்

அஸ்வின் இல்லாததால்

அஸ்வின் இல்லாததால் ஸ்பின் சற்று தடுமாற்றத்துடன் காணப்படுகிறது. பவன் நேகி கை கொடுக்கிறார் என்றாலும் கூட உரிய நேரத்தில் விக்கெட்களைச் சாய்க்கவோ, ரன்களை நிறுத்தவோ அவர் தவறுகிறார்.

தொடக்க ஆட்டம் சோபிக்கவில்லை

தொடக்க ஆட்டம் சோபிக்கவில்லை

இதற்கு முந்தைய போட்டிகளில் தொடக்க ஆட்டம் சென்னையிடம் சூப்பராக இருக்கும். நேற்று சரியில்லாமல் போனதும் தோல்விக்கு முக்கியக் காரணம்.

ரன்களை வாரிக் கொடுத்த மோஹித்

ரன்களை வாரிக் கொடுத்த மோஹித்

மோஹித் சர்மா நேற்று நிறைய ரன்களைக் கொடுத்து விட்டார். இதனால் 20 ரன்கள் கூடப் போய் விட்டது. இதுவே நமது வீழ்ச்சிக்கு முக்கியக் காரணம்.

தொடர்ந்து முதலிடம்

தொடர்ந்து முதலிடம்

தற்போது 6 வெற்றி, 3 தோல்விகளுடன் சென்னை அணி தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. ஹைதராபாத் அணி 4 வெற்றி, 4 தோல்விகளுடன் 5வது இடத்தில் உள்ளது.

Story first published: Sunday, May 3, 2015, 11:37 [IST]
Other articles published on May 3, 2015
English summary
Put into bat, Warner (28-ball 61) and Shikhar Dhawan (37) stitched an 86-run opening stand to help SRH post 197 for seven in 20 overs. Warner (378 runs from 8 games) struck from the word go as the left-handed opener hit 11 fours and a six to register his 5th half-century of the tournament and get the orange cap from Rajasthan Royals' Ajinkya Rahane (339 from 9 matches). Backing their batsmen's effort, the bowlers also played their part to restrict CSK to 170 for six in 20 overs.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X