For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐபிஎல் 2015: டெத் ஓவர்களில், டெரர் காண்பிக்கும் டாப்-5 பவுலர்கள்! ஆட்டத்தை மாற்றும் அசகாய சூரர்கள்

By Veera Kumar

சென்னை: என்னதான் பேட்ஸ்மேன்களுக்கான விளையாட்டாக ஐபிஎல் இருந்தாலும், ஐபிஎல் நடப்பு சீசனில், சில பவுலர்கள் மிரட்டத்தான் செய்கிறார்கள். அதிலும், ஒரு பவுலரின் உண்மையான திறனை வெளிக்கொண்டு வரும் இறுதிகட்ட ஓவர்களில் சிறப்பாக செயல்பட்டு எதிரணிகளிடமிருந்து வெற்றியை பறிக்கும் திறமை கொண்ட பவுலர்கள் ஒரு சிலரே உள்ளனர்.

அதில் டாப்-5 பவுலர்களின் திறமை பற்றிய ஒரு பார்வை:

டிரென்ட் பவுல்ட்

டிரென்ட் பவுல்ட்

நியூசிலாந்தை சேர்ந்த இடது கை வேகப்பந்து வீச்சாலரான பவுல்ட், உலக கோப்பை தொடரில், அதிக விக்கெட் வீழ்த்திய வீரர்களில் மிட்சேல் ஸ்டார்க்குடன் இணைந்து முதலிடத்தை பிடித்தவர். அதே வேகத்தில், ஹைதராபாத் அணிக்காக முழு மூச்சாக போராடி வருகிறார் டிரென்ட் பவுல்ட். ஆறு போட்டிகளில் இதுவரை ஆடியுள்ள பவுல்ட் 8 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 8 ரன்களுக்கும் குறைவான எக்கனாமி ரேட் வைத்துள்ளார்.

சிறந்த ஆட்டங்கள்

சிறந்த ஆட்டங்கள்

ஆடிய ஆறு போட்டிகளிலும், போட்டியொன்றுக்கு சராசரியாக 10 டாட்-பந்துகளை போட்டுள்ளார். அதாவது சிங்கிள் ரன்னும் எடுக்க முடியாத பந்துகள். இரு பக்கமும் பந்தை ஸ்விங் செய்ய வல்லவர் என்பதால், இறுதி கட்டத்தில் இவரது பந்தை தொடுவதே பேட்ஸ்மேன்களுக்கு கஷ்டமான விஷயமாகிவிடுகிறது. வலுவான பேட்டிங் வரிசையுள்ள பெங்களூருக்கு எதிராக 36 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார் பவுல்ட். பஞ்சாப் அணிக்கு எதிராக 19 ரன்களை மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தார். 150 ரன்களை விரட்டி வந்த பஞ்சாப் 130 ரன்களிலேயே முடங்கிபோக இவரது பந்து வீச்சு முக்கிய காரணம்.

லத்திஷ் மலிங்கா

லத்திஷ் மலிங்கா

இலங்கை வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா, நடப்பு சீசனில் மெத்தனமாகவே முதல் சில ஆட்டங்களில் திறமையை வெளிப்படுத்தினார். இதனால் பேட்ஸ்மேன்களிடம் நன்கு வாங்கிக் கட்டிக்கொண்டார். ஆனால், மலிங்காவின் திறமை ஹைதராபாத்துக்கு எதிரான போட்டியில் நிரூபணமானது. தான் இன்னும் சோர்ந்து போகவில்லை என்று பறைசாற்றிய மேட்ச் அது. 157 ரன்களை பாதுகாக்க வேண்டிய நிலையில் இருந்த மும்பைக்கு, பக்கபலமாக ஹைதராபாத்தின் 4 விக்கெட்டுகளை 23 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து வீழ்த்தினார் மலிங்கா. 13 விக்கெட்டுகளுடன், அதிக விக்கெட் எடுத்த பவுலர்களில் 3வது இடத்திலுள்ளார்.

நெஹ்ரா

நெஹ்ரா

ரிட்டையர்ட் ஆக வேண்டிய வயதில், எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு ரிவிட் வாங்கிக் கொண்டுள்ளார் நெஹ்ரா. 9 போட்டிகளில் 14 விக்கெட்டுகள், 6.72தான் எக்கனாமி ரேட், 17 ரன்களுக்கு சராசரியாக ஒரு விக்கெட் வீழ்த்தல் என நெஹ்ரா, இந்த சீசனில் சென்னைக்காக, நெருப்பு போல ஆடி வருகிறார். மொத்தம் 94 டாட்-பந்துகளை வீசி, எதிரணி பேட்ஸ்மேன்களை திணற வைத்ததற்கு சான்று காட்டிவிட்டார் நெஹ்ரா. பெங்களூர் அணிக்கு எதிராக 10 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை சுருட்டினார். கிட்டத்தட்ட நெஹ்ரா பந்துகளை பேட்ஸ்மேன்களால் தொடவே முடியவில்லை. டெல்லிக்கு எதிரான போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி, ஒரு ரன் வித்தியாசத்தில் சென்னையை வெற்றி பெறச் செய்தார் நெஹ்ரா.

யார்க்கர் ஸ்பெஷலிஸ்ட்

யார்க்கர் ஸ்பெஷலிஸ்ட்

ஹைதராபாத்துக்காக ஆடும் இந்திய வீரர் புவனேஸ்வர் குமார், யார்க்கர் ஸ்பெஷலிஸ்ட் என்பதால், இறுதிகட்ட ஓவர்களில் மன்னன். 8 போட்டிகளில் 11 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். எக்கனாமி ரேட்டும் 7க்கு கீழே உள்ளது. 76 டாட்-பந்துகள் வீசியுள்ளார். பலம்மிக்க அணியான சென்னைக்கு எதிராக புவனேஸ்வர் குமார் எடுத்த 2 விக்கெட்டுகள் அந்த அணியை வீழ்த்த உதவியது.

இவர்தான் மிகச்சிறந்தவர்

இவர்தான் மிகச்சிறந்தவர்

டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட்களில் சிறந்தவர் சந்தேகமேயில்லாமல், பெங்களூர் அணிக்காக ஆடும் மிட்சேல் ஸ்டார்க்தான். காயத்தில் இருந்து மீண்டு பாதியில்தான் ஆட வந்தாலும், அவர் பந்த பிறகுதான் பெங்களூருக்கு விடிவுகாலம். நடப்பு சீசனில் 14 ஓவர்கள் வீசியுள்ள ஸ்டார்க்கின் 43 பந்துகளில் ரன் ஏதும் கிடைக்கவில்லை. அத்தனையும் டாட்-பந்துகள். ஓவருக்கு சராசரியாக 3 டாட் பந்துகளையாவது அவர் வீசுகிறார். 10 ரன்களுக்கு ஒரு விக்கெட் என்ற அவரேஜ், எந்த பேட்ஸ்மேனையும் மிரட்ட கூடியது.

கஞ்சத்தன பவுலர்

கஞ்சத்தன பவுலர்

மிட்சேல் ஸ்டார்க்கின் எக்கனாமி ரேட் வெறும் 5.78 ஆகும். நடப்பு சீசனின் ஆகச்சிறந்த கஞ்சத்தன பவுலர் இவர்தான். டெல்லியை 95 ரன்களில் சுருட்டி லோவர் ஆர்டர் பேட்ஸ்மேன்களை அடுத்தடுத்து ஆட்டமிழக்க செய்து 20 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார் ஸ்டார்க். கேகேஆர் அணிக்கு எதிரான 10 ஓவர் போட்டியிலும் கூட தனது கோட்டாவான 2 ஓவர்களில் 15 ரன்களை மட்டுமே கொடுத்து 1 விக்கெட்டையும் சாய்த்தார். இவரது ஸ்விங்கிங் யார்க்கர் வகை பந்துகளுக்கு பதில் சொல்லும் பேட்ஸ்மேன்கள் சொற்பமே.

Story first published: Tuesday, May 5, 2015, 13:03 [IST]
Other articles published on May 5, 2015
English summary
That IPL is explosive is beyond doubt, even though the commentary and hype can, at times, leave you a little frustrated. However, it has also been an amazing platform for the veteran fast bowlers to show their worth and the young ones to show their skills and learn some.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X