For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ரூ.16 கோடிக்கு என்னை ஏலம் எடுக்கும் போது நான் தூங்கிக் கொண்டிருந்தேன்: யுவராஜ் சிங்

By Mayura Akilan

டெல்லி: ஐபிஎல் ஏலத்தில் டெல்லி டேர் டெவில்ஸ் அணி யுவராஜ் சிங்கை ரூ.16 கோடி விலை கொடுத்து வாங்கியது. அந்த விலைக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று யுவராஜ் சிங் கூறியுள்ளார்.

ரூ.16 கோடிக்கு ஏலத்தில் எடுக்கக்சொல்லி யாரையும் நான் கேட்கவில்லை. எவ்வளவு தொகை தந்திருந்தாலும், நான் விளையாடியிருப்பேன்,'' என்றும், அவர் கூறியுள்ளார்.

I never asked for Rs 16 crore, says Yuvraj Singh

இந்திய அணியின் நட்சத்திர வீரர் யுவராஜ் சிங் வயது 33. இதுவரை 40 டெஸ்ட் (1900 ரன்கள்), 293 ஒரு நாள் (8329), 40 'டுவென்டி-20' (968) போட்டிகளில் விளையாடி உள்ளார்.

'பார்ம்' இல்லாததால், சமீபத்திய உலக கோப்பையில் இடம் பெறவில்லை. ஆனால், தற்போதைய ஐ.பி.எல்., தொடரில், டெல்லி அணி சார்பில் ரூ.16 கோடிக்கு வாங்கப்பட்டார். இருப்பினும், 3 போட்டிகளில் விளையாடிய இவர் மொத்தமே 90 (9, 27, 54) ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.

ரூ.16 கோடி

ரூ.16 கோடி அவர் ஆட்டத்தின் மீது அழுத்தத்தை ஏற்படுத்துகிறதா என்ற கேள்விக்கு பதில் அளித்த யுவராஜ், "உண்மையில் இல்லை என்றே கூறுவேன். ஏலம் நடைபெறும் போது நான் தூங்கிக் கொண்டிருந்தேன் என்றார்.

நான் ஆடுவேன்

எனக்கு இவ்வளவு தொகை கொடுங்கள் என்று நான் யாரிடமும் கூறவில்லை. என்ன தொகைக்கு ஏலம் எடுத்திருந்தாலும் நான் ஐபிஎல் கிரிக்கெட்டில் ஆடியிருப்பேன். ஏனெனில், என்னுடைய கவனம் எல்லாம் கிரிக்கெட் விளையாடுவது மட்டும்தான், என்று கூறியுள்ளார்.

மகிழ்ச்சியாக ஆடுகிறேன்

இப்போதைக்கு இந்த கிரிக்கெட்டை மகிழ்ச்சியுடன் ஆடி வருகிறேன், நான் தொலைதூரம் சிந்திப்பதில்லை. ஒரு அணியாக டேர் டெவில்ஸ் அணியை வெற்றிப்பாதைக்கு திருப்ப வேண்டும். 11 தோல்விகளுக்குப் பிறகு வெற்றி பெற்றது மிக முக்கியம்.

நல்ல புரிதல்

எனக்கும் கேரி கர்ஸ்டனுக்கும் அவர் இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த போது எப்படி இருந்ததோ அப்படியே நீடிக்கிறது. எங்களிடையே நல்ல புரிதல் உள்ளது. என்னிடம் உள்ள திறமைகளை வெளிக்கொணர்வதைல் கேரி கர்ஸ்டனின் பங்கு மிக அதிகம்.

25 வீரர்கள்

இந்தியாவுக்கு பயிற்சி அளிக்கும் போது அவர் 16 வீரர்களை கையாண்டால் போதும் ஆனால் டெல்லி அணிக்காக அவர் 25 வீரர்களைக் கையாள வேண்டியுள்ளது என்றும் யுவராஜ் சிங் கூறியுள்ளார்.

Story first published: Saturday, April 18, 2015, 17:33 [IST]
Other articles published on Apr 18, 2015
English summary
Perhaps incensed by questions about his form and the controversy surrounding the record fee of Rs 16 crore which he commanded at the IPL auction, Yuvraj Singh on Friday said he "never asked for Rs 16 crore" from Delhi Daredevils.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X