For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அடப் போங்கப்பா.. டோணி டீமா இது.... கொஞ்சம் கூட போணி ஆகலையே!!

புனே: டோணி டீம் என்று சொல்வதற்கே கொஞ்சம் சிரமமாகத்தான் இருக்கிறது. அந்த அளவுக்கு சொதப்பி வருகிறது டோணி தலைமையிலான ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி. நேற்று நடந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் தோற்றுப் போய் விட்டது புனே. இத்தனைக்கும் தனது முதல் போட்டியில் மும்பையை புரட்டி எடுத்திருந்தது புனே அணி.

அந்தத் தோல்விக்கு நேற்று சரியான முறையில் பழிவாங்கி விட்டது மும்பை இந்தியன்ஸ் அணி. கேப்டன் ரோஹித் சர்மா அபாரமாக ஆடி 85 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றிக்கு கொண்டு சென்றார்.

இப்போட்டியில் எட்டு விக்கெட் வித்தியாசத்தில் புனே அணியை மும்பை இந்தியன்ஸ் அணி வீழ்த்தியது. முதலில் ஆடிய புனே அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது. செளரப் திவாரி அதிகபட்சமாக 57 ரன்களைக் குவித்தார்.

2வது இடத்தில் மும்பை

2வது இடத்தில் மும்பை

இந்த வெற்றியைத் தொடர்ந்து தற்போது மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளிகள் பட்டியலில் 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்த அணி 9 போட்டிகளில் ஆடி 5ல் வென்று, 4ல் தோற்றுள்ளது.

6வது தோல்வியில் புனே

6வது தோல்வியில் புனே

மறுபக்கம் புனே அணிக்கு இது 6வது தோல்வியாகும். இந்த அணி இதுவரை 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

எதிர்பார்ப்பு பொய்க்கிறது

எதிர்பார்ப்பு பொய்க்கிறது

ரசிகர்கள் டோணியின் புனே அணி மீது அதிக எதிர்பார்ப்புகளை வைத்திருந்தனர். ஆனால் புனே அணி தொடர்ந்து அதை ஏமாற்றி வருகிறது. ஆரம்பத்தில் அது அசத்தல் வெற்றியுடன் தொடரைத் தொடங்கியதால் பெரும் நம்பிக்கை நிலவியது.

தொடர்ந்து வெல்லும் குஜராத்

தொடர்ந்து வெல்லும் குஜராத்

ஆனால் அடுத்தடுத்து பல முக்கிய போட்டிகளில் அது தோல்வியுற்று வருவதால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றமடைந்துள்ளனர். மறுபக்கம் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் பலரைக் கொண்ட குஜராத் லயன்ஸ் அணி அட்டகாசமாக ஆடி வெற்றி நடை போட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

அசத்தல் ரெய்னா

அசத்தல் ரெய்னா

ரெய்னா தலைமையிலான குஜராத் அணியில் பிராவோ, மெக்கல்லம், ஸ்மித் போன்ற சிறப்பான வீரர்கள் உள்ளனர். ஆனால் டோணி அணியில் சிறப்பான பவுலர்களும், ஆல்ரவுண்டர்களும் இல்லை என்பது பெரும் பின்னடைவாகும்.

மொத்தத்தில் டோணி முதல் முறையாக தனது ரசிகர்களை ரொம்பவே ஏமாற்றி வருகிறார்!

Story first published: Monday, May 2, 2016, 14:15 [IST]
Other articles published on May 2, 2016
English summary
Leading from the front, skipper Rohit Sharma smashed a match-winning unbeaten 85 off just 60 balls to guide defending champions Mumbai Indians to a comfortable eight-wicket victory over Rising Pune Supergiants in the Maharashtra derby of the Indian Premier League (IPL) here on Sunday.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X