For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வார்னரிடம் வாலாட்டி வாங்கி கட்டிய பிரவீன்குமார்! அனல் பறந்த டெல்லி மைதானம்

By Veera Kumar

டெல்லி: ஐபிஎல் தொடரில் டெல்லியில் நேற்று இரவு நடந்த 2வது குவாலிபையர் சுற்றில், குஜராத் லயன்சும், ஹைதராபாத் சன் ரைசர்சும் பலப்பரிட்சை நடத்தின.

டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங்கை தொடங்கிய குஜராத் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக பிஞ்ச் 50 ரன்களை சேர்த்தார்.

இதையடுத்து 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஹைதராபாத் களமிறங்கியது.

நடையை கட்டினர்

நடையை கட்டினர்

அந்த அணியின் ஷிகர் தவான் தொடக்கத்திலே தப்பும் தவறுமாக ஓடி ரன் அவுட் ஆகி வெளியேறினார். இதன் பின்னர் ஹென்ரி ஹூயிஸ் (11), யுவராஜ் சிங் (8), ஹூடா (4), கட்டிங் (8), ஓஜா (10) என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

தனி ஒருவன்

இருப்பினும் கேப்டன் வார்னர் மட்டும் தனி ஒரு ஆளாக நிலைத்து நின்று ரன்களை விளாசி வந்தார். கடைசி நான்கு ஓவர்களில் 45 ரன்கள் தேவைப்பட்டது. 17வது ஓவரில் 11 ரன்களும், 18வது ஓவரில் 10 ரன்களும் எடுக்கப்பட்டது.

சிக்ஸ் அடித்தால் திட்டுவேன்

சிக்ஸ் அடித்தால் திட்டுவேன்

18வது ஓவரை பிரவீன்குமார் வீசியபோதுதான் மைதானத்தில் அனல் பறந்தது. பிபுல் ஷர்மாவுக்கு பிரவீன் குமார் வீசிய ஓவரின் 4வது பந்தை நேராக சிக்சர் அடித்தார் பிபுல் குமார். அடுத்த பந்தை பிரவீன் வேகத்தை குறைத்து வீசினார். அதனால் பிபுல் ஷர்மா திணறியபடி சிங்கிள் எடுத்தார். பேட்டில் பட்ட பந்து கேட்ச் போல உயர கிளம்பியது. இருப்பினும் கேட்ச் ஆகவில்லை. அப்போது பிபுல் குமாரின் பின்புறமாக சென்று பிரவீன்குமார் ஏதேதோ காட்டமாக பேசினார்.

வாய்ச் சண்டை

இதையடுத்து ஓவரின் கடைசி பந்தை வார்னர் எதிர்கொண்டார். வார்னருக்கு சரியாக ஒரு யார்க்கரை வீசினார் பிரவீன்குமார். அதை நேராக அடித்துவிட்டு சிங்கிள் ஓட முயன்றபோது பிரவீன்குமாரே அந்த பந்தை பிடித்து ரன் கிடைக்காமல் செய்தார். மேலும், வார்னரை நோக்கி, "what.., what" என கேட்டபடியே கண்கள் விரிய கோபத்தோடு நடக்க ஆரம்பித்தார் பிரவீன்குமார்.

தினேஷ் கார்த்திக் நாட்டாமை

வார்னர் எதுவுமே பேசாமல் கிரீசில் நின்று கொண்டிருந்தார். பிரவீன்குமாரோ அவரை மிகவும் நெருங்கி சென்றுவிட்டார். அப்போது விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் விரைந்து வந்து இருவருக்கும் நடுவே நுழைந்து பிரவீன்குமாரின் தோளில் கைபோட்டு விலக்கி கூட்டிச் சென்றார்.

பிராவோவ பின்னிட்டாங்க

பிராவோவ பின்னிட்டாங்க

இந்நிலையில், கடைசி 2 ஓவர்களில் 24 ரன்கள் எடுக்க வேண்டியிருந்தது. ஆனால் பிராவோ வீசிய 19வது ஓவரில் 19 ரன்கள் எடுக்கப்பட்டது. இதனால் ஹைதராபாத் அணியின் வெற்றி ஏறத்தாழ உறுதியானது. கடைசி ஓவரில் 5 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது.

பேட்டால் பதிலடி

பேட்டால் பதிலடி

அந்த ஓவரை வீச பிரவீன்குமார் அழைக்கப்பட்டார். முதல் பந்தை வார்னர் எதிர்கொண்டார். பிரவீன்குமாருக்கு பேட்டால் பதிலடி தர வேண்டும் என்று நினைத்த வார்னர், முதல் பந்தையே பிட்சைவிட்டு இறங்கி வந்து ஆப்-சைடில் பவுண்டரியாக மாற்றினார். இதையடுத்து ஆட்டம் டிரா ஆனது. வார்னர் ஆக்ரோஷமாக சத்தம் எழுப்பினார். அடுத்த பந்தையும் பவுண்டரிக்கு விளாசினார் வார்னர்.

வார்னர் ஆக்ரோஷம்

அடுத்தடுத்த பவுண்டரிகளால் பிரவீன்குமார் முகத்தை தொங்க போட்டுக்கொண்டார். வார்னரோ எகிறி குதித்து, தனது நெஞ்சில் கை வைத்து ரசிகர்களை நோக்கி 'செஞ்சிட்டேன் பார்த்தியா' என்பது போல ஆக்ரோஷம் காட்டினார். 19.2 ஓவர்களில் ஹைதராபாத் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் அந்த அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. வார்னர், 58 பந்துகளில் 93 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

Story first published: Saturday, May 28, 2016, 11:29 [IST]
Other articles published on May 28, 2016
English summary
Praveen Kumar has got into trouble with his temper on a few occasions in the SRH, GL match.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X