For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

8வது ஐ.பி.எல்: ராஜஸ்தானை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு அபார வெற்றி!!

By Mathi

அகமதாபாத்: 8வது ஐ.பி.எல். போட்டியின் 22வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 22-வது லீக் ஆட்டம் குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் சர்தார் பட்டேல் ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்றது. இதில், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் விளையாடின.

டாஸ் வென்ற பெங்களூர் அணி கேப்டன் கோஹ்லி பீல்டிங்கைத் தேர்வு செய்ய, ராஜஸ்தான் அணி முதலில் பேட் செய்தது.

ரகானே- வாட்சன் ஜோடி

ரகானே- வாட்சன் ஜோடி

தொடக்க வீரர்களாக ரகானே, வாட்சன் களமிறங்கினர். இவர்கள் இருவரும் துவக்கம் முதலே அதிரடியாக விளையாடினர். 36 ரன்கள் சேர்த்த நிலையில் இந்த ஜோடியை பட்டேல் பிரித்தார். அவரது பந்துவீச்சில் 18 ரன்கள் எடுத்த நிலையில் ரகானே அவுட் ஆனார்.

130 ரன்கள்

130 ரன்கள்

அதன்பின்னர் களமிறங்கிய ஸ்மித் நிதானமாக விளையாட, அதிரடியைத் தொடர்ந்த வாட்சன் 26 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். அதன் பின்னர் கருண் நாயர் 16 ரன்கள் மட்டும் எடுத்திருந்தார். பெங்களூர் பந்துவீச்சை தாக்குப்பிடித்து ஸ்கோரை உயர்த்த போராடிய ஸ்மித் 31 ரன்களிலும், பின்னி 20 ரன்களிலும் அடுத்தடுத்து அவுட் ஆகினர். பின்வரிசை பேட்ஸ்மேன்களும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழக்க அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 130 ரன்கள் சேர்த்தது.

ஸ்டார்க் அபாரம்

ஸ்டார்க் அபாரம்

பெங்களூர் தரப்பில் ஸ்டார்க் அபாரமாக பந்து வீசி 3 விக்கெட்டுகளும், பட்டேல், சாகல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்.

கெயில்-கோஹ்லி

கெயில்-கோஹ்லி

இதையடுத்து 131 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பெங்களூர் அணி களமிறங்கியது. வழக்கம் போல பெங்களூருவின் தொடக்க வீரர்கள் கிறிஸ் கெயில், கோஹ்லி கோலி இருவருமே அதிரடியை காட்டினர்.

வெளுத்து கட்டிய டிவில்லியர்ஸ்-கோஹ்லி

வெளுத்து கட்டிய டிவில்லியர்ஸ்-கோஹ்லி

வாட்சன் வீசிய 5 வது ஓவரில் 20 ரன்களுடன் கிறிஸ் கெயில் வெளியேற, அடுத்து வந்த டி வில்லியர்ஸ் கோஹ்லியுடன் ஜோடி சேர்ந்து சரமாரியாக அடித்தார். கோஹ்லியும் அதிரடியாக ஆடி 46 பந்துகளில் 62 ரன்களைக் குவித்தார்.

9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி..

9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி..

இருவரது அதிரடியாலும் 16 வது ஓவரின் முதல் பந்திலேயே 134 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி அபார வெற்றி பெற்றது.

Story first published: Saturday, April 25, 2015, 11:05 [IST]
Other articles published on Apr 25, 2015
English summary
Royal Challengers Bangalore (RCB) thrashed Rajasthan Royals (RR) by 9 wickets in an Indian Premier League (IPL) match on Friday.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X