For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மண்ணை கவ்வப்போன சென்னை சூப்பர் கிங்ஸை மல்லாக்க நிறுத்திய மைக்கேல்!

By Veera Kumar

ராஞ்சி: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக நடப்பு சீசனில் லேட்டாக விளையாட வந்தாலும், லேட்டஸ்ட்டாக என்ன தேவையோ அதை செய்து முடித்துள்ளார் மைக்கேல் ஹஸ்சி.

நடப்பு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மீண்டும் ஏலத்தில் வாங்கப்பட்டார் ஆஸ்திரேலியாவின் பிரபல லோவர்-மிடில் ஆர்டர் ஜாம்பவான் மைக்கேல் ஹஸ்சி.

ஆனால், அதிகபட்சம் நான்கு வெளிநாட்டு வீரர்கள்தான் களமிறங்க முடியும் என்ற நிலையில், ஹஸ்சியை களமிறக்குவதில் சிக்கல் நிலவியது.

மெக்கல்லம் ரிட்டர்ன்

மெக்கல்லம் ரிட்டர்ன்

இந்நிலையில்தான் லீக் ஆட்டங்களின் முடிவில் சென்னை தொடக்க அதிரடி வீரர் பிரெண்டன் மெக்கல்லம் தாய் நாட்டுக்காக ஆட கிளம்பினார். எனவே, ஹஸ்சியை, மெக்கல்லத்திற்கு மாற்றாக தொடக்க வீரராக களமிறக்க சென்னை கோச் பிளெமிங் முடிவு செய்தார்.

லீக் ஆட்ட பயிற்சி

லீக் ஆட்ட பயிற்சி

நேரடியாக குவாலிஃபையர் ரவுண்டில் இறக்குவதைவிட, லீக் ஆட்டத்தில் களமிறக்கலாம் என்ற நோக்கத்தில் சென்னையின் கடைசி லீக் ஆட்டத்தில் தொடக்க வீரர் ஸ்மித்துக்கு பதிலாக ஹஸ்சி களமிறக்கப்பட்டார். பயிற்சி வேண்டும் என்பதற்காகவே ஹஸ்சிக்கு அந்த வாய்ப்பு தரப்பட்டது.

சென்னை வயிற்றில் புளி

சென்னை வயிற்றில் புளி

ஆனால், பஞ்சாப்புக்கு எதிரான முதல் போட்டியில், திக்கி, திணறி, ஒரு ரன் மட்டுமே எடுத்து ஹஸ்சி அவுட்டானார். இது சென்னை நிர்வாகத்தின் வயிற்றில் புளியை கரைத்துவிட்டது. மெக்கல்லம் போன்ற வீரருக்கு மாற்றாக இறக்கிவிடப்பட வேண்டிய வீரர், ஃபார்மில் இல்லாதது போல காட்சியளிக்கிறாரே என்ற கவலை சென்னை நிர்வாகத்துக்கு இருந்தது. ஆனால், ஹஸ்சியின் அனுபவத்தின் மீதும், இக்கட்டான நேரங்களில் அவர் ஆடும் கலை மீதும் சென்னைக்கு நம்பிக்கை இருந்ததால் குவாலிஃபையர்-1லும் ஹஸ்சி தொடக்க வீரராக இறங்கினார்.

பிக்-அப், டிராப்

பிக்-அப், டிராப்

மும்பைக்கு எதிரான குவாலிஃபையர் முதல் ஆட்டத்தில் ஹஸ்சி லேசாக தனது டச்சுக்கு வந்தார். அந்த ஆட்டத்தில் 11 பந்துகளில் 16 ரன்கள் எடுத்து, ரன்வேயில் ஓடிக்கொண்டிருந்தபோதே, பழுதாகும் விமானம் போல, திடீரென அவுட் ஆகிவிட்டார். இருப்பினும் அவர் மீதான நம்பிக்கையை குறைக்கவில்லை சென்னை நிர்வாகம்.

வென்றாக வேண்டிய போட்டி

வென்றாக வேண்டிய போட்டி

வென்றே ஆக வேண்டிய வாழ்வா சாவா போட்டியில் நேற்று பெங்களூரு அணியை எதிர்கொண்டது சென்னை சூப்பர் கிங்ஸ். 140 ரன்கள்தான் வெற்றி இலக்கு என்றாலும் வழக்கம்போல பேட்டிங்கில் சொதப்பியது சென்னை. ட்வைன் ஸ்மித் 12 ரன்களிலும், சற்று நம்பிக்கையளித்த டு பிளெசிஸ் 21 ரன்களிலும், நடையை கட்ட, நம்பிக்கை நட்சத்திரமாக எதிர்பார்க்கப்பட்ட ரெய்னா டக் அவுட் ஆகி அதிர்ச்சியளித்தார்.

மனம் தளராத மைக்கேல்

மனம் தளராத மைக்கேல்

10 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து பால் எண்ணிக்கைக்கு ஏற்ப ரன் எடுத்திருந்தது சென்னை. ஆனால் மறுமுனையில் ஹஸ்சி மட்டும் மனம் தளரவில்லை. இந்த ரன்னை சேஸ் செய்ய அதிரடி தேவையில்லை, ஆனால், விக்கெட்டை காப்பாற்ற வேண்டியது அவசியம் என்ற நிலையை சரியாக புரிந்து ஆடினார் ஹஸ்சி. இவருக்கு டோணி, தட்டி, தட்டி கம்பெனி கொடுத்துக் கொண்டிருந்தார்.

பாதி ரன் இவர் அடித்தது

பாதி ரன் இவர் அடித்தது

46 பந்துகளில் 56 ரன்களை குவித்து டேவிட் வைஸ் பந்து வீச்சில் ஹர்ஷல் பட்டேலிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அவரது அரை சதம்தான் போட்டியை மாற்றிப்போட்டது. ஹஸ்சி அவுட் ஆனபோது, 16.3 ஓவர்களில் சென்னை 4 விக்கெட்டுகளை இவந்து 108 ரன்களை சேர்த்திருந்தது. அதில் பாதி ஹஸ்சி அடித்ததுதான் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

இவர் இல்லைன்னா..

இவர் இல்லைன்னா..

மற்றவர்கள் பேட்டிங் வழக்கம்போல சொதப்ப, தட்டு, தடுமாறி, 19.5வது பந்தில் வெற்றி இலக்கை 7 விக்கெட்டுகளை இழந்து எடுத்தது சென்னை. ஹஸ்சி இன்னிங்சை கழித்து பார்த்தால், சென்னை எடுத்திருக்க வேண்டிய ரன் எத்தனை என்பது உங்களுக்கே தெரியும். அந்த வகையில், பைனலுக்கு முந்தைய போட்டியில் ஃபார்முக்கு வந்து, சென்னை ரசிகர்கள் வயிற்றில் பால் வார்த்துள்ளார் மைக்கேல் ஹஸ்சி.

Story first published: Saturday, May 23, 2015, 10:26 [IST]
Other articles published on May 23, 2015
English summary
Riding on Michael Hussey's 56 off 46 balls, CSK edged past RCB, who put in a spirited effort with the ball after their big guns failed with the bat.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X