For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்த வருடம் ஐபிஎல் பைனல் ஸ்பெஷலானது ஏன் தெரியுமா?

By Veera Kumar

பெங்களூர்: ஐபிஎல் தொடரில் இருந்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தோல்வியுடன் வெளியேறிவிட்டதால், நடப்பு சீசனில் ஒரு புது அணிதான் கோப்பையை வெல்லப்போவது உறுதியாகிவிட்டது

தற்போது 9வது ஐபிஎல் சீசன் நடைபெற்றுவருகிறது. மொத்தம் 8 அணிகள் இதில் பங்கேற்றுள்ளன. நேற்று நடைபெற்ற 2வது குவாலிபையர் சுற்றில், கொல்கத்தா நைட் ரைடர்சை, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீழ்த்தி, வெள்ளிக்கிழமை நடைபெற உள்ள எலிமினேட்டர் ரவுண்டில் குஜராத் லயன்ஸ் அணியோடு மோத உள்ளது.

இதில் வெற்றி பெறும் அணி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதி போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியோடு மோத வேண்டும்.

கோப்பை வெல்லவில்லை

கோப்பை வெல்லவில்லை

பெங்களூர், குஜராத், சன் ரைசர்ஸ் ஆகிய மூன்று அணிகளுமே இதுவரை ஐபிஎல் கோப்பையை வென்றது கிடையாது.

புது சாதனை

புது சாதனை

வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் போட்டியில் இதில் எந்த அணி வென்று சாம்பியன் ஆனாலும், அது ஐபிஎல் தொடரில் ஒரு புது சாதனைதான்.

மூன்று அணிகள் வரலாறு

மூன்று அணிகள் வரலாறு

ஏனெனில் 2008ல் ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கப்பட்டபோதிலிருந்தே ஆடிவரும் பெங்களூர் அணியும், 2013ல் உருவாக்கப்பட்ட சன் ரைசர்ஸ் ஹைதராபாத் (முன்பு டெக்கான் சார்ஜர்ஸ்) அணியும் கோப்பையை வென்றதே கிடையாது. இவ்வாண்டுதான் உருவாக்கப்பட்ட குஜராத் அணி பற்றி சொல்ல வேண்டியதில்லை.

ரசிகர்கள் ஆவல்

ரசிகர்கள் ஆவல்

எனவே 3ல் எந்த அணி வென்றாலும் ஐபிஎல் தொடரில் ஒரு புது சாம்பியன் கிடைக்கப்போகிறது. அந்த புது சாம்பியன் யார் என்பதை அறிய, ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

Story first published: Thursday, May 26, 2016, 11:02 [IST]
Other articles published on May 26, 2016
English summary
Sunrisers Hyderabad produced a clinical performance to seal their place in the Qualifier 2 as they crushed the hopes of two-time champions Kolkata Knight Riders with a comfortable 22 runs win in the IPL Eliminator in New Delhi on Wednesday.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X