For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

நீரும், நெருப்பும் ஹேண்ட் ஷேக் பண்ணுது உன்னால் ஈஸ்வரா..நம்ம பாண்டியும், பஜ்ஜியுமா இது!

By Veera Kumar

மும்பை: எதிரும் புதிருமாக சர்வதேச கிரிக்கெட்டில் அறியப்பட்ட சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங்கும், ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங்கும் ஐபிஎல் தொடர் மூலம் ஒரே அணியில் இணைந்திருக்கும் வாய்ப்பை பெற்றுள்ளனர்.

ரிக்கி பாண்டிங் பயிற்சியாளராகவும், ஹர்பஜன், அந்த அணியின் முன்னணி வீரராகவும் உள்ளனர்.

மும்பை அணி தொடர்ச்சியாக 4 போட்டிகளை தோற்ற நிலையில், பெங்களூரு அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வென்றது. இதன்பிறகு ஹர்பஜன் கூறியதாவது:

பாண்டிங் மாறவில்லை

பாண்டிங் மாறவில்லை

ரிக்கி பாண்டிங் இப்போதும் பழையமாதிரிதான் உள்ளார். எந்த சூழ்நிலையிலும், அவர் விரக்தியடைவது இல்லை. வீரர்களிடம் உங்களது நூறு சதவீத உழைப்பை மட்டும் அளியுங்கள். பலனை நினைத்து வருந்தாதீர்கள் என்று பாண்டிங் கூறுவார். அதைப்போலத்தான் அவரும் நடந்துகொள்கிறார்.

பேட்டிங் டிப்ஸ்

பேட்டிங் டிப்ஸ்

தொடர்ச்சியாக நான்கு போட்டிகளில் எங்கள் அணி தோற்றபோதும், அவர் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. ரிக்கி பாண்டிங்கிடமிருந்து இளம் வீரர்கள் நிறைய கற்றுக்கொள்ள முடியும். எந்த சூழ்நிலையில், எப்படி பேட் செய்ய வேண்டும் என்று இளம் வீரர்களுக்கு அவர் அளிக்கும் டிப்ஸ், வருங்காலத்தில் அந்த வீரர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும்.

சச்சின், கும்ப்ளே

சச்சின், கும்ப்ளே

மேலும், சச்சின், கும்ப்ளே போன்ற ஜாம்பவான்கள், மும்பை அணிக்கு ஆலோசகர்களாக வாய்க்கப்பெற்றுள்ளதும், மிகச்சிறந்த வாய்ப்பாகும். இதை இளம் வீரர்கள் தக்க முறையில் பயன்படுத்தி வருகின்றனர். இவ்வாறு ஹர்பஜன் கூறினார்.

மானும், புலியும் டீ சாப்பிடுது..

மானும், புலியும் டீ சாப்பிடுது..

ஹர்பஜனும், ரிக்கி பாண்டிங்கும், சர்வதேச கிரிக்கெட்டில், முறையே, இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்காக விளையாடிக் கொண்டபோது, மோதல்களில் ஈடுபட்ட சம்பவங்கள் நடந்துள்ளன. ஆனால், ஐபிஎல் இந்த இரு ஜாம்பவான்களையும் இணைத்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.

Story first published: Tuesday, April 21, 2015, 17:25 [IST]
Other articles published on Apr 21, 2015
English summary
IPL 2015: Harbhajan Singh praises 'fantastic' Ricky Ponting
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X