For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

எதுக்குத் தம்பி இம்புட்டுக் கோவம்.. வேண்டாம்ய்யா விட்டுருய்யா... உடம்புக்கு ஆகாதுய்யா!

பெங்களூர்: சில கிரி்க்கெட் வீரர்கள் உள்ளனர். கோபம் வந்து விட்டால் போதும் கையில் கிடைப்பதைத் தூக்கிப் போட்டு துவம்சம் செய்யும் அளவுக்கு கெட்ட கோபக்காரர்களாக உள்ளனர். அவர்களில் கம்பீரும் ஒருவர்.

கோபம் வந்தால் உடனே கொப்பளித்துத் துப்பி விடுவார். இவரும் விராத் கோஹ்லியும் ஒருமுறை மைதானத்தில் வைத்தே மோதிக் கொண்டதை யாரும் மறந்திருக்க முடியாது. நேற்றும் கூட கோஹ்லியின் தலைமையிலான அணிக்கு எதிராக தனது கோபத்தைக் காட்டி கெட்ட பெயரை சம்பாதித்துக் கொண்டார்.

சின்னச்சாமி ஸ்டேடியத்தில்

சின்னச்சாமி ஸ்டேடியத்தில்

கொல்கத்தாவும், பெங்களூரும் நேற்று பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நடந்த போட்டியில் மோதின. இப்போட்டியில் யூசப் பதானின் அட்டகாசமான ஆட்டம் மற்றும் ஆண்டரே ரஸ்ஸலின் அதிரடி ஆட்டத்தால் கொல்கத்தா அணி, கோஹ்லி அணியை வீழ்த்தியது.

டென்ஷன் கம்பீர்

டென்ஷன் கம்பீர்

நேற்றைய போட்டியில் கொல்கத்தா அணி வெற்றியை நோக்கி வேகமாக போய்க் கொண்டிருந்தது. ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பிய கம்பீர் தனது பேடைக் கூட கழட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தார். 19வது ஓவரில் சூர்ய குமார் யாதவ் ஒரு பவுண்டரி அடித்து கொல்கத்தா அணியின் டென்ஷனை முற்றிலுமாக குறைத்தபோதுதான் கம்பீருக்கு சற்றே நிம்மதி வந்தது.

எந்திருச்சு உதைத்தார் பாருங்கள்

சூர்ய குமார் யாதவ் பவுண்டரி அடித்த அதே வேகத்தில் தனது இருக்கையிலிருந்து எழுந்த கம்பீர் அப்படியே திரும்பி சேரை அப்படியே எட்டி உதைத்தார். மேலும் தனது டவலையும் தூக்கி வேகமாக வீசினார்.

கெட்ட வார்த்தை வேற!

கெட்ட வார்த்தை வேற!

கம்பீரின் கோபத்தைப் பார்த்து அருகில் இருந்த வீரர்கள் ஷாக்காகிப் போனார்கள். சக வீரர் பியூஷ் சாவ்லா, கம்பீரின் சேரை தூக்கிக் கொண்டு வந்து திரும்பப் போட்டார். கம்பீரும் அதில் அமர்ந்தார். ஆனால் கோபமாக எதையோ முனுமுனுத்துக் கொண்டிருந்தார் (கெட்ட வார்த்தை போல).

ஏம்ப்பா.. ஏன்!

ஏம்ப்பா.. ஏன்!

அது என்னவோ தெரியலை, என்ன மாயமோ தெரியலை.. கோஹ்லி சம்பந்தப்பட்ட போட்டி என்றாலே கம்பீர் டென்ஷனாகி விடுகிறார். இப்படித்தான் முன்பு நடந்த ஐபிஎல் போட்டியில் இருவரும் சரமாரியாக கெட்ட வார்த்தைகளால் திட்டிக் கொண்டு சண்டை போட்டனர். நேற்றைய போட்டியிலும் கோஹ்லி அணியை கொல்கத்தா வீழ்த்தியதை டென்ஷனோடு கொண்டாடினார் கம்பீர்.

எதுக்குத் தம்பி இம்புட்டுக் கோவம்.. வேண்டாம்ய்யா விட்டுருய்யா...!

Story first published: Tuesday, May 3, 2016, 13:05 [IST]
Other articles published on May 3, 2016
English summary
Kolkata Knight Riders' (KKR) captain Gautam Gambhir does not hide his emotions when he is playing cricket. Be it at the international stage or in domestic or like last night (May 2) in the Indian Premier League 2016 (IPL 9) here at M Chinnaswamy Stadium.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X