For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சமத்துப் பையன் சென்னை, ஊதாக் கலர் தொப்பி பிராவோ.. ஐபிஎல் விருதுகள் அறிவிப்பு!

By Veera Kumar

கொல்கத்தா: ஐபிஎல் இறுதி போட்டியில் நேற்று இரவு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 41 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றது.

அத்தோடு, 8வது ஐபிஎல் சீசன் முடிவுக்கு வந்தது. இந்த சீசனில் பல்வேறு அணிகள் மற்றும் வீரர்களால் படைக்கப்பட்ட சாதனைகள் மற்றும் பரிசுகள் பற்றிய ஒரு பார்வை:

ரூ.15 கோடி பரிசு

ரூ.15 கோடி பரிசு

சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரூ.15 கோடி பரிசுத் தொகை கிடைத்தது. இரண்டாவது இடம் பிடித்த சென்னை சூப்பர் கிங்ஸ் ரூ.10 கோடி பரிசை தட்டிச் சென்றது.

அதிக ரன்கள்

அதிக ரன்கள்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கேப்டன் டேவிட் வார்னர் அதிகப்படியான ஸ்கோர் அடித்ததற்காக ஆரஞ்சு தொப்பி பரிசு பெற்றார். மொத்தம் 14 இன்னிங்சுகளில் அவர் 562 ரன்களை விளாசியிருந்தார்.

பிராவோ

பிராவோ

அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியதற்கான ஊதா கலர் தொப்பி விருதை சென்னை அணியின் ட்வைன் பிராவோ தட்டிச் சென்றார். அவர், 16 இன்னிங்சுகளில் 26 விக்கெட்டுகளை சாய்த்தார். டெத் ஓவர்களில் சிறந்த பவுலிங் பங்களிப்பையும் அளித்தார்.

சிக்சர் மன்னன் கெய்ல்

சிக்சர் மன்னன் கெய்ல்

அதிகப்படியான சிக்சர்கள் விளாசியதற்காக பெங்களூர் அணி வீரர் கிறிஸ் கெய்ல் பரிசு பெற்றார். அவர் மொத்தம் 38 சிக்சர்களை விளாசியிருந்தார்.

இளம் வீரர்

இளம் வீரர்

சிறந்த இளம் வீரருக்கான விருது டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் ஸ்ரேயாஸ் ஐயருக்கு வழங்கப்பட்டது. 20 வயதான இந்திய வீரரான இவர் 14 போட்டிகளில் ஆடி 439 ரன்களை வாரிக் குவித்தார்.

இறுதி போட்டியில் கலக்கல்

இறுதி போட்டியில் கலக்கல்

மேன் ஆப் தி பைனல் விருது மும்பை அணி கேப்டன் ரோகித் ஷர்மாவுக்கு கிடைத்தது. குறைந்த பந்துகளில் அரை சதம் கடந்து அணியை வெற்றிபெறச் செய்ததற்காக அவருக்கு இருந்த விருது கிடைத்தது.

பைனல் சிக்சர்

பைனல் சிக்சர்

இறுதி போட்டியில் அதிக சிக்சர் அடித்தவருக்காக தனி விருது வழங்கப்பட்டது. அந்த விருதை மும்பை இந்தியன்ஸ் அணியின் கெய்ரன் பொல்லார்ட் தட்டிச் சென்றார். அவர் 3 சிக்சர்கள் விளாசியிருந்தார்.

சமத்து பையன் சென்னை

சமத்து பையன் சென்னை

வம்பு தும்பு செய்யாமல், ஒழுக்கமாக, சமத்தாக ஆடியதற்கான விருது ஃபேர்பிளே விருதாகும். இந்த விருது வழக்கம்போல சென்னை சூப்பர் கிங்ஸ்சுக்குதான் கிடைத்தது. இத்தனைக்கும் கேப்டன் டோணி, அம்பயர் முடிவை விமர்சனம் செய்து அபராதத்திற்கு உள்ளாகியிருந்தார். ஆனால், பிற அணிகள் இதைவிட அதிக வம்புகளை செய்திருந்தது.

சிறந்த கேட்சர்

சிறந்த கேட்சர்

ஐபிஎல் சீசன் 8ல், சிறந்த கேட்ச்சுக்கான விருதை சென்னை வீரர் பிராவோ தட்டிச் சென்றார். பல்வேறு அருமையான கேட்சுகள் பிடிக்கப்பட்டிருந்தாலும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பவுண்டரி எல்லையில் பிராவோ பிடித்த அருமையான கேட்சுக்காக இந்த விருது கிடைத்தது.

மதிப்பு வீரர்

மதிப்பு வீரர்

கொல்கத்தா அணியின் ஆன்ட்ரே ரசல், மதிப்புமிக்க வீரராக அறிவிக்கப்பட்டார். பேட்டிங், பவுலிங் மற்றும் ஃபீல்டிங்கில் இவர் ஆல்ரவுண்டராக ஜொலித்து வந்தார். இவ்வாறு விருதுகள் வழங்கப்பட்டன.

Story first published: Monday, May 25, 2015, 10:49 [IST]
Other articles published on May 25, 2015
English summary
Kolkata, May 25: Mumbai Indians (MI) were crowned the Indian Premier League 2015 (IPL 8) champions on Sunday night (May 24) and as every year there were several awards given away at the end of the tournament.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X