For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வெற்றி வேகத்தைத் தக்க வைக்குமா டெல்லி டேர்டெவில்ஸ்?

டெல்லி: டெல்லி டேர்டெவில்ஸ் அணி தனது தொடர் தோல்விகளுக்கு கடந்த போட்டியில் முற்றுப் புள்ளி வைத்தது. இந்த நிலையில் இன்று சொந்த மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் அது வலுவான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரைச் சந்திக்கிறது.

பெங்களூர் கேப்டன் விராத் கோஹ்லிக்கு டெல்லிதான் சொந்த ஊர். எனவே அவர் சொந்த ஊர் ரசிகர்கள் முன்னிலையில், பெங்களூருக்கு வெற்றி வாய்ப்பைத் தேடிக் கொடுக்க உழைப்பார் என்பது சுவாரஸ்யமானது.

மறுபக்கம் தொடர்ந்து தோல்வியே கண்டு வந்த டெல்லி கடந்த போட்டியில் சிறப்பான வெற்றியைப் பெற்றது. அதே வெற்றியை இன்று பெங்களூரிடமிருந்தும் அது பெறுமா என்பது எதிர்பார்ப்புக்குரியது.

சுவாரஸ்ய மோதல்

சுவாரஸ்ய மோதல்

இன்றைய மோதல் மிக மிக சுவாரஸ்யமானது. கோஹ்லிக்கு டெல்லி சொந்த ஊர் என்றால், கடந்த தொடரில் கோஹ்லி தலைமையில் விளையாடிய யுவராஜ் சிங் இந்த முறை டெல்லிக்காக பேட் பிடித்துள்ளார்.

பெங்களூருக்கு 14.. டெல்லிக்கு 16

பெங்களூருக்கு 14.. டெல்லிக்கு 16

பெங்களூர் அணிக்காக ரூ. 14 கோடிக்கு வாங்கப்பட்ட யுவராஜ், டெல்லி அணிக்காக ரூ. 16 கோடிக்காக வாங்கப்பட்டவர் என்பது நினைவிருக்கலாம்.

சொதப்பல் ஆட்டம்

சொதப்பல் ஆட்டம்

ஆனால் வாங்கின காசுக்கு சரியாக கூவாமல் இருக்கிறார் யுவராஜ். கடந்த தொடரில் பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்து, பெங்களூர் அணி உரிமையாளர் விஜய் மல்லையாவை புலம்ப வைத்து விட்டார். இந்த முறையும் இதுவரை பெரிய அளவிலான ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தாமல்தான் இருக்கிறார்.

மும்பையை வீழ்த்திய டெல்லி

மும்பையை வீழ்த்திய டெல்லி

டெல்லி அணி கடந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தியிருந்தது. பெங்களூர் அணி, ராஜஸ்தானை வீழ்த்தியிருந்தது. எனவே இன்றைய போட்டி கடுமையானதாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

இரவு 8 மணிக்கு

இரவு 8 மணிக்கு

இப்போட்டி டெல்லி பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும். டெல்லி மைதானம் சுழற்பந்து வீச்சுக்கும், பேட்டிங்குக்கும் உகந்தது.

தாஹிர் - கெய்ல்

தாஹிர் - கெய்ல்

டெல்லி அணியில் இம்ரான் தாஹிர், யுவராஜ் சிங், கேப்டன் டுமினி, ஷ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் முக்கிய வீரர்கள். மறுபக்கம் பெங்களூரு அணியில் கிறிஸ் கெய்ல், விராத் கோஹ்லி, ஏப் டிவில்லியர்ஸ், மிட்சல் ஸ்டார்க் ஆகியோர் முக்கியஸ்தர்கள் ஆவர்.

பெங்களூரே டாப்

பெங்களூரே டாப்

இரு அணிகளும் இதற்கு முன்பு மோதிய போட்டிகளில் பெங்களூர் அணி 8 போட்டிகளில் வென்றுள்ளது. டெல்லி அணி 5 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

இப்போதைய தொடரில்

இப்போதைய தொடரில்

இப்போதைய தொடரில் டெல்லி அணி 3 வெற்றிகள், 3 தோல்விகளுடன் 4வது இடத்தில் இருக்கிறது. ஆனால் பெங்களூர் அணியோ, 2 வெற்றி, 3 தோல்விகளுடன் 6வது இடத்தில் இருக்கிறது.

Story first published: Sunday, April 26, 2015, 16:43 [IST]
Other articles published on Apr 26, 2015
English summary
Both DD and RCB are out from a good win in their respective last matches and clashing with each other in today's match at Dellhi tonight.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X