For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

12 ரன் அடிக்க முடியாத பசங்களாகிட்டோமே.. அக்சர் பட்டேல் புலம்பல்

By Veera Kumar

கொல்கத்தா: கைக்கு வந்த வெற்றியை இழந்தது வருத்தம் அளிப்பதாக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ஆல்-ரவுண்டர் அக்சர் பட்டேல் தெரிவித்தார்.

கொல்கத்தாவில் நேற்று பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகள் நடுவேயான ஐபிஎல் ஆட்டம் நடைபெற்றது. முதலில் பேட் செய்த கொல்கத்தா, 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் குவித்தது.

பின்னர் ஆடிய பஞ்சாப் அணியில் ஸ்டாய்னிஸ், மனன் வோரா ஆகியோர் ரஸல் பந்துவீச்சில் டக் அவுட்டாகினர். இதையடுத்து, கேப்டன் விஜய் 6 ரன்களில் ஆட்டமிழக்க, 13 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது பஞ்சாப்.

மேக்ஸ்வெல் அதிரடி

மேக்ஸ்வெல் அதிரடி

இதையடுத்து விருத்திமான் சாஹாவுடன் இணைந்த மேக்ஸ்வெல் ஜோடி 40 ரன்கள் சேர்த்தது. சாஹா 24 ரன்களில் வெளியேற, மில்லர் களம்புகுந்தார். அவர் ஒருபுறம் மிகவும் நிதானமாக ஆட, அதிரடியாக ஆடிய மேக்ஸ்வெல் 29 பந்துகளில் அரை சதம் கண்டார். தொடர்ந்து வேகம் காட்டிய அவர் 42 பந்துகளில் 4 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 68 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்க, குருகீரத் சிங் களம்புகுந்தார்.

அடுத்தடுத்து சிக்சர்

அடுத்தடுத்து சிக்சர்

கடைசி 3 ஓவர்களில் 35 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற நிலையில் ரஸல் வீசிய 18வது ஓவரில் மில்லர் (18 பந்துகளில் 13 ரன்கள்) ஆட்டமிழந்தார். இதையடுத்து வந்த அக்ஷர் படேல், அதே ஓவரில் தொடர்ச்சியாக இரு சிக்ஸர்களை விரட்ட, பரபரப்பு ஏற்பட்டது.

12 ரன்கள்

12 ரன்கள்

கடைசி ஓவரில் 12 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், அந்த ஓவரை வீசிய ரஸல், 2ஆவது பந்தில் படேலை ரன் அவுட்டாக்க, பஞ்சாபின் வெற்றி பறிபோனது. 7 பந்துகளைச் சந்தித்த படேல் 2 சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 21 ரன்கள் எடுத்தார்.

ரஸல் கலக்கல்

ரஸல் கலக்கல்

3வது பந்தில் குருகீரத் சிங்கும், 5ஆவது பந்தில் ஸ்வப்னிலும் ஆட்டமிழக்க, 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் மட்டுமே எடுத்த பஞ்சாப், 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. ரஸல் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

ஆரம்பமே

ஆரம்பமே

இதுகுறித்து அக்ஷர் பட்டேல் கூறியதாவது: தொடக்கத்திலேயே 3 விக்கெட்டுகளை இழந்துவிட்டதால், கடைசி நேரத்தில் நெருக்கடி அதிகமானது.

கைக்கு கிடைத்தது

கைக்கு கிடைத்தது

ரஸல் சிறப்பாக செயல்பட்டார். பேட்டிங், பந்து வீச்சு, ஃபீல்டிங் என மூன்றிலும் அருமையாக செயல்பட்டு வெற்றியை வசப்படுத்திக்கொண்டார். கடைசி ஓவரில், நாங்கள் வெற்றிபெற வேண்டிய நிலை இருந்தும், விக்கெட்டுகளை இவந்ததால் தோல்வியடைந்தோம். இவ்வாறு அக்சர் பட்டேல் கூறினார்.

Story first published: Thursday, May 5, 2016, 15:47 [IST]
Other articles published on May 5, 2016
English summary
Kings XI Punjab (KXIP) left-arm spinner Axar Patel feels they were on course for a win till things went horribly wrong in the last over when they lost three wickets to concede defeat to Kolkata Knight Riders in the Indian Premier League 2016 (IPL 9).
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X