For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மோரிஸின் 82 ரன்கள் வீண்: குஜராத் லயன்ஸ் ஒரு ரன்னில் த்ரில் வெற்றி !

By Karthikeyan

டெல்லி: புதுமுக அணியான குஜராத் லயன்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் தொடர்ந்து பட்டையைக் கிளப்பி வருகிறது. டெல்லி அணிக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில் குஜராத் லயன்ஸ் கடைசி பந்தில், ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

டெல்லியில் நேற்று நடைப்பெற்ற ஐ.பி.எல். லீக் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியும், குஜராத் லயன்ஸ் அணியும் விளையாடின. டாசில் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ஜாகீர்கான் முதலில் பந்துவீச முடிவு செய்தார்.

IPL 2016: Gujarat Lions survive Chris Morris' onslaught to win by 1 run

குஜராத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டு இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்தது. மெக்கல்லம் 36 பந்தில் 60 ரன்கள் விளாசினார். சுமித் 30 பந்துகளில் 53 ரன்கள் எடுத்தார்.டெல்லி தரப்பில் ஜாகீர் 3 விக்கெட்களையும், மோரிஸ் 2 விக்கெட்களையும் வீழ்த்தினார்கள்.

இதையடுத்து களமிறங்கிய டெல்லி அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது போல் 16 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. டி காக் 5 ரன்கள் எடுத்து ஏமாற்றம் அளித்தார். சாம்சன் 1 ரன்னிலும், நாயர் 9 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

இதனை பின்னர் டுமினியுடன், பாண்ட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறிது நேரம் நிலைத்து நின்று ஆடியது. இருப்பினும் பாண்ட் 17 ரன்களிலும் 20 எடுத்திருந்த போது ஆட்டமிழந்தார். இதனால் டெல்லி அணி தோல்வி அடைந்துவிடும் என்று கருதப்பட்டது.

அதிரடியாக விளையாடிய மோரிஸ் 17 பந்துகளில் அரைசதம் விளாசினார். சிறப்பாக விளையாடி வந்த டுமினி 43 பந்தில் 48 ரன்கள் எடுத்திருந்த போது பிராவோ பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அப்போது டெல்லி அணி 17.1 ஓவர்களில் 144 ரன்கள் எடுத்திருந்தது. தொடந்து அதே ஓவரில் மோரிஸ் இரண்டு பவுண்டரிகளை விளாசினார். கடைசி 2 ஓவர்களில் 18 ரன்கள் தேவைப்பட்டது.

19-வது ஓவரை பிரவின் குமார் வீசினார். மிகவும் கட்டுக் கோப்பாக வீசி 4 ரன்களை மட்டுமே பிரவின் விட்டுக் கொடுத்தார். இதனால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. கடைசி ஓவரில் 6 பந்துகளில் 15 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

கடைசி ஓவரை பிராவோ வீசினார். முதல் பந்திலே மோரிஸ் பவுண்டரி விளாசினார். கடைசி 5 பந்துகளில் 11 ரன்கள் எடுக்க வேண்டியிருந்தது. அடுத்த இரண்டு பந்துகளில் தலா ஒரு ரன் மட்டுமே கொடுத்தார் பிராவோ. இதனால் யார் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்தது.

ஆட்டத்தின் கடைசி பந்தில் 4 ரன்கள் எடுக்க வேண்டியிருந்தது. பிராவோவின் அபார பந்துவீச்சால் டெல்லி அணியினர் 2 ரன்கள் மட்டுமே எடுத்தனர். டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் மட்டுமே எடுத்து அதிர்ச்சி தோல்வி அடைந்தது. இதனால் ஒரு ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி பெற்றது.

மோரிஸ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். அவர் 32 பந்துகளில் 82 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அதில் 4 பவுண்டரிகளும், 8 சிக்ஸர்களும் அடங்கும்.

Story first published: Thursday, April 28, 2016, 1:31 [IST]
Other articles published on Apr 28, 2016
English summary
Gujarat Lions (GL) edged out a spirited Delhi Daredevils (DD) by 1 run in a thrilling Indian Premier League 2016 (IPL 9) clash that went right down to the last ball at the Feroz Shah Kotla Stadium here on Wednesday night (April 27).
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X