For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐ.பி.எல். பைனலில் மும்பையுடன் மோதப்போவது யார்? சென்னை-பெங்களூரு இன்று பலப்பரிட்சை!

ராஞ்சி : ஐ.பி.எல். இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் மற்றொரு அணிக்கான குவாலிஃபையர்-2 போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன.

சென்னையை 25 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை அணி ஏற்கனவே இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுவிட்ட நிலையில், மற்றொரு அணிக்கான போட்டி இன்று நடைபெறுகிறது.

ஐ.பி.எல். வெளியேற்றுதல் சுற்று

ஐ.பி.எல். வெளியேற்றுதல் சுற்று

வெளியேற்றுதல் சுற்றில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்சை சுருட்டி அனுப்பியது

டோணியின் சொந்த மண்

டோணியின் சொந்த மண்

இந்த நிலையில் இறுதிப்போட்டிக்கான 2வது தகுதி சுற்றில் சென்னை சூப்பர் கிங்சும், பெங்களூரு ராயல்சேலஞ்சர்ஸ் அணியும்

டோனியின் சொந்த மண்ணான ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இன்று மோதுகின்றன.

சென்னைக்கு கிடைத்த வாய்ப்பு

சென்னைக்கு கிடைத்த வாய்ப்பு

முதலாவது தகுதிசுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி படுதோல்வி அடைந்தாலும், லீக் சுற்றில் புள்ளி பட்டியலில் முதல் இரு இடங்களுக்குள் வந்ததால் பைனலுக்கு செல்ல இன்னொரு வாய்ப்பு கிடைத்ததுள்ளது. இந்த வாய்ப்பையாவது சென்னை அணி பயன்படுத்திக் கொள்ளுமா என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

மெக்கல்லம் இல்லாத சென்னை

மெக்கல்லம் இல்லாத சென்னை

சென்னை அணிக்கு அதிரடி தொடக்கத்தை கொடுக்கும், நியூசிலாந்தைச் சேர்ந்த பிரன்டன் மெக்கல்லம் தனது தேசிய அணிக்கு விளையாடுவதற்காக சென்று விட்டார். அவர் இல்லாதது சென்னைக்கு பின்னடைவாகபவே கருதப்படுகிறது

தொடக்க வீரர்களை நம்பும் சென்னை

தொடக்க வீரர்களை நம்பும் சென்னை

எனவே சென்னை அணி முன் களம் மற்றும் நடுகள வரிசை வீரர்களை நம்பியே சென்னை உள்ளது. ஹஸ்சியும், வெய்ன்சுமித்தும் நல்ல தொடக்கம் தரும்பட்சத்தில் கணிசமான ஸ்கோரை எட்ட முடியும்.

நம்பிக்கை அளிக்கும் பந்து வீச்சு

நம்பிக்கை அளிக்கும் பந்து வீச்சு

பந்து வீச்சில் வெய்ன் பிராவோ , ஆஷிஷ் நெஹரா , சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் ஆகியோர் சென்னை ரசிகர்களுக்கு நம்பிக்கை அளிக்கின்றனர்.

சவாலாக விளங்கும் பெங்களூ அணி

சவாலாக விளங்கும் பெங்களூ அணி

சென்னை சூப்பர் கிங்சை எதிர்த்து இன்று களம் காணும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் சவாலானதாகும். கேப்டன் விராட் கோலி, டிவில்லியர்ஸ் , சிக்சர் மன்னன் கிறிஸ் கெய்ல் ஆகியோர் தான் பெங்களூரு அணியின் பேட்டிங் தூண்கள்

தொடக்க விக்கெட்டுகள் சரிந்தால்….

தொடக்க விக்கெட்டுகள் சரிந்தால்….

பெங்களூரு அணியின் முன் கள வீரர்களின் விக்கெட்டுகளை குறைந்த ரன்களில் வீழ்த்தினால் சென்னைக்கு இறுதிப் போட்டி வாய்ப்பு கிடைக்கும். ஆனால் அது சுலபமல்ல என்பது சென்னைக்கு நன்கு தெரியும்

பந்து வீச்சில் மிரட்டும் வீரர்கள்

பந்து வீச்சில் மிரட்டும் வீரர்கள்

பந்து வீச்சில் மிட்செல் ஸ்டார்க், யுஸ்வேந்திர சாஹல், ஹர்ஷல் பட்டேல் உள்ளிட்டோர் பெங்களூரு அணிக்கு கூடுதல் பலம் சேர்க்கிறார்கள்

லீக் சுற்றில் வீழ்த்திய சென்னை

லீக் சுற்றில் வீழ்த்திய சென்னை

லீக் சுற்று இரண்டிலும் பெங்களூரு அணி 27 மற்றும் 24 ரன்கள் வித்தியாசங்களில் சென்னை சூப்பர் கிங்சிடம் மண்ணை கவ்வியது. இது மனரீதியாக சென்னை அணிக்கு நம்பிக்கையை கொடுக்கும். அதே நேரத்தில் இதற்கு பழி தீர்த்து 3-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைய பெங்களூரு அணியும் தீவிரமாக உள்ளது

6 வது முறை தகுதி பெறுமா சென்னை?

6 வது முறை தகுதி பெறுமா சென்னை?

சென்னை அணி 6வது முறையாக ஐ.பி.எல். இறுதிசுற்றில் அடியெடுத்து வைப்பதை பெங்களூரு அணி தடுக்குமா இல்லை இறுதிக்கு பெங்களூரு நுழையுமா என்ற பலத்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளதால், ஆட்டத்தின் முதல் பந்திலேயே அனல் பறக்கும் என்று நம்பலாம்.

Story first published: Friday, May 22, 2015, 12:08 [IST]
Other articles published on May 22, 2015
English summary
Chennai takes on Bengaluru in Qualifier 2 match of the IPL today
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X