For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கோஹ்லி அவுட்டானா வானம் அழுது, கொல்கத்தா தோற்றால் சியர் லீடர்ஸ் அழுகுறாங்க.. என்னப்பா நடக்குது இங்கே?

By Veera Kumar

டெல்லி: ஐ.பி.எல் தொடரில் நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் 22 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தி ஹைதராபாத் அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இரண்டாவது தகுதிச் சுற்றுக்கும் முன்னேறியுள்ளது ஹைதராபாத்.

டெல்லியில் நேற்று நடந்த எலிமினேட்டர் சுற்று போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பீல்டிங் தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் ஹைதராபாத் அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மோசமாக தோல்வி

மோசமாக தோல்வி

கொல்கத்தா அணியில் மணிஷ் பாண்டே அதிகபட்சமாக 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கேப்டன் காம்பீர் 28, முன்ரே 16 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் ரன் எடுக்க தவறினர். புவனேஸ் குமார் 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

அடுத்த சுற்றில் ஹைதராபாத்

அடுத்த சுற்றில் ஹைதராபாத்

இந்த தோல்வியின் மூலம் தொடரில் இருந்து கொல்கத்தா அணி வெளியேறியது. ஹைதராபாத் அணி வெள்ளிக்கிழமை நடைபெறும் தகுதிச் சுற்று 2 வது ஆட்டத்தில் குஜராத் லயன்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

பைனலில் பெங்களூர்

பைனலில் பெங்களூர்

அந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி மே 29ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியுடன் மோதவுள்ளது.

சியர் லீடர்கள் ஆட்டம்

சியர் லீடர்கள் ஆட்டம்

பொதுவாக சியர் லீடர்ஸ் எனப்படும் ஆடல் அழகிகள், தங்கள் அணி பேட் செய்யும்போது பவுண்டரி, சிக்சர் பறந்தால், குத்தாட்டம் போடுவார்கள்., தங்கள் அணி பவுலிங் செய்யும்போது எதிரணியின் விக்கெட் வீழ்ச்சியடைந்தாலும் ஆட்டம் போடுவார்கள்.

டியர் லீடர்ஸ்

காலம் காலமாக சியர் லீடர்ஸ் இப்படி ஆட்டம் போட்டு வந்த நிலையில், நேற்று கொல்கத்தா தோற்றபோது சியல் லீடர்ஸ், 'டியர் லீடர்ஸ்'-ஆக மாறி தேம்பி, தேம்பி அழ ஆரம்பித்துவிட்டனர்.

தாங்க முடியவில்லை

கொல்கத்தா தோற்றதைவிட அழகான சியர் லீடர்ஸ் அழுததுதான் நெட்டிசன்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. மீம்ஸ் போட தொடங்கிவிட்டனர்.

தில்வாலே திடீர் அழுகை

கொல்கத்தா அணிக்கு ஷாருக்கான் உரிமையாளர் என்பதால், அவரது தில்வாலே படத்தை பார்த்த ஃபீலிங்கில் சியர் லீடர்ஸ் அழுகிறார்களோ என்றும் நெட்டிசன்கள் கேலி செய்தனர்.

வானமே அழுதிச்சு

பெங்களூரில், குஜராத்-பெங்களூர் அணிகள் மோதிய முதலாவது குவாலிபையர் போட்டியில் கோஹ்லி டக்அவுட்டானதும் லேசாக மழை தூர ஆரம்பித்தது. கோஹ்லி அவுட்டானதும் வானமே அழுகிறது என்று வர்ணனை செய்தனர் சோஷியல் மீடியா குறும்பர்கள். இப்போது கொல்கத்தா தோற்றதற்காக சியர் லீடர்ஸ் அழுதுள்ளதை மட்டும் விடுவார்களா.

Story first published: Thursday, May 26, 2016, 15:17 [IST]
Other articles published on May 26, 2016
English summary
Some of the on field cheerleaders were seen crying and shedding a tear after KKR's loss.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X