For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐபிஎல்: கொல்கத்தாவை 27 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி டேர்டெவில்ஸ்

By Karthikeyan

டெல்லி: ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்றைய ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தியது.

ஐ.பி.எல். கிரிக்கெட் லீக்கில் இன்று டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா முதலில் பந்து வீச முடிவு செய்தது. இதையடுத்து களமிறங்கிய டெல்லி அணிக்கு முதல் ஓவரிலேயே அதிர்ச்சி காத்திருந்தது.

IPL 2016: Delhi Daredevils move to 2nd spot after win over KKR

ரஸல் வீசிய அந்த ஓவரில் ஐயர், டி காக் ஆகியோரின் விக்கெட்டுகளைப் பறிகொடுத்தது டெல்லி. ஐயர் டக் அவுட் ஆனார். டி காக் 1 ரன் எடுத்தார். இதன் பிறகு வந்த வீரர்கள் ரன் குவிக்க தவறினார். இதனால் டெல்லி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் குவித்தது.

அதிகபட்சமாக கருண் நாயர் 50 பந்துகளில் 68 ரன்கள் விளாசினார். சாம் பில்லிங்ஸ் 34 பந்துகளில் 54 ரன்களும், பிராத்வெயிட் 11 பந்துகளில் 34 ரன்களும் குவித்தார். கொல்கத்தா தரப்பில் ரஸ்ஸல், உமேஷ் யாதவ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர்.

இதையடுத்து 187 ரன்கள் என்ற இலக்கைத் விரட்டிய கொல்கத்தாவிற்கு துவக்க வீரர் உத்தப்பா நிதானமாக ஆடி அணியின் ரன் ரேட்டை சீராகக் கொண்டு சென்றார். ஆனால், மறுமுனையில் களமிறங்கிய பேட்ஸ்மேன்களின் சொதப்பல் ஆட்டத்தால் கொல்கத்தா திணறியது.

குறிப்பாக கேப்டன் காம்பிர் 6 ரன்களிலும், பியூஷ் சாவ்லா 8 ரன்களிலும், யூசுப் பதான் 10 ரன்களிலும் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர். சிறிது நேரம் தாக்குப்பிடித்த சூரியகுமார் யாதவ் 21 ரன்கள் சேர்த்தார். 18-வது ஓவர் வரை போராடிய உத்தப்பா 72 ரன்கள் எடுத்திருந்த நிலையில், மோரிஸ் ஓவரில் விக்கெட்டை பறிகொடுத்தார். மற்ற வீரர்கள் விரைவில் பெவிலியன் திரும்ப, கொல்கத்தா அணி 159 ரன்களில் சுருண்டது.

இதனால், 27 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி வெற்றி பெற்றது. 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்திய பிராத்வெயிட் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பபட்டார்.

Story first published: Saturday, April 30, 2016, 21:10 [IST]
Other articles published on Apr 30, 2016
English summary
Delhi Daredevils produced a thorough all-round performance to notch up their fourth win, beating Kolkata Knight Riders by 27 runs in an Indian Premier League 2016 (IPL 9) clash here on Saturday (April 30).
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X